অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பாலினத்தின் மூலம் பரவக் கூடிய நோய்த்தொற்றுகள்

பாலினத்தின் மூலம் பரவக் கூடிய நோய்த்தொற்றுகள்

நோய் பரப்பும் நுண்ணுயிரிகள்

நோய் பரப்பும் நுண்ணுயிரி

நோய்கள்

நைசிரியா கொனோரியா

கொனோரியா

ட்டிரபோனிமா பெல்லிடம்

சிபிலிஸ்

ஹிமோபிலிஸ் ஸக்ரைல்

ஜன்கிராய்டு

க்ளமிடியா ட்ரக்கோமைட்டிஸ்

புதியதாக பிறக்கின்ற குழந்தைக்கு கண் இமைகளில் தொற்று.

ஹெர்டிஸ் சாதாரண வைரஸ்

பிறப்பு உறுப்புகளில் புண்

ஹெப்படைடிஸ் வைரஸ்

தீவிர மற்றும் நாள்பட்ட ஹெப்படைட்டிஸ்

மனித பாப்பில்லோமா வைரஸ்கள்

ஆசனவாய் மற்றும் பிறப்பு உறுப்புகளில் மருக்கள்

ஹியூமன் அமினோ டைபிசியன்சி வைரஸ் (HIV)

எய்ட்ஸ்

கான்டிடா சூல்பிகன்ஸ்

கருவாயில் நோய்தொற்று

ட்ரைக்கோமோனஸ் வெஜினாலிஸ்

(Vaginitis)

சிபிலிஸ்

சிபிலிஸ் என்பது எளிதில் தொற்றிக் கொள்ளக்கூடிய ஒரு ஆபத்தான நோய்.

நோய் பரப்பும் நுண்ணுயிரி: ட்டிரபோனிமா பெல்லிடம்.

பரவும் விதம்: விபத்துக்குள்ளான நோய்த் தொற்று, பாலின உறவு.

வகைகள்: தொற்றுதல் மூலம் ஏற்படும் சிபிலிஸ் பிறவியிலேயே ஏற்படும் சிபிலிஸ்

தொற்றுதல் மூலம் ஏற்படும் சிபிலிஸ்: சவ்வு படலத்திலும் அல்லது தோலிலும் சிறிய புண்கள் வழியாக இக்கிருமிகள் உடலினுள் நுழைகின்றது.

பிறவியிலேயே ஏற்படும் சிபிலிஸ்:

மேக நோய் உள்ள பெண் கருவுற்று இருந்தால் அந்த நோயைத் தன் கருவுக்கு நஞ்சுக் கொடி மூலம் பரவக்கூடிய வாய்ப்புகள் இருக்கும்.

அறிகுறிகள்:

வலி இல்லாத, கடினமான சிவப்பு நிறத்தில் வரக்கூடிய புண், நிணநீர் சுரப்பிகள் பெரியதாக காணப்படுதல். மண்ணீரலில் புண் ஏற்படும். வாய், தொண்டை பகுதிகளில் புண்கள் காணப்படும், கண் மற்றும் மூளை ஜவ்வில் தொற்று. கால்களில் புண் அல்லது இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அனுரிசம் ஏற்படும். நடு நரம்பு மண்டலத்தில் பாதிப்பும் ஏற்படும்.

சிகிச்சை: ஆன்டிபயாடிக்ஸ் - பென்சிலின், டாக்சி சைக்கிளின் மற்றும் எரித்ரோமைசின்.

கொனோரியா

(மேக வெட்கை நோய்) பால்வினை சார்ந்து பரவும் நோயாகும். இவை பால் இன சேர்க்கையின் போது பரவுகிறது.

நோய் பரப்பும் நுண்ணுயிரி: நைசிரியா கொனோரியா

நோய் முற்றும் காலம் : 3 - 10 நாட்கள்

பரவும் விதம்: பாலினத் தொடர்பு

அறிகுறிகள்:

சிறுநீர் கழிக்கும் போது வலி இருத்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர்ப்புற வழியிலும் மற்றும் சிசுத்தாரை பகுதியிலும் மஞ்சள் நிற ஓழுக்குகள் காணப்படும்.

