பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வட்டப்புழு நோய்த்தொற்று

வட்டப்புழு நோய்த்தொற்று பற்றிய குறிப்புகள்

முன்னுரை

இது மனிதர்களில் நோயை ஏற்படுத்தும் ஒருவகை நெமற்றோடாப் புழு ஆகும். இது வெளிறிய மஞ்சள் நிறமான புழு ஆகும். உலகளாவிய ரீதியில் இது காணப்பட்டாலும் வறிய சமூகங்களில் மிக அதிகளவில் காணப்படுகிறது.

நிறைவுடலிகள் குடலினுள் காணப்படும். இவை மலத்துடன் முட்டைகளை வெளியேற்றும். இவை 2-4 மாதங்களில் மண்ணில் தொற்றும் பருவமாக விருத்தி அடையும். தொற்றுக்கு உள்ளான மலத்தினால் மாசுபடுத்தப்பட்ட உணவானது/ நீர் உள்ளெடுக்கப்பட்டு பின்னர் கிருமி குடலை அடையும். சில கிருமிகள் நுரையீரலை அடையும்.

நோயானது பொதுவாக அறிகுறிகள் அற்றது. எனினும் மிகவும் அதிக கிருமித்தொற்று ஆனது வாந்தி, குமட்டல், வயிற்றில் அசௌகரியம், பசி இன்மை ஆகியவற்றை ஏற்படுத்தலாம். இவ் அங்கிகள் பித்தப்பைக் கானில் அழற்சி, அடைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.

நுரையீரலிலுள்ள குடம்பிகள் நுரையீரல்களில் இயோசினோபில் கல அழற்சியை ஏற்படுத்தலாம். இது சிறுவர்களில் போசாக்குக் குறைவு, குருதிச்சோகை ஆகியவற்றை ஏற்படுத்தும்.

இந்தக் கிருமியானது நுரையீரலில் காணப்படுவதால் இரவில் மெல்லிய காய்ச்சல், உலர்ந்த இருமல், சுவாசிப்பதில் சிரமம் ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம். இவை ஆஸ்துமா நோயின் அறிகுறிகளை ஒத்திருக்கும். இந்நோயானது சிறுவர்களில் போசணைக் குறைபாட்டை ஏற்படுத்தி வளர்ச்சிப் பாதிப்பையும் ஏற்படுத்தலாம். இதனால் இது தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

சிகிச்சை

மெபெண்டசோல், அல்பெண்டசோல் ஆகிய மருந்துகள் பொதுவான வட்டப்புழு நோய்த்தொற்றுக்கு வழங்கப்படும். இவற்றுடன் மலசலகூடப் பாவனை, உணவுத் தயாரிப்பு, உணவுண்ணல் ஆகியவற்றுக்கு முன்னும் கைகளை நன்கு கழுவுதல், நகங்களை வெட்டித் துப்புரவாக வைத்திருத்தல் ஆகியன மூலமும் சிறுவர்களை அழுக்கான மலத்தால் மாசாக்கப்பட்ட பகுதிகளில் விளையாட அனுமதிக்காமை, சிற்ந்த சுகாதாரப் பழக்க வழக்கங்கள் ஆகியன மூலம் நோயானது கட்டுப்படுத்தப்படும்.

ஆதாரம் : ஆரோக்கிய தகவல் தளம்

3.02173913043
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top