பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பெல்விக் இன்ப்ளமேட்டரி டிஸ்ஸிஸ் - பிஐடி

பிஐடி ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பெல்விக் இன்ப்ளமேட்டரி டிஸ்ஸிஸ் என்பது கருப்பை, பெல்லோபியன் டியூப் (கருவகத்திலிருந்து கருப்பைக்கு பெண் முட்டையினை ஏந்திச்செல்லும் குழாய்கள்) மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் நோய் தொற்றுவினை குறிக்கும் பொதுவான வார்த்தை ஆகும்.

பிஐடி பெண்களுக்கு எப்படி ஏற்படுகிறது?

நோய் உண்டாக்கும் பாக்டீரியா, பெண்ணின் பெண்குறியிலிருந்து  மேல்நோக்கி நகர்ந்து மற்ற இனப்பெருக்க உறுப்புகளுக்குள் செல்லும் போது பிஐடி ஏற்படுகிறது. பல்வேறுபட்ட உயிரிகளால் பிஐடி ஏற்படுகிறது. ஆனால் பெரும்பாலான காரணிகள், கொனேரியா மற்றும் க்ளமிடியா எனும் பொதுவான பாக்டீரியாவாகும். பிள்ளை பெறக்கூடிய வயதுடைய, பாலுறவில்  ஈடுபடும் பெண்களுக்கு பிஐடி ஏற்படும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக, 25 வயதிற்குட்பட்ட பெண்களில், பிஐடி அதிகளவில் ஏற்படக்கூடும். ஏனெனில், இளம் மற்றும் வாலிபப் பெண்களில், கருப்பையின் கழுத்துப் பகுதி (செர்விக்ஸ்) முழுவதும் முதிர்ச்சி அடைவதில்லை. இதனால் அப்பெண்களில் பிஐடி-யுடன் தொடர்புடைய பால்வினை நோய்களின் பாதிப்பு அதிகரிக்கிறது.

பிஐடி -யின் அறிகுறிகள் யாவை?

பிஐடி-யின் அறிகுறிகள், ஒன்றுமில்லாததிலிருந்து கடுமையானது வரை காணப்படும். க்ளமிடியா நோய் தொற்றுவினால் பிஐடி ஏற்படும் போது, ஒரு பெண் இந்நோய்க்கான மிதமான அறிகுறிகளை உணரலாம் அல்லது எந்த நோய் அறிகுறியுமின்றி காணப்படலாம். ஆனால், அப்பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளில் கடுமையான சிதைவுகளை ஏற்படுத்துகிறது. பெண்களில், பிஐடி அறிகுறிகளாவன, அடிவயிற்று வலி, காய்ச்சல், வழக்கத்திற்கு மாறாக பெண்குறியிலிருந்து துர்நாற்றத்துடன் கூடிய கசிவு, பாலுறவின் போது வலி ஏற்படுதல்,மூத்திரம் கழிக்கும் போது வலி மற்றும் ஒழுங்கற்ற (அ) முறையற்ற மாதவிடாய் இரத்தப்போக்கு போன்றவை அடங்கும்.

2.93103448276
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top