பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆக்னி (பருக்கள்)

ஆக்னி வல்காரிசின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் எளிய தீர்வுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆக்னி வல்காரிஸ் என்பது ஒரு தோலில் ஏற்படும் கோளாறு ஆகும்.

அறிகுறிகள்

 • வளரும் பருவத்தில் ஏற்படும். 20 மற்றும் 30 வயதுகளில் உள்ளோற்கு எற்படலாம்.
 • திறந்த மற்றும் மூடிய நிலையில் தோலில் உள்ள கொப்பளங்கள், சீழ்பைகள், தோலிலிருந்து மேலெழும்பிக் காணப்படும் கொப்பளங்கள், தோலில் ஏற்படும் சிவப்பு நிற பகுதிகள், முகம், மார்பு மற்றும் முதுகுபுறத்தில் அதிகமாக காணப்படுதல்
 • பருக்களால் ஏற்படும் காயங்கள்.
 • நாளடைவில் ஏற்படும் வடுக்கள்.
 • பெண்களில் மாதவிடாய் காலத்திற்கு முன்பு நிலை மோசமடைதல்.

ஆண்களில் பருக்கள் மிக மோசமாக ஏற்படும். பெண்களைவிட சற்றே பிந்தி எற்படும்.

காரணங்கள்

 • பருக்கள் தோன்றுவதற்கான உண்மையான காரணங்கள் கண்டறியப்படவில்லை. சில நபர்களில் ஆன்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் அறிகுறிகளை தூண்டும்
 • தோலில் ரோமக்கால்களை சுற்றி கெராடின் என்று சொல்லப்படும் புரதப்பொருள் அடைவதினால் கருந் தலைகள் (ப்ளாக்ஹெட்ஸ்) மற்றும் வெள்ளை நிற தலைகள் (வைட்ஹெட்ஸ்) எனப்படும் மிகச்சிறிய முள் போன்ற அமைப்புகள் தோன்றுகின்றன. அடைபட்டபோதும், செபேசியஸ் சுரப்பிகள் சீபம் எனப்படும் எண்ணைப் பொருளைச் சுரக்கின்றன. அப்படி அடைபட்ட ரோமக்கால் உறையில் சுரக்கும் சீபம் எனும் எண்ணைப் பொருள் அதிகளவு சேரும்போது வீக்கம் அடைகிறது. வீக்கம் அதிகரிக்க ரோமக்கால் உறை வெடிக்கிறது. அப்போது, தோலின் மேல் சாதாரணமாக காணப்படும் பாக்டீரியாக்கள் புகுந்து நோய் தொற்றினை (பருக்களை) ஏற்படுத்துகிறது. பின் இவை பெரிதாக வளர்ந்து கட்டிகளை ஏற்படுத்துகின்றன.
 • எரிச்சலை ஏற்படுத்தும் கிரீம்கள் மற்றும் எண்ணை
 • உட்கொள்ளும் சில மருந்துகள்.
 • தோலில் எற்படும் உராய்வு (உ-ம் வாகனம் ஓட்டும்போது அணியும் ஹெல்மெட் மற்றும் தொலைபேசிகள் உபயோகத்தின் போது ஏற்படுவது)

எளிய தீர்வுகள்

 • பருக்களினால் ஏற்படும் காயத்தில் கைகளை வைத்து தொடுவதைத் தவிர்க்கவும்
 • முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
 • முகத்தை அழகு படுத்த பயன்படுத்தப்படும் அழகுசாதன பொருட்களைப் பயன்படுத்தும்போது கவனம்தேவை.
 • சில நேரங்களில் சில வகை உணவுவகைகள் பருக்களை அதிகப்படுத்தும். அவற்றை தவிர்க்கவும்
3.17105263158
செல்வன் Mar 04, 2017 12:35 AM

வணக்கம் ,சார் எனக்கு7 கடந்த வருடமாக தோல் நோயால் பாதிக்கபட்டு ௳ள்ளேன் எனக்கு கால் முட்டுக்கு கீழ் பகுதியில் முடிகளின் அடியில் பருக்கள் வருகின்றன அரிப்பு நமைச்சல் இருக்கிறது தற்போது அதிகமாக எல்லா இடங்களிலும் பரவுகறது இது என்ன நோய்???

vignesh May 13, 2016 02:41 PM

முகத்தில் ஏற்படும் சிறு சிறு அதிகமான பருக்களை நீக்க கடலை மாவுடன் சம அளவு தயிர் சேர்த்து இரவு தூங்கும் முன்பு நன்றாக கல்கி முகத்தில் பூசினால் போகுமாம். மேலும் சற்று பெரிய அளவிலான பருக்களை நீக்க பெருங்காய பொடியுடன் சிறிது நீர் சேர்த்து பரு உள்ள இடத்தில் மட்டும் தடவினால் போகுமாம் . ஒரே நாள்லில் பலன் கிடைக்காது . ஒரு வாரத்திற்கு போட்டால் முகம் பளபளவென இருக்குமாம் .

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top