பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தோல் புடைப்பு

தோல் புடைப்பு நோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இது, முள்ளுரு வளர்ச்சி, கரடுதட்டல் எனப் பலவகையாக அழைக்கப்படும் தோல் கோளாறு. கெராட்டின் என்ற தோல் புரதம், மயிர் நுண்ணறைகளில் கடினமான கரடாகத் திரள்கிறது. தோல்புடைப்பு ஒரு தன்னினக்கீற்று (autosome) மரபியல் நோயாகும். இதனால் கரடுமுரடான, சற்றே சிவந்த புடைப்புகள் தோலில் உண்டாகும். புயத்தின் பின்னும் வெளிப்புறங்களிலும் (முன்கையும் பாதிப்படையலாம்), தொடை, காலின் மேற்புறத்திலும் ஓரங்களிலும், பிட்டம் போன்ற உடலின் எல்லா பாகங்களிலும் இது வரலாம். ஆனால் உரோமங்கள் அற்ற பாகத்தில் (உள்ளங்கை, பாதம்) வருவதில்லை. உலர்ந்த தோல் உள்ளவர்களுக்குப் பொதுவாக இது ஏற்படுகிறது. குளிர்காலங்களில் நிலைமை மோசமாகும்.

நோயறிகுறிகள்

பாதிக்கப்பட்ட தோல் திட்டுகள், நுண்ணிய முள் புடைப்புகள் போல் காணப்படும். தோலின் நிறத்திலும், சிவப்பு அல்லது பழுப்பாகவும் இருக்கும். இதனால் கோழித்தோல் போன்றும் கரடுமுரடாகவும் மணல்தாள் போன்று தோற்றம் அளிக்கும். சிலருக்கு அரிப்பும் புடைப்பைச் சுற்றி சிவப்பு நிறமும் காணப்படும். இது பரவக்கூடியது அல்ல.

நோய்க்கண்டறிதல்

பொதுவாக உடல் பரிசோதனை மூலமே இது கண்டறியப்படுகிறது.

சிகிச்சை

இதற்கான மருத்துவம் இதுவரை இல்லை. ஆனால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

  • தோலை வறட்சி அடையச் செய்வதால் சோப்பு இல்லாத சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தவும்.
  • தோல் உலரும்போது அதற்கு ஈரப்பசை ஊட்ட வேண்டும். தோல் வறட்சியை ஈரப்பசைப் பொருட்கள் கட்டுப்படுத்தும். எரிச்சல் நீக்கிகளில் யூரியா மற்றும் லேக்டிக் அமிலம் இருப்பதால் அவை மிகவும் பலன் தருபவை ஆகும்.
  • நுரைப்பஞ்சு போன்றவற்றைக் கொண்டு மென்மையாகத் தோலைத் தேய்த்து கரடுமுரடுகளை அகற்றவும்.
  • சூடான நீரில் குளிக்காமல் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தவும்

இது குறிப்பான தகவலே. நோய்கண்டறியவும் மருத்துவத்திற்கும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

2.86111111111
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top