பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அரையாப்பு கட்டி ஒத்த வகை நோய்கள்

அரையாப்பு கட்டி ஒத்த வகை நோய்கள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுவான அறிகுறிகள்

 • அரையின் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்கங்களிலுமோ வலியுடன் கூடிய வீக்கம்.
 • பொதுவாக இனஉறுப்பில் புண்கள் இருக்காது
 • சிலசமயம் வீக்கம் உடைந்து குழிவுப்புண்ணாகி சீழ் வடியும்
 • இது பால்வினை நிணநீர் கட்டி என்றும் அழைக்கப்படுகிறது

சிகிச்சை

 • பால்வினை நோய் சிகிச்சை முறைகளில் அதிக நாட்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ள சிகிச்சை இதுதான் (21 நாட்கள்). எனவே இந்த சிகிச்சை முறை பற்றி நோயாளிக்கு தெளிவாக விளக்கிக்கூற வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டு முடிக்க வேண்டும். நோய் அறிகுறிகள் மறைந்தாலும் மருந்து சாப்பிடுவதை நிறுத்தக்கூடாது.
 • நோயாளி மருந்து சாப்பிட்ட பின் ஏதாவது தொந்தரவு இருந்தாலோ அறிகுறிகள் மறையாமல் இருந்தாலோ உடனே சிகிச்சை மையத்திற்கு செல்ல வேண்டும்
 • முழுமையாக சிகிச்சை முடியும் வரை யாருக்கும் நோய் தொற்று பரவாமல் இருக்க நோயாளி யாருடனும் உடலுறவு கொள்ளக்கூடாது (21 நாட்களுக்கு). அத்துடன் மீண்டும் தொற்று ஏற்படாமல் இருக்க அவரது துணைவர் 21 நாட்களுக்கு சிகிச்சை முடிக்கும் வரை அவருடன் உடலுறவு கொள்ளாமல் இருக்க வேண்டும். உடலுறவு கொள்ளாமல் இருக்க முடியவில்லை என்றால் நோயாளி ஒவ்வொரு உடலுறவுக்கும் முறையாக தொடர்ந்து ஆணுறை பயன்படுத்த வேண்டும் (பிறப்பு வாய்வழி ஆசனவாய்வழி அல்லது வாய்வழி எந்தவகை உடலுறவாக இருந்தாலும்).
 • நோயாளி 7ம், 14ம் மற்றும் 21ம் நாள் சிகிச்சை மையத்திற்கு தொடர் கண்காணிப்புக்கு வர வேண்டும். உடலுறவுத் துணைவர்களும் ஒரே சமயத்தில் இவர்களுடன் சேர்ந்து 21 நாட்களுக்கு அதே மருந்தை உட்கொள்ள வேண்டும்.

மருந்து

 • டாக்சிசைக்ளின் (100மிலி) ஒரு நாளைக்கு இரண்டு வேளை 21 நாட்களுக்கு
 • அசித்ரோமைசின் (1 கிராம்) - ஒரே முறை ஒரு நாள் மட்டும்.

விளைவுகள்

 • முறையாக சிகிச்சை செய்யாமல் விட்டாலோ அரைகுறையாக சிகிச்சை எடுத்தாலோ அரையாப்பு கட்டிஅரைப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தி வலியுள்ள பல புண்கள், சீழ் கசிவுகள், இனஉறுப்பில் வீக்கம், ஆசனவாயில் கசிவுகள், இரத்தக்கசிவு மற்றும் ஆசனவாய் சுருங்குதல் ஆகியவை ஏற்பட காரணமாக அமைந்துவிடும்.
 • சிகிச்சை செய்யாமல் விட்டுவிட்டால் இனஉறுப்பு வீக்கமடைந்து சிதைவடையவும் வாய்ப்புள்ளது.

எச்சரிக்கை

ஒரு சில மருந்துகளை கர்ப்பகாலத்தில் உட்கொள்வது ஆபத்தானது. எனவே நோயாளியின் அல்லது அவரது பெண் துணைவரின் கர்ப்ப நிலையை தெரிந்து கொண்டு மருந்து கொடுப்பது நல்லது.

ஆதாரம் : தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்

2.95294117647
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top