பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தோல்கெட்டியாதல்

தோல்கெட்டியாதல் பற்றிய குறிப்புகள்

அறிமுகம்

மரபு வழியாகத் தோலில் ஏற்படும் கோளாறே தோல்கெட்டியாதல் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. எல்லா வகையான தோல்கெட்டியாகும் நோயிலும் உலர்ந்த, தடிப்பான, செதில் போன்ற தோல் காணப்படும். இதை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியாது. ஆயினும் பாதிப்புகள் இலேசாக இருப்பதால் தினசரி பராமரிப்பின் மூலமாகவே இதைக் கட்டுப்படுத்த முடியும். இயல்பான உலர்தோலாகத் தவறாகக் கருதப்படும் இக்தியாசிஸ் வல்காரிசில் இருந்து உயிருக்கு ஆபத்தான ஹர்லிகுயின் இக்தியாசிஸ் வரை அறிகுறிகளின் பாதிப்பு மிகவும் வேறுபடும். மிகவும் பரவலான வடிவம் 95 % காணப்படும் இக்தியாசிஸ் வல்காரிஸ் ஆகும்.

நோயின் அறிகுறிகள்

இக்தியாசிஸ் வல்காரிஸ்

 • பிறக்கும்போது தோல் இயல்பாக இருக்கும்
 • ஒரு வயதுக்கு முன் படிப்படியாகத் தொடங்கி, பொதுவாக ஒரு வயது ஆவதற்குள், உலர்ந்து, கரடுமுரடாகவும் செதில் உள்ளதாகவும் தோல் மாறும்
 • முழங்கை, முழங்கால், முகம் ஆகியவை பொதுவாக பாதிக்கப்படுவதில்லை.
 • கைகால்களில் மெல்லிய, இளஞ்சாம்பல் நிற செதில்கள்
 • உள்ளங்கை மற்றும் பாதத்தில் இயல்புக்கு மாறாக அதிகமான வரிகளும் அவை தடிப்பாகவும் காணப்படும்.
 • குழந்தைகளுக்குப் பெரும்பாலும் சொறியும் இருக்கும்
 • குளிர் காலத்தில் அறிகுறிகள் தெளிவாகத் தென்படும்
 • இணைந்த இக்தியாசிஸ் பிறப்பில் அல்லது பிறந்து குறுகிய காலத்தில் செதில்கள் காணப்படும்
 • பொதுவாக ஆண்களே பாதிக்கப்படுவர்
 • விரை சார்ந்த நோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்
 • மடிப்பு இக்தியாசிஸ் குழந்தைகளுக்குக் காணப்படும்
 • பிறக்கும் போது குழந்தையின் மேல் ஒரு கட்டியான படலம் இருக்கும். பின் உதிரும்.
 • செதில்கள் உடல் முழுவதையும் பாதிக்கும்
 • கீழ் கண்மடல் தொங்கியவாறு இருக்கலாம்

புறத்தோல் இக்தியாசிஸ்

 • பிறக்கும் போது தோல் ஈரப்பசையுடனும், சிவப்பாகவும், மென்மையாகவும் கொப்புளங்களுடனும் இருக்கும்
 • வளரவளர செதில்கள் கெட்டியாகும்
 • பெறப்பட்ட தோல்கெட்டி நோய் (அக்யுர்ட் இக்தியாசிஸ்) பிறவியாக வருவதில்லை; வளர்ந்தபின் உருவாகிறது.
 • இது கீழ்வரும் நோய்களோடு பொதுவாகத் தொடர்புடையது ஆகும்:
 • தைராயிடு குறை சுரப்பு
 • சிறுநீரக நோய்
 • நிணநீர்ச் சுரப்பிப் புற்று
 • எச்.அய்.வி.தொற்று

மரபியல் பிறழ்வால் இக்தியாசிஸ் வல்காரிஸ் உண்டாகிறது. இது யாராவது ஒரு பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு வரும். குழந்தைப் பருவத்தின் ஆரம்ப கட்டத்தில் இது தொடங்கும்.

பொதுவாக, தோல் பரிசோதனை மூலம் தோல்கெட்டி நோய் கண்டறியப்படுகிறது. குடும்ப நோய் வரலாறும் சில வேளைகளில் பயனுள்ளதாக இருக்கும். உறுதிசெய்ய, தோல் திசு ஆய்வும் செய்யப்படக் கூடும்.

மருத்துவர்கள் ஈரப்பதமூட்டிகளைப் பரிந்துரைக்கலாம். லோஷன்களை விட கிரீம்களும் களிம்புகளும் அதிக பலன் தரும். குளித்தவுடன் தோலை ஈரப்பதமாக்க இக் களிம்புகளைப் பூச வேண்டும். மெல்லிய வறட்டுத்தன்மை ஏற்படுத்தாத சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

ஈரப்பதமூட்டும் களிம்புகளில் லேக்டிக் அமிலம், சாலிசைலிக் அமிலம், யூரியா போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. இவை தோல் இயல்பாக உதிர உதவுகின்றன.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.02739726027
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top