பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கெட்ட சுவாசம்

இங்கு கெட்ட சுவாசத்தினை தடுக்கும் எளிய செயல்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நாற்ற மூச்சு (அல்லது) கெட்ட மூச்சு (அல்லது) கெட்ட சுவாசம் ஒரு பெரிய பிரச்சணையாக இருக்கலாம். ஆனால், நல்ல செய்தி என்னவென்றால், கெட்ட மூச்சினை அநேக நேரங்களில் சில எளிய முறைகளில் தடுக்கலாம்.

கெட்ட மூச்சானது வாயில் வளரும், மணம் உண்டாக்கும் பாக்டீரியா நுண்கிரிமிகளால் ஏற்படுகிறது. உங்கள் பற்களை சரியாக ப்ரஷ் பண்ணாத வேலையில், உங்கள் வாயில் உள்ள உணவுத்துகள்கள் மற்றும் பற்களுக்கிடையில் பாக்டீரியாக்கள் சேர்கின்றன. இந்த பாக்டீரியாக்களினால் விடுவிக்கப்படும் சல்பர் எனும் காம்பவுண்டுகள் உங்கள் மூச்சுக்காற்றினை (துர்)மணமுடையதாக்குகிறது.

சில உணவுகள், குறிப்பாக பூண்டு மற்றும் வெங்காயம் போன்றவைகள் காரஎண்ணெய்களை (பன்ஜன்ட் ஆயில்) கொண்டுள்ளது, இவை கெட்ட மூச்சு ஏற்பட பங்களிக்கின்றது ஏனெனில் இவ்வகை எண்ணெய்கள் நுறையீரலுக்குள் கொண்டுசெல்லப்படுகிறது மற்றும் வாய்வழியாக வெளியிடப்படுகிறது. புகைபிடிப்பதும் கெட்ட மூச்சிற்கான மிகப்பெரிய காரணமாகும்.

கெட்ட மூச்சினை பற்றிய பல பழங்கதைகள் உள்ளன. இங்கே கெட்ட மூச்சு பற்றி நீங்கள் கேள்விப்பட்ட சில உள்ளன. அவை உண்மை அல்ல.

பழங்கதை எண் 1

மௌத்துவாஷ் மூலம் வாய்கழுவுவது கெட்ட மூச்சினை விரட்டச்செய்யலாம்.

மௌத்துவாஷ் மூலம் வாய்கழுவுவது என்பது தற்காலிகமாகதான் கெட்ட மூச்சினை விரட்டியடிக்கும். இந்திய பல் மருத்துவ சங்கத்தின் முத்திரையுடன் இருக்கின்ற மௌத்துவாஷ், ஆன்டிசெப்டிக் (கெட்டமூச்சினை எற்ப்படுத்தும் கிரிமிகளை அழிக்கின்ற) மற்றும் பல்லில் ஏற்ப்படும் பற்றுப்படலத்தை குறைக்கும் வகையில் இருக்கின்றதா என்று பார்த்து பயன்படுத்தவும்.

பழங்கதை எண் 2

நீங்கள் பல் துலக்கினால், உங்களுக்கு கெட்ட மூச்சு ஏற்ப்படாது

உண்மை என்னவென்றால் பெரும்பாலானோர் 30 முதல் 45 நொடிகள் மட்டும் பல் துலக்குகின்றனர், இது கெட்டமூச்சினை தவிற்காது. பற்களின் அணைத்து பகுதிகளையும் போதுமான அளவு சுத்தம் செய்ய , நீங்கள் அவசியம் குறைந்தது இரண்டு (2) நிமிடங்கள் என ஒரு நாளில் குறைந்தது இரண்டு (2) முறையாவது பல் துலக்கவேண்டும் .உங்கள் நாக்கையும் சுத்தம் செய்ய ஞாபகமாய் இருங்கள் – பாக்டீரீயாக்கள் நாக்கில் படிந்து இருக்கும்.. இழை அல்லது நாடா வடிவிலான ப்ளாஷ் எனப்படும் பொருளினை கொண்டு வாயினை துலக்குவதற்க்கு/சுத்தம் செய்வதும் இணையான முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் பல்துலக்குவது மாத்திரம் பற்படலங்கள் மற்றும் பல்லீருகளுக்கிடையில் மாட்டிக்கொண்டிருக்கும் உணவுத்துகள்களை அகற்றிடாது ப்ளாஷ் போன்றவற்றைக்கொண்டு இவற்றை அகற்றவேண்டும்.

