பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அடிவயிற்று வலி ஒத்தவகை நோய்கள்

அடிவயிற்று வலி ஒத்தவகை நோய்கள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுவான அறிகுறிகள்

 • அடிவயிற்று வலி நோய்கள் பெண்களிடம் மட்டும் காணப்படுகிறது
 • இதில் தோன்றும் மிகப் பொதுவான அறிகுறி அடிவயிற்றில் தோன்றும் வலியாகும். குறிப்பாக உடலுறவு நேரத்தில் இந்த வலி தோன்றும்.
 • மாதவிடாய் ஒழுங்கற்று இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
 • சிலசமயங்களில் வெள்ளைப்படுதலும் முதுகெலும்பின் அடிப்பகுதியில் வலியும் தோன்றலாம்
 • ஒரு சில நேரங்களில் காய்ச்சல், உடல்வலி, குமட்டல் மற்றும் வாந்தி முதலிய அறிகுறிகளும் இருக்கலாம்.

சிகிச்சை

 • சினைக்குழாய் மற்றும் சினைப்பையில் வீக்கமடைவதால் அடிவயிற்று வலி ஒத்த நோய்கள் தோன்றும். இதை சிகிச்சை செய்து குணப்படுத்த முடியும்.
 • சரியான முறையில் முழுமையான சிகிச்சை எடுக்க வேண்டும். நோய் அறிகுறிகள் மறைந்தாலும் சிகிச்சையை நிறுத்தக்கூடாது.
 • மருந்து உட்கொள்ளும் போது ஏதாவது தொந்தரவு இருந்தாலோ அல்லது 72 மணி நேரத்திற்குள் நோய் அறிகுறிகள் குறையாமல் இருந்தாலோ நோயாளி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
 • நோய் தொற்று பிறருக்கு பரவாமல் இருக்கவும் சினைக்குழாய் மற்றும் சினைப்பை பகுதியின் வீக்கம் முழுமையாக குணமடைய வசதியாகவும் இருக்க முழுமையான சிகிச்சை முடியும் வரை நோயாளி பிறப்பு வாய் வழி உடலுறவில் ஈடுபடக்கூடாது. அத்துடன் மீண்டும் தொற்று ஏற்படாமல் இருக்க துணைவர் முழுமையாக சிகிச்சை எடுத்து முடியும் வரையும் பிறப்பு வாய்வழி உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உடலுறவில் ஈடுபடாமல் இருக்க இயலாது என்ற சூழ்நிலையில் பிறப்பு வாய் வழி ஆசனவாய் வழி மற்றும் வாய்வழி என்ற எந்த வகை உடலுறவு கொண்டாலும் ஆணுறை அல்லது பெண்ணுறை பயன்படுத்த வேண்டும்.
 • சிகிச்சை ஆரம்பித்த மூன்றாம், ஏழாம் மற்றும் பதினான்காம் நாள் தொடர் கண்காணிப்புக்காக நோயாளி சிகிச்சை மையத்திற்கு வர வேண்டும்.

விளைவுகள்

 • சினைக்குழாய் மற்றும் சினைப்பை வீக்க நோய் காரணமாக நோயாளி கருவுறவாமல் இருக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் மலட்டுத்தன்மை மற்றும் சினைக்குழாயில் கரு தங்கிவிடும் ஆபத்துள்ளது.
 • கர்ப்பிணி பெண்களுக்கு இந்த நோய் காரணமாக குறை பிரசவம் மற்றும் பிரசவ நேரத்தில் குழந்தைக்கும் நோய் பரவும் ஆபத்து ஆகியவை உள்ளது.
 • சினைக்குழாய் மற்றும் சினைப்பை பகுதியின் வீக்கம் காரணமாக தொடர்ந்து அடிவயிற்று வலியும் உடலுறவின்போது வலியும் தோன்றலாம்.

துணைவரைபரிந்துரை செய்தல்

நோயாளி கடந்த ஒரு இரண்டு மாதங்களில் தொடர்பு கொண்ட உடலுறவுத்துணைவர்களுக்கு தனக்கு பால்வினை நோய் உள்ளதை தெரிவித்து அவர்களையும் சிகிச்சை மையத்திற்கு சிகிச்சை பெற அழைத்து வர ஊக்கப்படுத்த வேண்டும்.

எச்சரிக்கை

 • நோயாளி சமீப காலத்தில் கருப்பைக்குள் செலுத்தப்படும் கருத்தடை சாதனமான காப்பர் டி பொருத்தியிருக்கிறாரா என்பதை கலந்தாலோசகர் கண்டறிய வேண்டும்.
 • சினைக்குழாய் மற்றும் சினைப்பை பகுதியின் வீக்கம் உள்ள பெண்களுக்கு சினைக்குழாய் கர்ப்பம் என்ற உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் கலந்தாலோசகர் கீழ்க்கண்டவற்றை நோயாளியிடம் தெரிவிக்க வேண்டும்.
 • நோயாளி கருவுற்றிருந்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று சினைக்குழாயில் கர்ப்பம் உள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும். கீழ்க்குறிப்பிட்ட சினைக்குழாய் கர்ப்பத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்:
 • மாதவிடாய் காலதாமதமாதல், இயல்புக்கு மாறான மிகக்குறைந்த உதிரப்போக்கு, ஒழுங்கற்ற உதிரப்போக்கு மற்றும் அடிவயிற்று வலியுடன் கூடிய உதிரக்கசிவு. அடிவயிற்றின் ஏதாவது ஒரு பக்கத்தில திடீரெனத் தோன்றும் ஆழமான வலி, ஒருசில மணித்துளிகள் தோன்றும் மயக்கம் அல்லது தலை சுற்றல் (உட்புற உதிரக்கசிவு காரணமாக இருக்கலாம்)
 • அடிவயிற்றுவலிக்காக மருந்து எடுத்துக்கொள்ளும் போது மது (பீர், பிராந்தி, ஒயின்) அருந்தினால் சில உடல் உபாதைகள் ஏற்படலாம் (குமட்டல், வாந்தி, படபடப்பு, மயக்கநிலை). இவற்றை தவிர்க்க நோயாளி கடைசியாக மருந்து உட்கொண்ட 24 மணி நேரத்திற்கு எந்த விதமான மதுவும் அருந்தக்கூடாது என்று கலந்தாலோசகர் கூற வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்

3.04166666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top