பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தொற்று நோய்கள் / ரூபெல்லா (ஜெர்மானிய மணல்வாரி)
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ரூபெல்லா (ஜெர்மானிய மணல்வாரி)

ரூபெல்லா (ஜெர்மானிய மணல்வாரி) நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ரூபெல்லா நோய், ஜெர்மானிய மணல்வாரி என்றும் அழைக்கப்படும். இது ஒரு வைரல் நோய். குழந்தைகளுக்குப் பரவலாக வரும். இது பொதுவாக ஒரு கடுமையற்ற தொற்று நோய். உடல் மண்டலங்களில் சிறு நிலைகுலைவு ஏற்பட்டாலும் இது உயிருக்கு ஆபத்தாக முடியும். பெரியவர்களுக்கு மூட்டு நோயையும் (நிலைத்திராத) உருவாக்கலாம். தோல் சீர்குலைவு போன்ற கடுமையான சிக்கல்கள் மிகவும் அரிதாகும். வளர்ந்து வரும் கருவுக்கு, நச்சுக்கொடியை ஊடுறுவி விளைவிக்கும் தொற்றுநோய் போன்றவற்றை விலக்கி விட்டால் ரூபெல்லா பொதுவாக ஒரு சாதாரண தொற்று நோயே.

ஒட்டுவாரொட்டியான ரூபெல்லா (பிறவி நோய் அல்ல), நோயாளியின் மேல் சுவாசப் பாதை கசிவுகளின் மூலம் பரவுகிறது. சிறுநீர், மலம், தோலின் மேலும் இந்த வைரஸ் காணப்படும்.

நோயறிகுறிகள்

நோயரும்புகாலம் 2-3 வாரங்கள் ஆகும். அறிகுறிகளில் அடங்குவன:

 • சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள்
 • உலர்ந்த சிவப்பு-இளஞ்சிவப்பு கொப்புளம்
 • நிணநீர்ச்சுரப்பி வீக்கம்
 • அதிகமான காய்ச்சல்

காரணங்கள்

இந்நோய் ரூபெல்லா வைரசால் (தோகா வைரஸ்) உண்டாகிறது. நோயாளியின் சுவாசக் கசிவுகள் மூலம் பிறருக்கு இது காற்றில் பரவுகிறது.

நோய்கண்டறிதல்

இரத்தச்சோதனை:

கீழ்வரும் எதிர்பொருட்களுக்காக இரத்தம் சோதிக்கப்படுகிறது:

 • புது ரூபெல்லா தொற்றுவுக்கு IgM எதிர்பொருள் காணப்படும்.
 • கடந்த காலத்தில் ரூபெல்லா தொற்று இருந்திருந்தாலோ அல்லது அதற்கெதிரான தடுப்புமருந்து எடுத்திருந்தாலும்  IgG எதிர்பொருள் காணப்படும்.
 • இந்த இரு வகையான எதிர்பொருட்களும் இல்லை என்றால், ரூபெல்லா தொற்று இல்லை என்பதும் அதற்கு எதிரான தடுப்பு மருந்தும் இல்லை என்பதும் பெறப்படும்.

நோய் மேலாண்மை

அறிகுறிகளைக் கொண்டே பொதுவாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலியையும் காய்ச்சலையும் கட்டுப்படுத்த பெரும்பாலும் இபுபுரூபன்/பாரசெட்டமால் அளிக்கப்படும். நோயாளிகள் அதிகதிகமான நீராகாரங்களை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

சிக்கல்கள்

இன்னும் பிறக்காத குழந்தைகளுக்குப் பிறவி ரூபெல்லா நோய்க்குறியால் (CRS) ஏற்படும் பிரச்சினைகள்:

கண்புரையும் பிற கண் குறைபாடுகளும்

 • காதுகேளாமை
 • பிறவி இதய நோய்கள் (தகுந்த முறையில் இதயம் வளர்ச்சி பெறாமை)
 • மூளை சரியாக வளராததால், உடலோடு ஒப்பிடும்போது சிறிய அளவு தலை
 • இயல்பான வளர்ச்சி விகிதத்தை விட குறைவு
 • மூளை, கல்லீரல், நுரையீரல், எலும்பு மச்சை சேதம்

தடுப்புமுறை

தட்டம்மை, பொன்னுக்குவீங்கி, ரூபெல்லா வுக்கான (MMR) தடுப்பு மருந்து எடுக்க வேண்டும். தட்டம்மைத் தடுப்பூசி 12-15 மாதங்களில் முதல் வேளையாகவும், 4 வாரம் கழித்து இரண்டாவது வேளையாகவும் போட்டுக்கொள்ள வேண்டும் (பொதுவாக 4-6 வயது வரை)

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.03125
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top