பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பனிக்கடுப்பு

பனிக்கடுப்பு பற்றிய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.

அறிமுகம்

அளவுக்கு அதிகமான குளிரினால் தோலுக்கும் திசுக்களுக்கும் ஏற்படும் சிதைவே பனிக்கடுப்பு எனப்படுகிறது. அதிகமான குளிர் படும் உடல் பகுதிகளிலேயே பெரும்பாலும் இது உண்டாகும். ஆரம்பக் கட்டம் பனிக்கடி என அழைக்கப்படும். கையிலோ காலிலோ பனிக்கடுப்பு ஏற்பட்டவருக்கு உடல் வெப்ப நிலை குறையலாம். வெப்பநிலை 0 °C (32 °F) அல்லது அதற்கும் குறையும்போது பனிக்கடுப்பும் அதனால் நரம்புச் சுருக்கமும் உண்டாகிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைவதால் பனிப்படிகங்கள் உருவாவதைத் தடுக்கும் அளவுக்கு திசுக்களுக்குத் தேவையான வெப்பம் கிடைப்பதில்லை. கைகள், பாதங்கள் மற்றும் குளிர்படும் நிலையில் உள்ள திசுக்களே (உ-ம். காது, மூக்கு, உதடுகள்) பனிக்கடுப்பால் பாதிப்படையக் கூடிய இடங்கள்.

நோயறிகுறிகள்

 • 0 °C (32 °F) அல்லது அதற்கும் கீழே வெப்பநிலை குறையும் போது தோலை ஒட்டி இருக்கும் இரத்தக் குழாய்கள் சுருங்கத் தொடங்குகின்றன. குருதிக்குழாய்ப் பின்னல் தொகுதியின் செயல்பாட்டால் இரத்தம் உடலின் அற்றங்களுக்குப் பாயாமல் தடுக்கப்படுகிறது (குருதிக்குழாய்ப் பின்னல் தொகுதி விரல்களிலும் கால்நுனியிலுமே அதிகமாக உள்ளன. குளிர் வெப்பநிலையின் போது தோல் பரப்புக்கு அதிக இரத்தம் பாய்வதைத் தடுப்பதே இவற்றின் வேலை. இதனால் வெப்ப இழப்பு தடுக்கப்படுகிறது. வெப்ப காலங்களில் அதிகமான வெப்பம் தோலில் பரவி பின் வெளியேறவும் இவை துணை புரிகின்றன. குருதிக்குழாய்ப் பின்னல் தொகுதி பரிஉணர்வுடன் நரம்பு உந்தல்களை வலுப்படுத்தி கிட்டத்தட்ட முழு நரம்பு சுருக்கத்தை ஏற்படுத்துகிறது). பனிக்கடியில் நான்கு நிலைகள் உள்ளன. ஒவ்வொன்றும் உண்டாக்கும் வலியின் அளவும் வேறுபடும்.
 • முதல் நிலை: இது பனிக்கடி எனப்படும். இது குளிர் படும் தோல் பரப்பையே பாதிக்கிறது. முதலில் அரிப்பும் வலியும் ஏற்பட்டு பின் தோலில் வெள்ளை, சிவப்பு மற்றும் மஞ்சள் படைகளும் உணர்ச்சியின்மையும் உண்டாகும். தோலின் மேல் படலமே பாதிப்படைவதால் பனிக்கடி ஏற்பட்ட இடம் நிரந்தரமாகச் சிதைவு அடைவதில்லை.
 • இரண்டாம் நிலை: தோல் நீண்ட நேரம் குளிரால் பாதிக்கப்பட்டால் அது உறைந்து கட்டியாகும். ஆனால் ஆழத்தில் இருக்கும் திசுக்கள் பாதிக்கப்படுவதில்லை. அவை மென்மையாகவும் இயல்பாகவும் இருக்கும். உறைந்த பின் இரண்டொரு நாட்களுக்கு இரண்டாம் நிலை காயத்தால் கொப்புளம் ஏற்படும். இக் கொப்புளங்கள் கடினமும் கறுப்புமாகி முன்னைவிட மோசமாக இருக்கும். பெரும்பாலான காயங்கள் ஒரு மாதத்தில் ஆறினாலும் அந்த இடம் வெப்பத்திற்கும் குளிருக்கும் உணர்ச்சியற்றும் போகும்.
 • மூன்றாம் நான்காம் நிலை: குளிர் தாக்கிய இடம் மேலும் உறைந்தால் ஆழமான பனிக்கடுப்பு உண்டாகும். தசைகள், தசைநார்கள், இரத்தக் குழாய்கள், நரம்புகள் ஆகிய யாவும் உறைகின்றன. தோல் பகுதி சிவந்து, மெழுகுபோல் ஆகி தற்காலிகமாகத் தோலிழப்பு ஏற்படுகிறது. கடுமையான நிலையில் நிரந்தர இழப்பும் உண்டாகும். ஆழமான பனிக்கடுப்பு ஏற்பட்ட இடத்தில் பழுப்பு நிறக் கொப்புளம் தோன்றி பின் கறுக்கும். அவற்றில் பொதுவாக இரத்தம் நிறைந்திருக்கும். நரம்பு இழப்பு ஏற்பட்ட இடத்தில் உணர்ச்சி இருக்காது. பாதிக்கப் பட்ட இடத்தில் தசையழுகல் ஏற்பட்டால் விரல்களையும் விரல்நுனிகளையும் வெட்டி எடுக்கும் நிலை உருவாகும். சிகிச்சை அளிக்காவிட்டல் அது கீழே உதிர்ந்து விழலாம். பனிக்கடுப்பால் உறைந்த  இடத்தில் நிகழ்ந்துள்ள பாதிப்பை மதிப்பிடப் பல மாதங்கள் ஆகும். இதனால் செத்த திசுக்களை அகற்றும் மருத்துவமும் தாமதமாகும்.

