பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தலை அல்லது மண்டை / தலைவலி - காரணங்கள் மற்றும் ஆலோசனைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தலைவலி - காரணங்கள் மற்றும் ஆலோசனைகள்

தலைவலிக்கான காரணங்கள் மற்றும் அதை தடுக்க சில அறிவுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தலைவலி உள்ளவர்கள் செய்ய வேண்டியவை

* நேரத்தை சரியாக திட்டமிடவும். உறங்கவும், விழிக்கவும் நேரத்தை நிர்ணயிக்கவும்.

* முறையான சமச்சீர் உணவை உட்கொள்ளவும்

* ஒழுங்கான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும்.

* தலைவலியைத் தூண்டும் காரணிகளை அடையாளம் கண்டு தவிர்க்கவும்.

* வலி ஏற்படும் சந்தர்ப்பம் மற்றும் சாத்தியமான தூண்டு காரணிகளைக் குறித்து வைக்கவும்

* தூண்டு காரணிகளைக் கட்டுப்படுத்தினால், அதனால் மருந்தின் அளவு குறையும்.

* தரப்படும் மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ளவும்.

* எரிச்சலூட்டும் உரத்த இரைச்சலைவிட்டு விலகி இருக்கவும்.

* முடிந்தவரை வெயில்படாமல் ஒதுங்கி இருக்கவும்.

* வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.

தலைவலியின் காரணங்கள்

வலிப்பும் ஒற்றைத் தலைவலியும் மூளையில் திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கமே. ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு வலிப்பும் வரலாம்.

டிரைஜெமினல் நியூரால்ஜியா

40 வயதிற்குப் பிறகே பெரும்பாலும் தாக்கக் கூடியது. ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் வர வாய்ப்பு உண்டு. மின் அதிர்வு போல வலி இருக்கும். கண்ணைச் சுற்றியுள்ள பகுதியில் ஒரு பக்கமாக வலிக்கும். ஒற்றைத் தலைவலியைப் போல மெல்லுதல், பேசுதல், விழுங்குதல், குளிர்நீரில் முகம் கழுவுதல், பல் துலக்குதல் போன்ற எது வேண்டுமானாலும் வலியைத் தூண்டலாம்.

கண் தொடர்பான நோய்கள்

ஒளி விலகல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல், பார்வை குறைபாடு கண்ணில் காயம் ஆகியவற்றால் கண்ணில் மட்டுமின்றி தலைவலியும் ஏற்படலாம்.

பக்கவாதம்

இரத்தக் கொதிப்பால் மூளையின் ரத்தக் குழாய் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் தமனி வெடித்துவிட வாய்ப்பு உள்ளது. இதனால், ரத்தக் கசிவு ஏற்படலாம். அப்போது மூளை வீங்கத் தொடங்கும். மூளை வீங்கும்போது மூளையின் உறை இழுபடும். இதனால் கடுமையான தலைவலி ஏற்படும்.

தலைச்சுற்றல்

இது காதின் மையப்பகுதியின் நரம்புகளில் ஏற்படும் ஒழுங்கின்மையால் ஏற்படும் நோய். நோயாளிகளுக்குக் கழுத்து மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். தலைச்சுற்றலுடன் வாந்தியும் இருக்கும். உளவியல் ரீதியான பிரச்சனைகள்

மனச்சோர்வு, பதட்டம், தற்கொலை செய்யும் எண்ணம் ஆகியவை ஒற்றைத் தலைவலி நோயாளி களுக்கு அவ்வப்போது வந்து போகும்.

சைனஸ் தலைவலி

கண்களுக்கு கீழே உள்ள எலும்பறைகளில் காற்றுக்குப் பதிலாக நீர் கோர்த்துக் கொண்டு தலை வலி ஏற்படும்.

பல் நோய்கள்

பல்லில் அடிபட்டாலும், நோய்த் தொற்று ஏற்பட்டாலும், தலைவலி ஏற்படலாம். குளிர்ந்த அல்லது சூடான பானம், பல்லில் படும்போது வலி தீவிரமாகும். மிகக் கடுமையான தலைவலியை ஏற்படுத்தும்.

தைராய்டு குறைவு

தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறையும்போது தலைவலி வரலாம். சரியான ஹார்மோன் சிகிச்சை அளித்த பிறகு வலி போய்விடும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. குளிர் ஒத்தடம் எவ்வாறு வினை புரிகிறது ?

குளிர் ஒத்தடம் வீக்கத்தையும் வலியையும் குறைக்கிறது.

2: தலைவலிக்கு வலி நிவாரணி அளிக்கலாமா?

கூடாது. ஏனெனில் அவை அபாயகரமான தலைக் காயத்தின் அறிகுறிகளை மறைத்து விடக்கூடும்.

3. மூளையதிர்ச்சி என்றால் என்ன?

தலையில் அடிபடும்போது மண்டையோட்டிற்குள் இருக்கும் மூளை குலுங்கக் கூடும். இதுவே மூளையதிர்ச்சி எனப்படும். சிறிது நேரம் நுனைவிழக்க நேரலாம் (சில வினாடிகளில் இருந்து சில நிமிடங்கள் வரை). பெரும்பாலானோர் மு/ற்றிலுமாக மீண்டு விடுவர். ஆனால் ஒருசில சமயங்களில் இந்நிலை கவலைக்கிடமாக மாறும். யாருக்காவது மூளையதிர்ச்சி ஏற்பட்டால் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவை அழைக்க வேண்டும்.

