பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தோல் / தோல் மற்றும் தசை அழற்சி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தோல் மற்றும் தசை அழற்சி

தோல் மற்றும் தசை அழற்சி பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தோல் மற்றும் தசை அழற்சி (Dermatomyositis )

இது மிகவும் அரிதான ஒரு நோயாகும். இது ஒரு மில்லியன் சனத்தொகையில் 2-10 பேரை பாதிக்கின்றது. அத்துடன் இது எல்லா வயதினரையும் பாதிக்கும். இந்த நோய்க்கான காரணியானது இன்னமும் அறியப்படாததுடன் HLA B8/ De3 போன்ற மரபணுக்களை உடையவரில் இது அதிகளவு ஏற்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் ருபெல்லா, இன்புளுவென்சா போன்ற சில வைரசுக்களின் நோய்த்தொற்றின் பின்னரும் இது ஏற்படக்கூடும் என ஊகிக்கப்படுகிறது.

நோய் அறிகுறிகள்

இது பொதுவாக பெண்களில் அதிகளவில் ஏற்படும். தோலில் ஏற்படும் மாற்றங்களாக கண்மடல்களின் நிறமானது மாற்றமுறல், கண்களைச் சுற்றி வீக்கம் ஏற்படல், மூட்டுக்கள் மற்றும் விரல்களின் மேற்பரப்பில் தோலானது உரிந்து நாவல் நிறமான தோல் மாற்றங்கள் ஏற்படல் ஆகியன காணப்படும். 25% நோயாளிகளில் காயங்களை ஏற்படுத்தும் இரத்தக்குழாய் அழற்சியானது ஏற்படும். அத்துடன் தோலின் கீழான பகுதியில் கல்சியம் படிதலும் ஏற்படலாம். தசையின் பலவீனமானது பொதுவாகக் காணப்படும். தசைவலி, மூட்டுவலி, நேநோயிட் குணங்குறி ஆகியனவும் காணப்படலாம். நீண்டகால நோய்த்தாக்கத்தின் பின்னர் தசைகளில் நார்த்தன்மை கூடுதல், மூட்டுக்கள் வளைதல் ஆகியன ஏற்படலாம்.

சிறுவர்களில் ஏற்படும் தோல் அழற்சி

இது 4-10 வயதுள்ள சிறுவர்களை பொதுவாகப் பாதிக்கும். மேற்குறிப்பிட்ட தோல் மாற்றங்களுடன் தசையின் பலவீனமும் காணப்படும். தசைகளின் நலிவு, தோலின் கீழான கல்சியம் படிவி, மூட்டுக்கள் வளைதல் ஆகியனவும் ஏற்படும். காயத்தை ஏற்படுத்துகின்ற தோலின் இரத்தக்குழாய் அழற்சியும் காணப்படலாம். அத்துடன் இரத்தக்குழாய் அழற்சியின் காரணமாக அடிக்கடி வயிற்றுவலியும் ஏற்படலாம்.

இந்நோயானது ஏனைய தொடுப்பிழைய நோய்களுடன் இணைந்தும் காணப்படலாம். அத்துடன் இந்த நோயுள்ளவர்களில் நுரையீரல், சூலகம், மார்பகம், இரைப்பை ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோயும் காணப்படலாம். இது பொதுவாக ஆண்களில் காணப்படும் ஒரு ஆபத்தான நிலையாகும்.

ஆதாரம் : ஆரோக்கியதளம்

3.06557377049
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top