காரணங்கள்

 • உடலில் குளிர் தாக்கும்போது பொதுவாக பனிக்கடுப்பு ஏற்படுகிறது.
 • பனிக்கடுப்பின் கடுமை வெப்பநிலையையும் தாக்கத்தின் அளவையும் பொறுத்து அமைகிறது. வெப்பம் உறைநிலைக்குக் கீழ் இருந்தால் குளிர் தாக்கும் உடல் பகுதிகளில் இரத்த ஓட்டம் குறைந்து பனிக்கடுப்பு உண்டாகிறது. உடல் வெப்பத்தைப் பாதுகாக்கவும் தாழ்வெப்பநிலையை எதிர்த்துப் போராடவும் உடல் மேற்கொள்ளும் பதில்வினையின் காரணமாக  இரத்த ஓட்டம் குறைவதால் இது ஏற்படலாம். இதனால் மேலும் உடல் வெப்பக் குறைவு உண்டாகும் (அதிகக் குளிர், போதுமான ஆடை அணியாமை, ஈர உடை, குளிர் காற்று). மடங்கிய உடல்நிலை, இறுக்கமான உடை, களைப்பு, சில மருந்துகள், புகைத்தல், மது அல்லது இரத்தக் குழாய்களைப் பாதிக்கும் நீரிழிவு போன்ற நோய்களாலும் இரத்த ஓட்டக் குறைவு உருவாகலாம்.

நோய்கண்டறிதல்

அறிகுறிகளை வைத்தே பனிக்கடுப்பு கண்டறியப்படுகிறது.

பிம்ப ஊடுகதிர்கள்

 • காந்த அதிர்வு பிம்பம் அல்லது எக்ஸ்-ரே ஆகியவற்றைக் கொண்டு பனிக்கடுப்பின் கடுமையை அறியலாம்.
 • தேசிய சுகாதார இணையதளம் ஆரோக்கியத்தைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள குறிப்பான தகவல்களைத் தருகிறது. நோய் கண்டறிய மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

நோய்மேலாண்மை

உரிய நடவடிக்கைகள் மூலம் குளிர் தாக்குவதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதே சிறந்தது.

மறுசூடேற்றம்

 • மீண்டும் அத்தோல் பகுதியில் குளிர் தாக்காது என்ற நிலை இருந்தால் மட்டுமே இதைச் செய்ய வேண்டும். மருத்துவக் கண்காணிப்பின் கீழ் பின் வருமாறு இதைச் செய்ய வேண்டும்:
 • இது வலி உண்டாக்கும் சிகிச்சை. வலி நிவாரணிகள் தேவைப்படும்.
 • குறைந்த அளவில் கிருமிநாசினிகள் கலந்த நீர்ச்சுழல் குளியல் சிறந்த முறை. பதிக்கப்பட்ட இடம் வெதுவெதுப்பான (சுடுநீர் அல்ல) நீரால் மறுசூடேற்றப்படும். நீரின் வெப்ப நிலை 40-41C (104-105.8F) இருக்கலாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. இது குறைந்தது முப்பது நிமிடம் நீடிக்கலாம். பாதிக்கப்பட்ட இடம் செம்பழுப்பு நிறத்தையும் எளிதாக அகற்றக் கூடிய நிலையையும் அடையும் வரை இதை நிறுத்தக் கூடாது.
 • தேசிய சுகாதார இணையதளம் ஆரோக்கியத்தைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள குறிப்பான தகவல்களைத் தருகிறது. நோய் கண்டறிய மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்

தடுப்பு முறை

 • பனிக்கடுப்பு ஏற்படும் அபாயம் இருந்தால் அதைத் தடுக்கத் தகுந்த உடை மிக முக்கியமானது.
 • கை, கால், மூக்கு, காது, உதடுகள் போன்ற பகுதிகள் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். இவையே தாக்கப்படும் அபாயம் உள்ள இடங்கள். முதலில் இவையே பாதிக்கப்படுகின்றன. ஆரோக்கியமான சூடான உணவும் பானங்களும் உங்களை வெதுவெதுப்பாக வைக்கும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

2.9
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top