4. மூளையதிர்ச்சியின் அறிகுறிகள் யாவை?

மூளை அதிர்ச்சியின் அறிகுறிகளாவன:

  • மயக்கம்
  • தலைலவலி
  • மனக்குழப்பம்
  • நோயுற்ற உணர்வு
  • கண்மயக்கம்
  • என்ன நடந்தது என்பதை மறந்துபோதல்

ஆதாரம் : தமிழ் மருத்துவம்

2.75675675676
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
Rajesh Natarajan Nov 18, 2019 01:38 PM

தலை வலிக்கு பல காரணங்கள் உள்ளது. ஹைப்பர் டென்ஷன் மலச்சிக்கல் சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமை இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் குளித்தபின்பு தலையை சரியாக துவட்டாமல் நீர் கோர்த்துக் கொள்ளுதல் தூசி புகை மற்றும் அதிகமாக சத்தமாக பேசுதல் காது கோளாறுகள் கண் பார்வைக் கோளாறுகள் இதுபோன்று இன்னும் பல காரணங்கள் உள்ளன. இதில் மருத்துவரை விட நமக்கு நாமே நம் தலைவலியை சரி செய்து கொள்ள வேண்டியது முக்கியம் ஏனென்றால் உங்களுடைய வாழ்க்கை நடைமுறையில் என்னென்ன தவறுகள் உள்ளன என்பது உங்களுக்குத்தான் தெரியும். சிலருக்கு தூசி மூக்கில் ஏறினாலே தலைவலி வந்துவிடுகிறது. அப்போது அவர்கள் முகத்தில் மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் ஷார்ட் போல் போட்டுக்கொண்டு இது என்ன சாப்பிட்டோம் தலைவலி வந்ததா இல்லையா என்று ஒவ்வொரு நாளும் உண்ட உணவின் பெயர்களை எழுதி தலைவலி வரும்போது இதில் என்ன பொருள் நாள் தலைவலி வந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இதுபோன்று நமக்கு நாமே கண்டுபிடித்தால் சுலபம். இன்னும் நம் வாழ்க்கை முறையை எளிமையாக்கி அவசர உணவுகள் கடைகளில் விற்கும் கண்ட உணவுகளை சாப்பிடாமல் சத்தான வீட்டில் செய்யப்பட்ட உணவுகளையே உண்டு, அதிகாலை யோகாசனம், நடைப்பயிற்சி மாலையில் நடைப்பயிற்சி என்று மனதை நன்றாக வைத்துக்கொண்டு இந்தப் பயிற்சிகளை செய்து வந்தால் தலைவலி வருவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு. இதற்குமேலும் அக்குபஞ்சரில் அக்குபிரஷரில் தலைவலியைத் தீர்க்கும் புள்ளிகள் இருக்கின்றன. அந்த புள்ளிகளை தெரிந்து வைத்துக் கொண்டு அந்த புள்ளிகளை பிரஷர் கொடுத்தால் வலிகள் குறையும். அக்குபஞ்சரில் பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் நடுவில் உள்ள எல்லைப் போர் என்ற ஒரு புள்ளி தலைவலியை குறைக்கின்றது. அதுபோல் பெருக்கம் சிக்ஸ் என்ற ஒரு புள்ளியும் தலைவலியை குறைக்கின்றது. தூக்கம் வர வைத்து விடுகின்றது. யோகாசனம் தொடர்ந்து செய்து வந்தாலும் தலைவலி சிறிது சிறிதாக குறைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும் நன்றி வணக்கம்

பர்ஸானா Jun 28, 2019 05:46 PM

நான் 7 நாளாக புகைத்தலை விட்டு அன்றையில் இருந்து இன்னை வரைக்கும் தலைவலி யாக இருக்கிறது அதற்கு என்ன செய்வது

Suresh Nov 26, 2018 08:02 PM

எனக்கு கடந்த ஒரு மாதமாக தலையை கீழ் நேக்கி குனிந்து பார்க்கும் போது ஒரு பக்கமாக தலை வலி இருக்கிறது இது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்குமே என்று பயமாக இருக்கிறது இதற்கு ஒரு நல்ல ஆலோசனை சொல்லவும்

vijayalakshmi Mar 14, 2018 01:00 PM

எனக்கு அடிக்கடி தலை வலி வருது , கண்ணில் அடிக்கடி நீர் லேசாக வடிகர்து .
அடிக்கடி தலைவலிக்கு மாத்திரை வாங்கீ சாப்புடுவதால் ஏதாவது பிரச்னை வருமா ? தலைவலி வராமல் தடுக்க என்னதான் தீர்வு !

பாலச்சந்தர் Sep 14, 2017 03:11 PM

எனக்கு தலைவலி மற்றும் படுத்தால் தலைசுற்றல் ஏற்படுகிறது இதற்கு காரணம் என்ன?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top