பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தலை அல்லது மண்டை / ஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சை முறை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சை முறை

ஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சை முறைகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

மருந்துகள்

இது போன்று ஒற்றைத் தலைவலி அல்லது பொதுவான தலைவலி அடிக்கடி வரும் போது, டாக்டர்களை அணுகித்தான் மருந்துக்களை சாப்பிட வேண்டும். தங்களுக்கு தெரிந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும் அல்லது தலைவலிக்கு மருந்துக் கடைகளில் தரும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும் முறையானது அல்ல.

அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும்

ஒற்றை தலைவலியிலிருந்து உடனே விடுபட மருந்து மாத்திரைகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையே சிறந்தது. நோயின் தன்மை, நோயின் தீவிரம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு உடனடி சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு சிகிச்சையளிக்க வேண்டும். நரம்பியல் நிபுணரை ஆலோசிப்பது நல்லது.

சிகிச்சை

· நீங்கள் ஓற்றைத் தலைவலி நோயாளியானால், அதைத் தூண்டும் காரணிகளை அனுபவத்தின் மூலம் கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் நோய் தோன்றுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

· தலைவலி வந்துவிட்டால் சப்தமற்ற அமைதியான இடத்தில் ஆறுதல் எடுங்கள். ஒளி குறைவான அல்லது இருண்ட அறை உசிதமானது.

· முடியுமானால் சற்று நேரம் தூங்குங்கள்.

· கடுமையான தலைவலியானால் டிஸ்பிரின் போன்ற கரையக் கூடிய அஸ்பிரின் மாத்திரைகளில் இரண்டைக் கரைத்துக் குடியுங்கள். சிலர் இபூபுருவன் 400 மிகி மாத்திரை ஒன்றை உட்கொள்வதுண்டு.

· வாந்தியும் கலந்திருந்தால் டொம்பெரிடோன் 10மிகி மாத்திரைகளில் இரண்டு அல்லது புரொமெதசீன் 25மிகி மாத்திரையில் ஒன்று விழுங்கலாம்.

· மிக அடிக்கடி தலைவலி வருவதாயிருந்தால் அதைத் தடுப்பதற்கு சில மாதங்களுக்கு தினசரி தடுப்பு மாத்திரைகள் உண்ண நேரலாம். அது மருத்துவ ஆலோசனையுடன் அவரது வழிகாட்டலில் மட்டும் செய்ய வேண்டியதாகும்.

இந்த மாதிரியான தலைவலியை குறைக்க பல வழிகள். ஒன்று மாத்திரை எடுப்பது, மற்றொன்று உணவுகளின் மூலம் சரிசெய்வது. சொல்லப்போனால், மாத்திரைகளை விட உணவுகள் தான் எப்போதும் சிறந்தது.

எனவே இந்த தலைவலியை குறைக்கும் உணவுகளை சாப்பிட்டு, பின் சிறிது நேரம் ஓய்வான நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், தலைவலியை சரிசெய்துவிடலாம். இப்போது அந்த ஒற்றைத் தலைவலியை போக்க எந்த உணவுகள் உதவுகிறது

கீரைகள் :

கீரைகளில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்து கடுமையான ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தும் தன்மையுடையது. அதுமட்டுமின்றி இந்த சத்துக்கள் நவதானியங்கள், கடல் உணவுகள் போன்றவற்றிலும் அதிகம் நிறைந்துள்ளது.

மீன்:

கடல் உணவுகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒற்றைத் தலைவலியால் உடலினுள் ஏற்படும் உள்காயங்களை குணப்படுத்தும்.

பால் :

பாலிலும் தலைவலியை குறைக்கும் தன்மை உள்ளது. அதிலும் பாலில் உள்ள வைட்டமின் பி என்னும் ரிபோஃப்ளேவின், உயிரணுவின் ஆற்றலை அதிகரிக்கும். உயிரணுவின் ஆற்றலானது குறைவதால் தான் ஒற்றை தலைவலியே உண்டாகிறது.

ஆளி விதை:

இந்த சிறிய விதையில் ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்தும் சத்துக்களான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.

காபி:

உண்மையில் தலை வலிக்கும் போது ஒரு கப் காபி குடித்தால், தலைவலியானது குணமாகிவிடும். அதிலும் குறைவான அளவில் மட்டும் காபியை குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் என்னும் பொருள் தலைவலியைக் கட்டுப்படுத்தும்.

ரெட் ஒயின்:

தைரமின் என்னும் ஆன்டி-ஆசிட் ஒயின் மற்றும் பீரில் அதிகம் உள்ளது. எனவே ஒரு டம்ளர் ரெட் ஒயின் அல்லது பீர் குடித்தால், கடுமையான ஒற்றை தலைவலியை சரிசெய்ய முடியும்.

தினை (millet):

முழு தானியங்களில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே முழு தானியங்கள் மற்றும் தினையை சாப்பிடுவது நல்லது.

ப்ராக்கோலி :

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான ப்ராக்கோலியில் மக்னீசியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே ப்ராக்கோலியை வேக வைத்து, அத்துடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பை சேர்த்து சாப்பிட வேண்டும்.

இஞ்சி :

ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படும் இஞ்சியானது தலை வலியைக் குணப்படுத்தும் தன்மையுடையது. எனவே தலை வலிக்கும் போது, உண்ணும் உணவில் சிறிது இஞ்சியை சேர்த்து கொள்ளுதல் நல்லது.

ஆதாரம் : தமிழ் மருத்துவம்

3.07575757576
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top