பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தலை அல்லது மண்டை / தலைவலியில் இருந்து விடுபட குறிப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தலைவலியில் இருந்து விடுபட குறிப்புகள்

விரைவில் தலைவலியை போக்க சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தலைவலி

தலைவலி வந்துவிட்டால் எந்த வேலையும் சரியாக ஓடாது. மற்றும் உடல்நிலையையும் மிக சோர்வாக உணர வைக்கும் இந்த தலைவலி.

பெண்கள் தலைவலி ஏற்பட்டால் உடனே வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வார்கள், ஆண்கள் புகைப்பிடித்துவிட்டு, ஓர் டீ குடித்துவிட்டு மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

என்ன செய்தாலும் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை செய்யும் குணாதிசயம் கொண்டது இந்த தலைவலி.

தீர்வு

அக்குபஞ்சர்

பல வருடங்களாக தலைவலியில் இருந்து எளிதில் விடுபட அக்குபஞ்சர் முறையை மக்கள் பின்பற்றி வருகிறார்கள்.

தண்ணீர்

நீரை கொஞ்சம், கொஞ்சமாக சிப் செய்து பருகினால், உங்கள் தலை வலி மெல்ல குறையும். உங்கள் உடலில் நீரின் அளவு அதிகரிக்கும் போது, தலைவலி மெதுவாக குறையும் என கூறப்படுகிறது.

கிராம்பு

சூடு செய்த கிராம்பை கைக்குட்டையில் மடித்து, அதை மூச்சினால் உள்ளிழுத்தால், ஒரு நிமிடத்தில் தலைவலி குறைந்துவிடும்.

துளசி டீ

டீ, ப்ளாக் காபியை விட, விரைவில் தலைவலியை போக்க கூடிய திறன் கொண்டது துளசி டீ. தலை வலிக்கான ஓர் சிறந்த வீட்டு நிவாரணியாக துளசி டீ கருதப்படுகிறது.

உப்பும், ஆப்பிளும்

அடுத்த முறை உங்களுக்கு தலைவலி ஏற்பட்டால், இந்த எளிய வீட்டு நிவாரண முறையை பின்பற்றி பாருங்கள். ஆப்பிளை வெறுமென மென்று சாப்பிடாமல், அறுத்த ஆப்பிளில் அதன் மேல் உப்பு கொஞ்சமாக தூவி சாப்பிட்டால் தலைவலி குறையும்.

பெப்பர் புதினா டீ

தலைவலியை போக்க உதவும் மற்றுமொரு சிறந்த டீ பெப்பர் புதினா டீ.ப்ளாக் டீயில் ஓரிரு புதினா இலைகளை சேர்த்து பருகினால் தலைவலி ஒரு நிமிடத்தில் குறைந்துவிடும். சிலர் ப்ளாக் டீயில் பால் சேர்த்து பருகுவார்கள். ஆனால், அவ்வாறு பால் சேர்ப்பதை தவிர்த்துவிடவும்.

இஞ்சி

இளசான ஓர் சிறு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள். இவ்வாறு மெல்லுவதால் ஒரு நிமிடத்தில் உங்கள் தலைவலி குறைய ஆரம்பித்துவிடும். இது, தலைவலியில் இருந்து விரைவாக குணமடைய உதவும் சிறந்த வீட்டு நிவாரண முறையாகும்.

மகிழ்ச்சியான மனநிலை

சிலருக்கு இது வியப்பாக இருக்கும். ஆனால், நீங்கள் கண்டதை நினைத்து மனதை குழப்பிக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருந்தாலே உங்களது தலைவலி ஓர் நிமிடத்திற்குள் குறைந்துவிடும்.

ஆதாரம்: http://tamil.boldsky.com

Filed under:
3.02830188679
ரஞ்சித் Aug 13, 2019 08:13 PM

மிகவும் நலமானது

Umamaheswari Jan 27, 2019 07:59 AM

It's all very useful information.
Congratulations.. Keep it up.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top