பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / வாய் / வாய் துர்நாற்றம் ஏற்படக் காரணமான நோய்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வாய் துர்நாற்றம் ஏற்படக் காரணமான நோய்கள்

உண்மையில் வாய்துர்நாற்றம் உங்கள் உடலில் இருக்கும் கோளாறுகளை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகவும் இருக்கின்றன. வாய் துர்நாற்றம் ஏற்படக் காரணமான நோய்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சிலர் புகைப்பதால், மது அருந்துவதால், நன்றாக பல் துலக்காமல் இருப்பதால் தான் வாய் துர்நாற்றம் வருகிறது என எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் வாய்துர்நாற்றம் உங்கள் உடலில் இருக்கும் கோளாறுகளை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகவும் இருக்கின்றன. எனவே, நீண்ட நாட்கள் தொடர்ந்து வாய் துர்நாற்றம் இருந்தால் மருத்துவரிடம் எதற்கும் பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.

நோய்கள்

உங்களுக்கு வாய் துர்நாற்றம் இருந்துக் கொண்டே இருக்கிறது எனில், அதற்கு நீரிழிவு, சிறுநீரக செயல்திறன் குறைபாடு, நுரையீரல் புற்றுநோய் போன்றவை கூட காரணியாக இருக்கலாம். இவை யாவும் வாய் துர்நாற்றத்துடன் தொடர்பு உள்ளவை.

நீரிழிவு

1) நீரிழிவுக்கு நீங்கள் சரியான முறையில் மருந்து உட்கொள்ளாமல் இருந்தால், வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை அசிடோன் ப்ரீத் எனவும் கூறுகின்றனர். அசிடோன் ப்ரீத் என்பது நீரிழிவு நோயாளிகளுக்கு கீட்டோ அசிடோசிசுடன் பிரச்சனை உள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறியாகும்.

2) உடற்சக்தியை உண்டாக்கும் அளவுக்கு உடலில் போதுமான அளவு சர்க்கரை இல்லை எனில், இந்த கீட்டோன்ஸ் உடலில் உண்டாகிறது. இதன் தாக்கம் உச்சமடையும் போது கோமா அல்லது உயிரிழப்பும் கூட ஏற்படலாம்.

சிறுநீரகத்தில் கோளாறு

உங்கள் வாய் துர்நாற்றத்தை வைத்தே உங்களுக்கு சிறுநீரகத்தில் கோளாறு உள்ளது என்பதை அறிய முடியம். நாள்பட்ட சிறுநீரக கோளாறு இருந்தால் வாய் துர்நாற்றம் தொடர்ந்து இருக்கும். இது அழுகிய மீன் அல்லது அமோனியா போன்ற நாற்றத்தை வெளிப்படுத்தும். இதை அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் ஓர் ஆய்வில் தெரிவித்துள்ளது.

பல் சொத்தை

உங்கள் பற்களில் சொத்தை இருந்தால், கண்டிப்பாக வாய் துர்நாற்றம் ஏற்படும். மேலும், பற்களில் எனாமல் பாதிப்பு, மஞ்சள் கறை போன்றவை இருப்பினும் கூட வாய் துர்நாற்றம் ஏற்படும்.

தூக்கம் சார்ந்த கோளாறுகள்

1) நீங்கள் உறங்கும் போது சுரக்கும் எச்சில் ஒழுகும் படி உறங்குபவராக இருந்தால் அல்லது, உங்களையே அறியாமல் ஒழுகினால், வாயை சுற்றி பாக்டீரியாக்கள் உருவாகும். இதன் காரணத்தால் கூட வாய் துர்நாற்றம் ஏற்படும்.

2) மேலும், தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும் போது வாயின் மூலமாக மூச்சு விடுவோம். இது வாயில் எச்சில் சுரப்பதை தடுக்கும். இதனால், வாய் துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

குறட்டை

மூச்சு திணறல் மட்டுமல்ல, சிலர் உறங்கிய சில நிமிடங்களில் குறட்டை விட ஆரம்பித்துவிடுவார்கள். இவர்களும் வாயில் காற்றை உள்வாங்கும் போது எச்சில் சுரப்பதில் தடை ஏற்படும் இதனாலும் வாய் துர்நாற்றம் உண்டாகிறது.

ஆதாரம் - ஒன்இந்திய நாளிதழ்

3.02631578947
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top