பெண்களுக்கு - பெல்லோபியன் குழாய்களில் நோய்த்தொற்று, இடுப்பு எலும்பு கூட்டுக்குள் நோய்த் தொற்று.

சிகிச்சை: ஆன்டிபயாட்டிக்ஸ் - சிப்ரோபிளாக்சசின், சிப்ரி ஆக்சின், சிபிக்ஸிம்

ஜான்சான்கிராய்டு

பிறப்பு உறுப்புகளில் ஏற்படும் நோய்த் தொற்று, இவை தீவிரமாக உள்வாங்கிக் கொள்ள கூடியது. இது ஒரு சூடோ நோய் தொற்று ஆகும்.

நோய் பரப்பு நுண்ணுயிரி: ஹிமோபிலஸ் ஸக்ரைல்

நோய் முற்றும் காலம் : 1 - 5 நாட்கள், 30 நாட்கள் வரை கூட சில சமயங்களில் இருக்கலாம்.

அறிகுறிகள்:

கொப்பளம், குறுகலான, மிகவும் பிரகாசமான எரித்திமா தொற்றை சுற்றி காணப்படும். மற்றும் கொப்பளங்கள் உடைந்து வலி அதிகம் இருக்கும். புண்களில் அதிக இரத்த ஓட்டம் இருப்பதால் தொட்டவுடன் உடனடியாக இரத்த போக்கு தென்படும்.

சிகிச்சை : சிரோபிளாக்ஸஸின், எரித்ரோமைசின், செப்டிரியாக்சோன் மற்றும் அசித்ரோமைசின் கொடுக்கலாம்.

பிறப்பு உறுப்பு ஹெர்பிஸ் (Genital Herpes)

ஹெர்பிஸ் சிம்பிளக்ஸ் வைரஸ் வகை 2 என்ற கிருமியினால் ஆரம்ப நிலை பிறப்பு உறுப்பு ஹெர்பிஸ் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

ஆரம்பத்தில் கொப்புளங்களாக தோன்றி அது வலுவடைந்து அதிக அளவில் கொப்புளங்களும், புண்களும் ஏற்படும். புண்கள் மிகவும் தொற்றுள்ளதாக இருப்பதால் அடிக்கடி வருவதற்கு வாய்ப்புகள் இருக்கும். ஆகவே குணமடைய கூடிய வாய்ப்புகள் குறைவு.

சிகிச்சை :

வாய் வழியாக கொடுக்கும் ஆன்டி வைரஸ் மருந்துகள் அவை ஏசைக்ளோவின், வேன்குளோர், பேமிசைக்ளோவின், இவ்வகை மருந்துகள் நோயின் முதல் நிலை வீரிய தன்மையை குறைக்கும்.

பாலின நோய்களை தடுக்கும் விதம்: ஒருவனுக்கு ஒருத்தி இல்லற வாழ்க்கை வாழவேண்டும். ஒழுங்கான பாலின கல்வி அளிக்கப்பட வேண்டும். பெரிய அளவில் சுகாதார கல்வி அளிக்க வேண்டும். தனிப்பட்ட பாதுகாப்பு அளித்தல் மற்றும் விலை மாதர்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

கட்டுப்படுத்துதல்:

அறிவித்தல், சுகாதார அலுவலர்களுக்கு தெரியப்படுத்துதல், பாலின உறவை நோயாளிகளிடம் தவிர்க்க வேண்டும்.

வெளிபுண்களில் இருந்து வரும் ஒழுக்குகள் சேகரிக்கப்பட்டு மற்றும் தொற்று நீக்கப்பட வேண்டும்.

கர்ப்பிணி தாய்க்கு சிபிலிஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தாய்க்கு சரியான சிகிச்சை அளித்தால் குழந்தையை பிறப்பின் போது பாதிக்கூடிய சிபிலிஸ் நோய் வராமல் தடுக்கலாம்.