உங்களுக்கு கெட்ட மூச்சு என்ற கவலை இருந்தால், நீங்கள் பற்கள் மற்றும் வாய்க்கு சரியான அக்கரை எடுத்துக்கொள்ளுகிறீர்களா என்பதனை உறுதிசெய்யுங்கள். சில சர்க்கரை அற்ற பசைகள் மற்றும் மிண்ட்ஸ் எனப்படும் அரோமாடிக் தாவரப்பொருட்கள் கெட்ட மூச்சினை தற்காலிகமாக மறைக்கும்.

நீங்கள் சரியாய் ப்ரஷ் மற்றும் ப்ளாஷ் செய்தும், மற்றும் உங்கள் பல் மருத்துவரை அணுகியும் சரியாக உங்கள் பற்களை சுத்தம் செய்தும் உங்களுக்குள்ள கெட்ட மூச்சு அப்படியே இருந்தால், உங்களுக்கு சைனசைடிஸ் அல்லது ஈறு நோய்கள் போன்ற மருத்துவம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கலாம். உங்களுக்கு பிரச்சனை உள்ளது என்று நீங்கள் சந்தேகித்தால் உங்கள் மருத்துவர் அல்லது பல்மருத்துவரை அணுகி, உங்கள் கெட்ட மூச்சிற்கு பின்னனியில் உள்ளது எது என்பதனை கண்டறியுங்கள்.

கெட்ட மூச்சு ஏற்பட காரணங்கள்

கெட்ட மூச்சு ஏற்பட காரணங்கள்
மிக கெட்ட மூச்சு உங்கள் வாயிலிருந்து தோன்றுவதற்கான காரணங்கள் பல, அவையாவன.;

