பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தொழுநோய்

தொழுநோய் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஹேன்சென் நோய் எனப்படும் தொழுநோய், மைக்கோபேக்டீரியம் லெப்ரேயாவால் ஏற்படும் நீடித்தத் தொற்று நோயாகும். இது குறிப்பாக தோலையும், நுனி நரம்புகளையும் பாதிக்கிறது. முடிச்சுகளும் புள்ளிகளும் ஏற்பட்டு, பெரிதாகிப் பரந்து, உணர்விழந்து, பக்கவாதம் ஏற்படுத்துவது இந்நோய்த் தன்மை. தசை இழப்பு ஏற்பட்டு இறுதியாக ஹேன்சென் நோய் எனும் உறுப்புகளின் உருக்குலைவு உண்டாகும். இத்தொற்று மைக்கோபேக்டம் லெப்ரே மற்றும் மைக்கோபேக்டீரியம் லெப்ரோமெட்டோசிஸ் எனப்படும் பாக்டீரியாக்களால் உண்டாகிறது. நுனி நரம்புகள் அல்லது மேல் மூச்சுமண்டல சளிச்சவ்வுகளில் உண்டாகும் திசுக்கட்டி நோயாகும். தோல் புண்களே இதன் வெளிப்படையான அறிகுறி. சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், தொழு நோய் வளர்ச்சி அடைந்து, தோல், நரம்புகள், அவயவங்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர சேதத்தை உண்டாக்கும்.

நோயறிகுறிகள்

இந்நோயால் பின்வரும் அறிகுறிகள் உண்டாகும்:

 • மங்கிய/நிறமாறிய தோல் புண்கள்
 • தோலில் வளர்ச்சி
 • கட்டியான, விறைப்பான அல்லது உலர்ந்த தோல்
 • கடுமையான வலி
 • பாதிக்கப்பட்ட தோல் உணர்ச்சியிழத்தல்
 • தசைபலவீனம் அல்லது பக்கவாதம் (குறிப்பாக கால்/கையில்)
 • பார்வையிழப்புக்கு இட்டுச்செல்லும் கண் பிரச்சினைகள்
 • பெரிதான நரம்புகள் (குறிப்பாக முழங்கை/காலில்)
 • மூக்கடைப்பு
 • பாதங்களில் புண்

காரணங்கள்

மைக்கோபாக்டீரியம் லெப்ரே மற்றும் மைக்கோபாக்டீரியம் லெப்ரோமெட்டாசிஸ் ஆகியவையே தொழுநோயை உண்டாக்குவன. மைக்கோபாக்டீரியம் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவும். நோயுள்ள ஒருவர் இருமும்போதோ, தும்மும் போதோ இது நிகழ்கிறது. இதனால் துளிகள் காற்றில் பரவுகின்றன. பாக்டீரியா உள்ள பிற மூக்குத் திரவங்கள் பிறர் மீது படும்போதும் பாக்டீரியாக்கள் பரவலாம்.

ஆபத்துக் காரணிகள்: நோய்த்தாக்கம் உள்ள இடங்களில் வாழ்பவர்களுக்குக் கீழ் வரும் மோசமான நிலைகளால் ஆபத்துண்டு:

 • போதுமான படுக்கை வசதியின்மை
 • அசுத்தமான நீர்
 • போதுமான உணவின்மை அல்லது நோய்த்தடுப்பு சக்தியைப் பலவீனமாக்கும் பிற நோய்கள்

நோய்கண்டறிதல்

மருத்துவ நோய்க்குறிகளையும் அறிகுறிகளையும் கொண்டே பொதுவாக தொழுநோய் கண்டறியப்படுகிறது.

லோப்ரோமின் சோதனை:

 • தோல் மாதிரிகள் சோதனையில் நோய் அறியப்படுதல்
 • உணர்வு இழப்பும், நரம்புத் தடிப்பு உள்ளதும் இல்லாததுமான தோல் புண்கள், தொழு நோய் இருப்பதாக சந்தேகம் எழுந்தால் நோய்கண்டறியவும் சிகிச்சை செய்து கொள்ளவும் மருத்துவரை அணுக வேண்டும்.

தடுப்புமுறை

BCG தடுப்பு மருந்து காசநோய்க்கு மட்டுமன்றி தொழுநோய்க்கும் பல்வேறு அளவில் பாதுகாப்பை அளிக்கிறது. ஒரு தடவையாகக் கொடுப்பதை விட இரு தடவையாக கொடுக்கும் போது 25% திறன் கொண்டதாகத் தோன்றுகிறது. சிறந்த தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

சிகிச்சை

பல தொழு நோய் மருந்துகள் கிடைக்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட பல மருந்து சிகிச்சை வருமாறு:

பல்நுண்ணுயிரித் தொழுநோய்

பெரியவர்களுக்கான அளவுமருந்து:

 • ரிஃபாம்ப்சின்: 600 மி.கி. மாதம் ஒருமுறை, டாப்சோன்: 100 மி.கி. தினமும்
 • குளோஃபாசிமைன்: 300 மி.கி. மாதம் ஒருமுறை மற்றும் 50 மி.கி.தினமும்

கால அளவு= 12 மாதங்கள்

குறைந்த நுண்ணுயிரி தொழுநோய்

பெரியவர்களுக்கான அளவு:

 • ரிஃபாம்ப்சின்: 600 மி.கி. மாதம் ஒருமுறை
 • டாப்சோன்: 100 மி.கி. தினமும்

கால அளவு= 6 மாதங்கள்

ஒரு தோல்புண் குறைந்த நுண்ணுயிரி தொழுநோய்

பெரியவர்களுக்கான அளவு:

 • ரிஃபாம்ப்சின்: 600 மி.கி.
 • ஆஃப்ளாக்சாசின்: 400 மி.கி.
 • மினோசைக்ளின்: 100 மி.கி

தொழுநோய் என்று சந்தேகப்பட்டால் மருத்துவரிடம் நோயறிதலுக்காகவும் மருத்துவத்திற்காகவும் செல்ல வேண்டும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

2.96
சங்கர் ராஜா Aug 18, 2019 10:54 PM

தொழுநோய் பாதிகாகப்பட்ட பின் முழுமையாக குணப்படுத்த முடயுமா..? தொழு நோய் சிகிச்சை எடுத்தக்கொண்ட பின்பு நீண்ட வருடம் கழித்து மீண்டும் பாதிப்பு ஏற்படுத்துமா..? அப்படி ஏற்படுத்தினால் மீண்டும் குணப்படுத்த முடியுமா?

Raja Apr 17, 2019 09:42 AM

அதை சரி செய்ய முடியுமா.

Raja Apr 17, 2019 09:40 AM

தொழு நோய் மாத்திரை சாப்பிட பின்பு பல வருடங்கள் கழித்து அதான் பாதிப்பு இருக்கும்மா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top