பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மூச்சுக்குழாய் அழற்சி

மூச்சுக்குழாய் அழற்சி பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மூச்சுக் கிளைக் குழல்களில் உள்ள சளிச்சவ்வின் அழற்சியே மூச்சுக்குழாய் அழற்சி என அழைக்கப்படுகிறது. இது இரு வகைப் படும்:

 1. கடுமையானது
 2. நீடித்தது

கடும் மூச்சுக்குழாய் அழற்சி ஏற்பட்டால் சளியுடன் கூடியதும் சளி இல்லாமலும் இருமல் அல்லது தொண்டையின் பின்புற கரகரப்பு உண்டாகும். இது பரவலான நுரையீரல் தொற்று நோயாகும். எந்த வயதிலும் ஏற்படலாம்.

நீடித்த அடைப்பு நுரையீரல் அழற்சியில் சளியுடன் கூடிய இருமல் மூன்று மாதத்துக்கு நீடிக்கும். இவ்வகை அழற்சி இரு ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கலாம்.

நோயறிகுறிகள்

தொடர் இருமலுடன் கட்டி சாம்பல் மஞ்சள் சளியும் (எப்போதும் இருக்கும் என்று கூற முடியாது) வெளிப்படுவதே மூச்சுக்குழாய் அழற்சியின் முக்கிய அறிகுறியாகும். பிற அறிகுறிகளாவன:

 • நெஞ்சில் இறுக்கம்
 • மூச்சடைப்பு
 • இழுப்பு
 • தொண்டை வலி
 • சிறு காய்ச்சலும் குளிரும்
 • தலைவலி
 • மூக்கடைப்பும் மூக்குபுழை அழற்சியும்
 • உடல் வலி

காரணங்கள்

காற்றுக்குழாய் அழற்சி வைரஸ் அல்லது பாக்டீரியாவால் ஏற்படலாம். எனினும் வைரல் அழற்சியே பரவலாகக் காணப்படுகிறது. பெரும்பாலான சமயம் சளிக்காய்ச்சலை உண்டாக்கும் வைரசே காற்றுக்குழாய் அழற்சியையும் ஏற்படுத்துகிறது.

பனிப்புகை, வீட்டு உபயோகப் பொருட்களில் இருக்கும் வேதிப்பொருட்கள், புகையிலைப் புகை போன்ற மூச்சுத் திணறல் உண்டாக்குபவற்றாலும் மூச்சுக்குழாய் அழற்சி ஏற்படலாம். இருப்பினும், புகை பிடிப்பதே நீடித்த காற்றுக்குழாய் அழற்சிக்கு முக்கிய காரணமாகும். இது புகைப்பவர்களையும் மறைமுகமாகப் புகையைச் சுவாசிப்பவர்களையும் பாதிக்கும்.

நோய்கண்டறிதல்

 • இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
 • அழற்சியை உறுதி செய்ய நெஞ்சு எக்ஸ்-ரே எடுக்கப்படுகிறது.

நோய்மேலாண்மை

கடுமையான முச்சுக்குழாய் அழற்சிக்கு:

 • ஓய்வு எடுக்கவும்
 • அதிகமாக நீர் அருந்தவும்
 • வலி நிவாரணிகளான பாரசெட்டமால் அல்லது இபுபுரூபன் ஆகியவற்றின் மூலம் தலைவலி மற்றும் உடல்வலிக்கு சிகிச்சை அளிக்கலாம்.
 • புகைப்பதையும் மூச்சுத்திணறல் தரும் பொருளையும் தவிர்க்கவும்

நீடித்த மூச்சுக்குழாய் அழற்சிக்கு:

நீடித்த அடைப்பு நுரையீரல் நோய்க்குத் தீர்வு இல்லை. ஆனால் மேலாண்மையின் மூலம் நோயின் தீவிரத்தைத் தடுத்து அறிகுறிகளைக் குறைக்க முடியும். புகைப்பவராய் இருந்தால் அதை நிறுத்துவதன் மூலம் நிலை மோசமாவதையும் நுரையீரல் மேலும் சேதம் அடையாமலும் தடுக்கலாம்.

தடுப்புமுறை

காற்றுக்குழாய் அழற்சியைத் தடுக்கும் சிறந்த வழி:

 • புகைக்காதீர்
 • புகையை சுவாசிக்காதீர்
 • சிறந்த கைசுத்தத்தைக் கடைபிடிக்கவும்
 • குழந்தைகளுக்குத் தகுந்த, பரிந்துரைக்கப்பட்டத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்கவும்

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.1875
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top