 • உணவுகள்: பற்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள உணவுச் சிதைவுத்துகல்கள் கெட்ட வாடையை ஏற்ப்படுத்தலாம் .உட்கொள்ளும் உணவுகள் கொண்டுள்ள விரைந்து ஆவியாகும் எண்ணெய் பொருட்கள் கெட்ட மூச்சிற்க்காண மற்றொரு காரணமாகும். வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவை மிகச்சிறந்த தெரிந்த உதாரணங்களாகும், ஆனால் பிற காய்கறிகள் மற்றும் வாசனை பொருட்களும் கெட்ட மூச்சினை ஏற்ப்படுத்தலாம். இவ்வகை உணவுகள் ஜீரணித்தப்பின்னர் அவற்றில் உள்ள காரஎண்ணெய்கள் இரத்தஓட்டத்திற்க்குள் உறுஞ்சப்படுகிறது, அவை நுறையீரலுக்குள் கொண்டுசெல்லப்படுகிறது மற்றும் அவை உடலிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றப்படும்வறை மூச்சிக்காற்றில் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவை அவற்றை உட்கொண்டதிலிருந்து 72 மணி நேரங்கள் வரை கெட்ட மூச்சினை ஏற்ப்படுத்தக்கூடும்.
 • பற்களில் ஏற்படும் பிரச்சனைகள் : குறைந்த பற்களின் சுகாதாரம் மற்றும் பல்லை சூழ்ந்துள்ள நோய்கள், கெட்ட மூச்சிற்கு காரணமாகலாம். தினமும் ப்ரஷ் மற்றும் ப்ளாஷ் செய்யவில்லையென்றால், உணவுத்துகல்கள் வாயிலெயே இருக்கும், பாக்டீரியாக்கள் சேரும் மற்றும் ஹைட்ரஜன் சல்பைட் வாயுவினை வெளியிடும். ஒரு வகை ஒட்டும் தண்மை கொண்ட பாக்டீரியாப்படலம் (பற்படலம்) உங்கள் பற்களின் மேல் உருவாகும்.
 • வரண்ட வாய்; எச்சில் உங்கள் வாயினை சுத்தமாகவும் மற்றும் ஈரப்பதத்துடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது. உலர்ந்த அல்லது வரண்ட வாயானது, இறந்த செல்கள், நாக்கின் மேல், ஈருகளின் மேல் மற்றும் கன்னங்களின் உள் பகுதியில் சேர்வதை ஏதுவாக்குகிறது. இச்செல்கள், பின்னர் அழுகி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக வரண்ட வாய் என்பது தூங்கும்போது ஏற்படுகிறது.
 • நோய்கள்: நாட்பட்ட நுறையீரல் நோய்த்தொற்றுக்கள் மற்றும் நுறையீரல் சீழ்கட்டிகள் போன்றவை மிக அழுகின வாசனை கொண்ட மூச்சினை உண்டாக்கக்கூடும். புற்று நோய் மற்றும் சில வளர்சிதைமற்ற குறைபாடுகள் போன்ற பிற உடல் நலக்குறைவுகள் குறிப்பிடத்தக்க மணம் கொண்ட மூச்சினை ஏற்ப்படுத்தலாம்.
 • வாய், மூக்கு மற்றும் தொண்டை நிலைகள்: கெட்ட மூச்சு என்பது சைனஸ் நோய்தொற்றுடனும் தொடர்புடையது ஏனெனில் சைனஸிலிருந்து மூக்கில் வடியும் திரவம் பின்புறம் உங்கள் தொண்டைக்குள் செல்வதும் வாயில் நாற்றத்தை ஏற்ப்படுத்தும்.
 • புகையிலை உற்பத்திப்பொருட்க்கள்: புகைபிடிப்பது உங்கள் வாயினை வரண்டச்செய்யும் மற்றும் அதன் விரும்பத்தகாத மணம் வாய் நாற்றத்தினை ஏற்படுத்தும். புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு பற்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் நோய் ஏற்படும், இவை கெட்ட மூச்சு ஏற்ப்பட கூடுதல் காரணங்களாக அமையும்.
 • தீவர உணவுக்கட்டுப்பாடு: உணவுக்கட்டுப்பாடு உள்ளவர்களுக்கு கீடோஅசிடோஸிஸ் ஏற்படுவதால், பழம் மணமுடைய மூச்சு உண்டாகலாம், கீடோஅசிடோஸிஸ் என்பது பட்டிணிக்கிடக்கும் போது வேதிப்பொருட்கள் சிதைவுறுவதால் உண்டாகுபவை.

நீங்களாகவே என்ன செய்யலாம்?

 • அதிகப்படியான வாய் மற்றும் பல் நலனை பேணவும். பல் துலக்குவதுடன் கூடுதலாக டென்டல் ப்ளாஸ் என்பதனை பயன்படுத்தி பற்களுக்கிடையிலும் சுத்தம் செய்யவும்.
 • நாக்கு வழிப்பானை பயன்படுத்தி நாக்கின் பின் பகுதியிலிருந்து சுத்தம் செய்யவும்.
 • உங்கள் பல் மருத்துவரால் அல்லது மருந்தியளாலரால் பறிந்துறைக்கப்பட்ட வாய் கழுவும் பொருளை பயன்படுத்தவும். இவற்றை பயன்படுத்த சிறந்த நேரம் என்பது உறங்கச்செல்வதற்கு முன் ஆகும்.
 • அதிக திரவப்பொருளை குடிக்கவும், அதிக காபி குடிப்பதை தவிற்கவும்.
 • பால் உற்பத்தி பொருட்கள், மீன் மற்றும் இறைச்சி உண்ட பின் வாயினை சுத்தம் செய்யவும்.
 • சர்க்கரை இல்லாத பசைபொருளினை அசைபோடவும், மிக குறிப்பாக உங்கள் வாய் வரட்ச்சியாக உள்ளது என உணரும்போது.
 • புத்தம்புதியதான நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை உண்ணவும்.
 • உங்கள் பல் மருத்துவரை ஒழுங்காக தவறாமல் பார்க்கவும் மற்றும் போதுமான அளவு உங்கள் பற்க்களை முறைப்படி சுத்தம் செய்யவும்.

Source: http://www.mayoclinic.com/health/bad-breath/DS00025

3.03488372093
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top