நோயை கண்டறிந்து, நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயாளியை பாதுகாக்க முடியும்.

எய்ட்ஸ்

எயிட்ஸ் என்பது மனித நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் வைரஸ் காரணமாக ஏற்படுகிறது. இது ரிட்ரோவைரஸின் மூலம் பரவுகிறது.

நோய் பரப்பும் நுண்ணுயிரி: மனித எதிர்ப்பு சக்தியை குறைக்கும் வைரஸ் (HIV)

நோய் முற்றும் காலம் : 6 வருடங்களுக்கு மேல்,

பரவும் விதம்: தவறான உடலுறவினால், தொற்றுள்ள இரத்தத்தை நோயாளிக்கு கொடுப்பதால், மகப்பேற்றின் போது தாயிடம் இருந்து சிசுவுக்கு

அறிகுறிகள்:

நோய் எதிர்ப்பு சக்தியில் வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கும். தொற்றுள்ள மனிதர்களிடமிருந்தும், நோயின் அறிகுறிகள் வெளியில் தெரியாமல், பொதுவாக நிணநீர் சுரப்பிகளில் பாதிப்பு ஏற்படும்.

எய்ட்ஸ் மற்றவைகளை சார்ந்திருத்தல் : ஒரு மாதத்திற்கு மேல் உள்ள பேதி, ஒரு மாதத்திற்கு மேல் தொடரும் காய்ச்சல், உடல்நலக் குறைவு, சோர்வு, மயக்கம், உடலின் எடை 10% குறைதல், காய்ச்சல், இரவில் வியர்த்தல் (அ) வாய் மற்றும் தொண்டையில் பூஞ்சைக் காளான் நோய்த்தொற்று.

எய்ட்ஸ் என்பது HIV நோய்த்தொற்று இறுதி நிலையாகும். அதன் அறிகுறிகளாவன :

- தொடர்ந்து இருக்கும் இருமல்.

- தோலில் ஏற்படும் சுழற்சி மற்றும் நிறமாற்றம்

- HerpesZoaster தொற்று அடிக்கடி ஏற்படுதல்

- உணவுப்பாதையில் ஏற்படும் பாதிப்புகள்

- நிணநீர் முடிச்சுகளின் வீக்கம்.

சிகிச்சை: ஆன்டி ரிட்ரோ வைரஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்டார் ஆன்டி ரிட்ரோ வைரஸ் சிகிச்சை

ஜிடாவுடின் - 500 - 600 மி.கி. வாய் வழியாக தவணைகளில் டீயூடனோசின் - 12 - 300 மி.கி. வாய் வழியாக இரண்டு முறை சால்சிடபின் - 0.375 - 0.75மி.கி. வாய்வழியாக மூன்று முறை ஸ்டாவிடின் - 40 மி.கி. வாய்வழியாக 2 வேளை, லெமிவிடின் - 150 மி.கி. வாய் 2 தடவை, அபக்கவிர் - 300 மி.கி. வாய் வழியாக 2 தடவை

எய்ட்ஸை கட்டுப்படுத்துதல்

1. நோயாளியை கவனிக்கும் போது நோய்த் தொற்று வராமல் பாதுகாப்பான முறைகளை கடைப்பிடித்தல்.

2. ஊசிகளையும், சிரிஞ்சுகளையும் பகிர்ந்துக்கொள்ளும் போது மிகவும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துதல்.

3. கருவுற்ற பெண்களுக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கும் எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்க வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

4. மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகள் தரப்பட வேண்டும்.

5. பாதிப்புக்கு உள்ளடக்கி உள்ள நபருக்கு இரத்தத்தானம் கொடுக்க வேண்டும். பாதிப்புள்ள நோயாளிகள் இரத்ததானம் கொடுக்கக் கூடாது.

6. கருவுற்றிருக்கும் தாய்மார்க்கு ஹெச் ஐ.வி. பரவாமல் தடுக்க வேண்டும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate