பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / பால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய் / பாலியல் நோயின் கலந்தாலோசகருக்கான குறிப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பாலியல் நோயின் கலந்தாலோசகருக்கான குறிப்புகள்

பாலியல் மற்றும் இனப்பெருக்க மண்டல நோயின் கலந்தாலோசகருக்கான குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கலந்தாலோசகர்களுக்கான குறிப்புகள்

  • சுகவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு வேறு நலத்தேவைகளும் இருக்கலாம். அவற்றில் ஒன்று பாலியல் மற்றும் இனப்பெருக்க மண்டல நல சேவைகளாகும். இத்தகைய சில சேவைகளுக்காக கலந்தாலோசகர் உருவாக்க வேண்டிய இணைப்புகளைப் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன.
  • உங்கள் பகுதியில் கிடைக்கும் சேவைகளைப் பற்றிய அட்டவணையை தயார் செய்யவும்.
  • உங்களிடம் சரியான முகவரி மற்றம் தொலை பேசி எண்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  • நோயாளி அந்த சேவைகளை பெறுவதற்கு உதவியாக எளிமையாக மற்றும் தெளிவாக வழிகாட்டவும்.

பாலியல் மற்றும் இனப்பெருக்க மண்டல நலம்

உங்களது கலந்தாய்வில் நீங்கள் பல இளம் வயதினரை சந்திப்பீர்கள். ஆனால் இளவயதினருக்கு வேறுபல நலத்தேவைகளும் இருக்கலாம். உங்களது சேவைகள் அவர்களது அனைத்து தேவையையும் நிறைவு செய்வதாக இருக்காது. எனவே நீங்கள் அவர்களை அர்ஷ் கிளினிக் என்று அழைக்கப்படும் விடலைப் பருவத்தினருக்கான இனப்பெருக்க மற்றும் பாலியல் நலமையத்திற்கு பரிந்துரை செய்யவும்.

மருத்துவ முறையில் கருக்கலைப்பு செய்தல்

கருவுற்ற ஒருசில பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்புவார்கள். அதற்கு மருத்துவமனையில் உள்ள கருக்கலைப்பு செய்யும் துறைக்கு அவர்களை பரிந்துரை செய்ய வேண்டும். ஒருசில தனியார் கருக்கலைப்பு மையங்களைப் பற்றிய தகவலும் உங்களிடம் இருப்பது நல்லது. ஏனெனில் சில நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல விரும்புவார்கள்.

பிரசவத்திற்கு பின் தேவைப்படும் சேவைகள் : உங்களிடம் வரும் பயனாளிகளில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் கர்ப்பிணிப் பெண்களாக இருக்கலாம். அவர்களில் ஒருசிலர் பிரசவத்திற்கு பின் உங்களை சந்திக்க வரலாம். அவர்களது தேவைகள் குழந்தை பிறப்பு தொடர்பானதாக இருக்கலாம். ஒரு சிலருக்கு கருத்தடை தொடர்பான உதவி தேவைப்படலாம். இதற்கு உதவுவதற்கு அவர்கள் எங்கெங்கு கருத்தடை மாத்திரைகள், காப்பர் டி, ஆணுறை மற்றும் பிற கருத்தடை சாதனங்கள் ஆகியவற்றை பெறலாம் என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கருத்தரிக்காமைக்கான சிகிச்சை

பால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய் தொற்றுக்களின் விளைவாக கருவுறுதல் தடைபடலாம். இது குழந்தை பெற வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு மிக அதிர்ச்சியை கொடுக்கக்கூடிய நிலையாகும். இத்தகையவர்கள் இதற்கான பரிசோதனையை செய்து சிகிச்சையை எங்கு பெறுவது என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

ஆண்குறி விரைப்படைவதில் குறைபாடு

  • பாலுறவைப்பற்றி பேசாமல் பால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய் தொற்றுக்களைப்பற்றி பேச இயலாது. இவ்வாறு பேசும்போது ஆண்கள் தங்களது பாலுறவு தொடர்பான பிரச்சனைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். இவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படும் மிகப் பொதுவான பிரச்சனை ஆண்குறி விரைப்படைவதில் உள்ள குறைபாடு ஆகும். இதற்கு எங்கு சிகிச்சை கிடைக்கும் என்பதை அறிந்து அங்கு நோயாளிக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
  • சரியான மற்றும் தக்க நேரத்தில் தகவல்கள் வழங்கி நோயாளியின் சிரமத்தை போக்கி அவரது ஆரோக்கியத்தை நிலைநாட்டுவது கலந்தாலோசகரின் தொழில்தர்மமாகும்.
  • பால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய் தொடர்பான சேவைளையும் தாண்டி நோயாளிக்கு உதவுவது நோயாளி கலந்தாலோசகர் மேல் நம்பிக்கை வைக்க உதவும்.
  • கலந்தாலோசகர்கள் தங்கள் பயனாளிகளை மதிப்பீடு செய்யக்கூடாது.

ஆதாரம் : தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top