பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தோல் / தோலில் நிறம் மாற்றம் ஏற்படுதல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தோலில் நிறம் மாற்றம் ஏற்படுதல்

இத்தலைப்பில் தோலின் நிறம் குறையும் மூன்று முக்கிய நோய் வகைகள் பற்றி விளக்கியுள்ளனர்.

தோலின் நிறம் குறையும் முக்கிய நோய் வகைகள் யாவன?

மூன்று முக்கியமான தோல் நிறம் குறையும் நோய் வகைகள் உள்ளன.

  • விட்டில்லிகோ
  • போஸ்ட் இன்பிளமேடரி ஹை‎போபிக்மெண்டேஷன் ( காயத்திற்குப்பின் தோலின் நிறத்தில் ஏற்படும் நிறக்குறைவு) மற்றும்
  • அல்பினிசம்

விட்டில்லிகோ என்பது பாதிக்கப்பபட்ட தோலின் நிறம், மற்ற பகுதியைவிட குறைவாக/ மாறுபட்டு/ வெளிர்தது காணப்படுதலாகும். தோலில் உள்ள மெலனோசைட் குறைதலே இதற்கு காரணம்.

விட்டில்லிகோ என்றால் என்ன?

விட்டில்லிகோ, நம் உடலில் உள்ள நிறமூட்டும் செல்களை அழிக்கும் நோய் அல்லது செல்களை செயல்பட முடியாத நிலைக்கு கொன்டுசெல்லும். இதனால் தோலின் நிறத்தை ஏற்படுத்தும் பொருளின் அளவு குறைகிறது. இதனை டிபிக்மெண்டேஷன் என்பர். இதனால் தோலில் பால் வெள்ளை நிறத்தில் புள்ளிகள் ஏற்படுகிறது.

லியுகோடெர்மா என்றால் என்ன?

லியுகோடெர்மா என்பது விட்டில்லிகோ என்பதின் மறு பெயர் ஆகும். 'லியுகோ' என்றால் வெள்ளை நிறம் என்பது, மற்றும் 'டெர்மா' என்பது தோலினை குறிக்கும் சொல்லாகும்.

விட்டில்லிகோ ஏற்படக் காரணங்கள் யாவன?

  • தோலிலுள்ள மெலெனோசைடுகள் சேதமடைவதினால் அல்லது இறப்பதின் விளைவாக விட்டில்லிகோ ஏற்படுகிறது.
  • நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையானது மெலெனின் எனும் நிறத்தை கொடுக்கும் பொருளினை ஒரு வேற்றுப்பொருள் என இனம் கண்டு அழித்துவிடுவதே இதற்கு காரணமாகும்.
  • இயற்க்கைக்கு மாறாக செயல்படும் நரம்பு செல்கள் நச்சுப் பொருட்களை உண்டுபண்ணும். இவை மெலெனோசைட்டுகளை சேதப்படுத்தும்
  • மெலேனோசைட்டுகள் தானாகவே அழித்துக்கொள்ளும் தன்மை

போஸ்ட் இன்பளமேட்டரி ஹைபோபிக்மெண்டேஷன் என்பது சிலவகை காயங்கள் (உதாரணம் தீக்காயம்) ஏற்பட்டு ஆறின பின்னர் அந்த பகுதியில் ஏற்படும் தோலின்  நிறம் மாற்றம் ஆகும். நிறம் வெளறிய தோல் பகுதியில் தானாகவே பழைய நிறம் சில நேரங்களில் ஏற்படகூடும்.

அல்பினிசம் என்பது ஒரு அரிதான மற்றும் உடற்குரோமோசோம்கள் மூலம் சந்ததிகளுக்கு ஏற்படக்கூடிய ஒரு வகை தோல் நோய். அல்பினிசத்தில், தோலில் உள்ள மெலெனோசைட் எனப்படும் செல்கள் இருக்கும். ஆனால் அவை மெலெனின்  எனப்படும் வண்ணச்சுரப்பினை சுரப்பதில்லை ( எனவே உடல் முழுவதும் சிவப்பு கலந்த பால் போன்ற வெள்ளை நிறத்தோல் காணப்படும்).
மேற்கண்ட மூன்று முக்கிய தோல் வெளிர்தல் வகைகளை  தவிர்த்து, இன்னும் ஒரு பொதுவான தோல் நிறம் குறையும் நோய்  - பிட்டிரியாஸிஸ். இதிலும் தோலின் நிறம் வெளிர்ந்து காணப்படும்.

3.06593406593
Anonymous Dec 17, 2019 01:00 AM

கறிவேப்பிலை மட்டும் சாறு குடிக்கலாமா

babu9789644002 Dec 23, 2017 08:39 PM

“சின்ன வைத்தியம் ஒன்று சொல்கிறேன் சீரியஸாக எடுத்துக் கொள்வாயா?” என்று கேட்டார் சித்த வைத்தியர் .

“சீரியஸான வைத்தியங்களே என்னை சின்னப்படுத்திவிட்டபின், சின்ன வைத்தியம் என்னை என்ன செய்துவிடும்? சொல்லுங்கள் செய்கிறேன் ” என்றாள்.

“காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவா” என்றார்.

“ப் பூ …. இவ்வளவுதானா? ” என்றாள்.

“நிறைய நீர் குடி. உணவைக் குறைத்து பழங்கள் பல சாப்பிடு” என்றார்.

“பத்தியம் ஏதேனும் உண்டா?” என்றாள்

“சொல்ல மறந்துவிட்டேன். வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது ” என்றார்.

சனியனை விட்டு ஒழித்ததால் பிணியிலிருந்து விடுதலை பெற்றாள் எங்கள் குலமகள்.

“உலகத்திற்கு இதைச் சொல்லவேண்டும் மாமா ” என்றாள்.

“இணைய தளத்தில் பரிமாரக் காத்திருக்கிறார்கள் இனிய நண்பர்கள், உன்னுடைய போன் நம்பர் கொடுக்கத் தயாரா? ” என்றேன்.

DHANAM Mar 28, 2016 11:22 AM

என்ன மருந்து

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top