பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பாலியல் தொற்றுநோய்கள்

பாலியல் தொற்றுநோய்கள் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள்

இந்நோய்கள் உடலுறவால் பரவக்கூடியவை. நோய் உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள், பாலியல் உறுப்புகள் , விந்து மற்றும் பெண்ணுறுப்பு திரவங்கள் மற்றும் வாய், தொண்டை, குதம் போன்ற இடங்களில் காணப்படும்.

உடலுறவால் தொற்றும் சில நோய்கள்

 • சிபிலிஸ் – Syphilis,
 • ஹெர்பிஸ் – Herpes,
 • கொனோரியா – Gonorrhea
 • நான் கோனோகோக்கல் யுரித்ரைடிஸ் – Non Gonococcal Urethritis
 • சான்கிராயிட் – Chancroid
 • டிரைகோமோனஸ் வஜைனாலிஸ் – Trichomonas Vaginalis
 • வார்ட்ஸ்( ஹெச்.பி.வி) – Warts - Human Papilloma Virus -HPV
 • லிம்போகிரானுலோமா வெனீரம் - Lymphogranuloma venereum

பாலியல் நோய் அறிகுறிகள்

 • பாலுறுப்புகளில் புண்கள்,
 • பாலுறுப்பு பகுதிகளில் வித்தியாசமான வளர்ச்சி,
 • சிவப்பு நிற தழும்புகள்,
 • விதை வீக்கம்,
 • பெண்களுக்கு அடி வயிறு வலி,
 • சிறுநீர் அடிக்கடி கழித்தல், வலி,

பாலியல் நோய்கள் அதிகரிக்க காரணங்கள்

 • பாலியல் நோய் அறிகுறி உள்ளவருடன் அல்லது நோய் உள்ளவருடன் உடலுறவு,
 • ஒருவருக்கு மேற்பட்டோரிடம் உடலுறவு,
 • பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் துணையுடன் உடலுறவு கொள்ளுதல்,
 • பணம், உணவு, உறையுள் போன்ற விடையங்களுக்காக் பல முறை உடலுறவு கொள்ளல்,
 • அதிக பயணம் செய்வோர்,
 • நீண்ட கால தாம்பத்திய வாழ்க்கை அற்றவர்கள்.

பாலியல் நோய்கள் தொற்றுவது எவ்வாறு

 • உடலுறவு-வாய், யோனி, குத உடலுறவு,
 • தாயிலிருந்து குழந்தைக்கு- பிரசவம் மற்றும் பாலூட்டல்,
 • ஊசிகள் பகிர்ந்து கொள்ளல்,
 • சோதனை செய்யப்படாத இரத்த ஏற்றம்,
 • மருத்துவ பரிசோதனையின் போது கவனமின்மை

பாலியல் நோய்களின் விளைவுகள்

பலோபியன் குழாய் சேதத்திற்கு பாலியல் நோய்கள் மிகமுக்கிய காரணமாகும்.

 • பிரசவத்தின் போது குணப்படுத்தாத சிபிலிஸ் மூலம் 4ல் ஒரு குழந்தை இறந்து பிறக்கிறது.
 • HIV போன்ற பாலியல் நோய்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, மரணத்தையும் ஏற்படுத்தலாம்.
 • HPV வைரஸ் மூலம் கருப்பை கழுத்து புற்று நோய் ஏற்படலாம்

கொனோரியா அறிகுறிகள்

பெண்: அறிகுறிகள் இல்லை,

யோனி வெளியேற்றம்

சிறுநீர் கழிக்கும் போது வலி

ஆண்: வெளியேற்றம் மற்றும் வலி

ஹெர்பிஸ் அறிகுறிகள்

பெண்: வலிமிக்க புண்கள், பெண்ணுறுப்பு, யோனிமடல், குதம், தொடை பகுதிகளில்

ஆண்: ஆண்குறியில் வலி மிகுந்த புண்கள், தலைவலி, மூட்டு வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் காணப்படலாம், 70% பேர் நோய் அறிகுறி அற்றவர்கள், நோய் ஏற்பட்ட பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு மீண்டும் நோய் ஏற்படலாம். இரண்டாம் முறை சிறிய, குறைவான புண்கள் வரும். கால், இடுப்பு, தொடை பகுதிகளில் வலி ஏற்படலாம்.

நான் கோனோகோக்கல் யுரித்ரைடிஸ் கிளாமீடியா – அறிகுறிகள்

பெண்: அறிகுறிகள் இல்லை, பெண்ணுறுப்பு யோனி திரவ வெளியேற்றம் சிறுநீர் கழிக்கும் போது வலி,

ஆண்: அறிகுறிகள் இல்லை சிலவேளை ஆணுறுப்பு திரவ வெளியேற்றம் மற்றும் வலி.

சிபிலிஸ் - அறிகுறிகள்

பெண்: வலியற்ற புண்: யோனி, கருப்பை கழுத்து, வாய், மூக்கு, குதம் பகுதிகளில்.

ஆண்: ஆண் குறி, மூக்கு, வாய், விதையில் வலியற்ற புண்கள், குணப்படுத்தவில்லை எனில் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை சிபிலிஸ்க்கு முன்னேறும், ஆரம்ப புண்கள் சில நாட்களில் குணமடைந்து விடும். அதன் பின் காய்ச்சல், நிண்நீர் கட்டி, ஈரல் வீக்கம், மூட்டு வலி ஏற்படும், இந்த அறிகுறிகள் பல நாட்கள் அல்லது மாதங்கள் காணப்படும்.

சான்கிராயிட் – அறிகுறிகள்

பெண்: வலி மிக்க, வடிவமற்ற புண்கள், பெண்ணுறுப்பு, யோனி அருகே மற்றும் குதம் அருகே. சிறு நீர் கழிக்கும் போது எரிச்சல்,குதம் வழியாக இரத்தம் சிலவேளை அறிகுறிகள் இல்லை

ஆண்: வலி மிகுந்த வடிவமற்ற புண்கள் ஆண்குறியில்

ஓமியோபதி சிகிச்சை

நோயின் அறிகுறிக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலனளிக்கும். பாதுகாப்பான பக்கவிளைகள் இல்லாத ஹோமியோபதி மருந்துகள் நோய் அறிகுறிகள் விரைவில் குறைய வைக்கும்.

ஆதாரம் : விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம், சென்னை

3.05607476636
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top