பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தோல் / தோல்படை நோய் (செம்பருக்கள்)
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தோல்படை நோய் (செம்பருக்கள்)

தோல்படை நோய் (செம்பருக்கள்) பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

படை ஓர் தோல் அழற்சியாகும். இது கொப்புளம், புண் அல்லது சொறியாக வெளிப்படுகிறது. அரிப்பெடுக்கும் சொறியாக உடல் முழுவதும் பரவும் படை, ஒரு தொற்று நோய் அல்ல.

படை பின் வரும் வகைகளாகப் பிரிக்கப்படுகிறது:

வடிவம்:

 • வளையப் படை
 • நீள் படை
 • படையின் உருவமைப்பு:
 • மிகை வளர்ச்சிப் படை
 • நலிவுப் படை
 • கொப்புளப் படை
 • படைப் புண்
 • நுண்பைப் படை
 • கதிர்வெப்பப் படை
 • கரும்பழுப்புப் படை

படை தோன்றும் இடங்கள்:

 • உள்ளங்கை மற்றும் பாதப் படை
 • மென்சவ்வுப் படை
 • நகப் படை
 • மண்டையோட்டுப் படை (வழுக்கைக்குக் காரணம்)
 • கவிழ் படை

அரிய வகைகள்

 • மருந்துகளால் ஏற்படும் படை
 • செம்முருடு போல் தோன்றும் படை
 • பெம்ஃபிகாய்ட் படை
 • கெரடோசிஸ் லிச்சினாய்ட்ஸ் குரோனிக்கா
 • உறுப்பு மாற்ற சிகிச்சையின் விளைவால் ஏற்படும் படை
 • முள் படை
 • லிச்சினாய்ட் டெர்மாடிட்டிஸ்

நோயறிகுறிகள்

பாதிக்கப்பட்ட உடல் பாகத்திற்கு ஏற்ப படையின் அறிகுறிகள் மாறுபடும். மிக முக்கியமான அறிகுறிகள் தோன்றுமிடம் வருமாறு:

 • வாய்
 • தோல்
 • பெண் குறி மற்றும் யோனிக்குழாய்

ஆண்குறி

 • வாய்ப் படையின் அறிகுறிகள்
 • நாவிலும், உட்கன்னத்திலும் வெள்ளை
 • வாயில் வெண் மற்றும் சிவப்பு புள்ளிகள்
 • உண்ணும்போதும் குடிக்கும்போதும் எரிச்சலும் உபாதையும்
 • வலியோடு கூடிய சிவந்த ஈறுகள்
 • அடிக்கடி வரும் வாய்ப்புண்கள்
 • தோலில் படையின் அறிகுறிகள்
 • செம்பழுப்புக் கொப்புளங்கள், சற்றே எழும்பியும், பளபளப்பாகவும் முனை மழுங்கியும் இருக்கும்
 • கொப்புளங்கள் பொதுவாக 3-5 மி.மீ. விட்டம் கொண்டவை
 • கொப்புளங்களில் ஒழுங்கற்ற வெள்ளை வரிகள் (விக்ஹாமின் நிறமிக்கோடுகள்)
 • கட்டியான செதில் போன்ற படைகளும் தோன்றும், குறிப்பாகக் கணுக்காலைச் சுற்றி — இது மிகைவளர்ச்சிப் படை எனப்படும்.
 • தோல் அரிப்பு
 • பெண்குறி மற்றும் யோனியில் படை

பெண் குறி மற்றும் யோனிக்குழாய்ப் படைகளின் அறிகுறிகள் வருமாறு:

 • பெண்குறியைச் சுற்றி புண்ணும் எரிச்சலும்
 • பெண் குறியில் வெள்ளைக்கோடுகள். அவை சிவப்பு, இளஞ்சிவப்பு அல்லது வெளிறிய நிறத்திலும் இருக்கும்.
 • யோனிக்குழாய் பாதிக்கப்பட்டிருந்தால் உடலுறவில் வலி ஏற்படும்
 • வெளித்தோல் சிதைவடைந்தால், ஈரப்பசையான சிவப்பு படை உருவாகும்
 • வடுத் திசுக்கள் தோன்றி பெண்குறியின் வடிவத்தைச் சீர்குலைக்கும்
 • இரத்தம் கலந்த, ஒட்டும் தன்மையுள்ள, மஞ்சள் அல்லது பச்சைக் கசிவு
 • பெண்குறியின் துளை சுருங்கலாம்

ஆண்குறிப் படை

ஆண்குறியில் உண்டாகும் படையின் அறிகுறிகளாவன:

 • ஆண்குறியின் நுனியில் பழுப்பு அல்லது வெள்ளை நிற வளைய வடிவிலான படைகள்
 • கொப்புளங்கள் மழுங்கிய முனையுடனும் பளபளப்பாகவும்
 • படைகளில் பொதுவாக அரிப்பு இருப்பதில்லை

காரணங்கள்

படை ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆயினும், நோய்த்தடுப்பு மண்டலத்தோடோ, சில மருந்துகளினால் உண்டாகும் ஒவ்வாமையினோடோ தொடர்புடையது எனலாம்.

பீட்டா தடுப்பான்கள் — இதய அழுத்தத்தை நீக்கும், இதயத் துடிப்பைக் குறைக்கும், இதய தசை சுருங்கும் வேகத்தைக் குறைக்கும், இதயம், மூளை மற்றும் உடல் முழுவதும் உள்ள இரத்தக் குழாய்களின் சுருக்கத்தைக் குறைக்கும் மருந்துகள்.

 • கல்லீரல் அழற்சி C போன்ற நோய்கள்
 • எதிர்-அழற்சி மருந்துகள்
 • மலேரியா தடுப்பு மருந்துகள்: தியாசைட் டையூரெடிக்ஸ் ஃபீனோதையாசைன் (எதிருளவியல் செயல்பாடு கொண்ட வலிகுறைக்கும் மருந்துத் தொகுதி)

நோய்கண்டறிதல்

உடல் பரிசோதனை மூலமாகவே பொதுவாகக் கண்டறியப்படுகிறது.

திசுச்சோதனை: சில வேளைகளில் திசுச் சோதனை செய்யப்படும். நுண்ணோக்கியின் மூலம் தோல் மாதிரிகள் ஆய்வு செய்யப்படும்.

சிக்கல்கள்

தோல் நிறமாறுதலும், சில வேளை, சிதைவுப் படை ஒரு வகையான புற்று நோயாக மாறுவதும் படை நோயின் சிக்கல்கள் ஆகும்.

தோல் நிறமாற்றம்: படை சரியான பின்பும் தோலின் நிறம் மாறலாம் (பழுப்பு அல்லது சாம்பல்). இது பல மாதங்கள் வரை நீடிக்கும். இது அழற்சிக்குப் பின்னான மிகைநிறமாற்றம். கருப்பு நிறத் தோல் உள்ளவர்களுக்கு வெளிப்படையாகத் தெரியும்.

அரிக்கும் படை: இது நீடித்த வகை. இதில் வலியோடு கூடிய புண்கள் உண்டாகும். ஆண்-பெண் குறிகளில் எரிச்சலும் உபாதையும் ஏற்படும். நாட்பட்ட படை சில வகை புற்று நோய்களாகவும் மாறலாம்.

உதாரணமாக:

 • வாய்ப்புற்று
 • பெண் பிறப்புறுப்புப் புற்று
 • ஆண்குறிப்புற்று

சிகிச்சை

படைக்கான மருந்துகள் வருமாறு:

 • வாய்மூலம் உட்கொள்ளும் மற்றும் மேற்பூச்சு ஊக்கமருந்துகள்
 • வாய்மூலம் உட்கொள்ளும் ரெட்டினாய்டு மருந்துகள்
 • தடுப்பாற்றலடுக்கும் மருந்துகள்
 • தோல் அழற்சிக்கு, கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள் (செயற்கை இயக்குநீர்கள்) அடங்கிய ஹைடிராக்சிகுளோரோகொய்ன் களிம்புகள்

சிகிச்சைக்கு உங்கள் மருத்துவரையே அணுக வேண்டும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம் (NHP)

3.01408450704
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top