பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பாலுண்ணி

பாலுண்ணி பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுவான அறிகுறிகள்

  • இவை பல மென்மையான வழுவழுப்பான முத்து போன்ற வலியற்ற கொப்புளங்களாகும்.
  • இவை உடலின் எந்த பகுதியிலும் தோன்றலாம். இவை உடலுறவால் ஏற்படும்போது இனஉறுப்புகளில் தோன்றுகின்றன.
  • இவை முகத்திலும் தோன்றலாம் ஆனால் அது பெரியதாக இருக்கும்.

தடுப்பு

சிகிச்சை முழுமையாக முடியும் வரை மற்றும் அனைத்து பாலுண்ணிகளும் முழுமையாக மறையும் வரை நோயாளி எந்த வகையான உடலுறவிலும் ஈடுபடக்கூடாது. உடலுறவை முழுமையாக தவிர்க்க இயலாதவர்கள் ஆசன வாய், வாய்வழி மற்றும் பிறப்புறுப்பு வழி என்ற அனைத்து வகை உடலுறவுக்கும் முறையாக ஆணுறை பயன்படுத்தி உடலுறவு கொள்ள வேண்டும்.

சிகிச்சை

  • நோயாளியும் உடலுறவுத்துணைவரும் முறையாக முழுமையாக சிகிச்சை எடுப்பதன் மூலம் குணப்படுத்த முடியும்.
  • ஒவ்வொரு பாலுண்ணியையும் ஊசி முனையைக் கொண்டு திறந்து உட்பகுதியை 30மூ ட்ரைக்ளோர் அசிட்டிக் அமிலம் கொண்டு தொடவேண்டும்
  • ஒருசிலருக்கு 7 நாட்கள் கழித்து மீண்டும் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்
  • சில பாலுண்ணிகளை தீய்த்து சிகிச்சையளிக்கப்படுகிறது

விளைவுகள்

  • இவற்றை முறையாக கண்டறிந்து சிகிச்சையளிக்காவிட்டால் இவை உடல் முழுதும் பரவிவிடும்.
  • மற்ற மேல் தொற்று ஏற்பட்டு சீழ் வைக்கும் நிலை ஏற்படும்.

ஆதாரம் : தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்

3.1095890411
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top