பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / பால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய் / வாய் மற்றும் ஆசனவாயில் தோன்றும் பால்வினை நோய்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வாய் மற்றும் ஆசனவாயில் தோன்றும் பால்வினை நோய்கள்

வாய் மற்றும் ஆசனவாயில் தோன்றும் பால்வினை நோய்கள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுவான அறிகுறிகள்

 • நோயாளியின் வாய் அல்லது ஆசனவாய் பகுதியில் புண்கள், இரணம், கொப்புளங்கள், கசிவுகள் மற்றும் வளர்ச்சிகள் தோன்றலாம்

பரவுதல்

 • இவை கொனோரியா, கிளாமிடியா, சிபிலிஸ், மற்றும் இன உறுப்பில் தோன்றும் அக்கிகளால் உண்டாகும்.

சிகிச்சை

 • பெரும்பாலான வாய் மற்றும் ஆசனவாய் பால்வினை நோய்களை ஒரே வேளை ஒரு நாள் மட்டும் மருந்தினால் குணப்படுத்த முடியும்.
 • ஒருசில பால்வினை நோய்களுக்கு மருந்துகளுடன் வேறு வகை சிகிச்சையும் தேவைப்படும்.
 • இதற்கான சிகிச்சையை சிகிச்சை மையத்தில் மருத்துவ பணியாளரின் முன்னிலையில் எடுக்க ஊக்கப்படுத்த வேண்டும். ஏனெனில் இது டாட்ஸ்-எஸ்டிஐ (நேரடியாக கண்காணிக்கும் குறுகிய கால சிகிச்சை)
 • நோயாளியின் உடலுறவுத்துணைவர்களுக்கும் இதே சிகிச்சையளிக்க வேண்டும்.
 • முழுமையான சிகிச்சை முடியும் வரை நோயாளி உடலுறவில் ஈடுபடக்கூடாது. அத்துடன் மீண்டும் தொற்று ஏற்படாமல் இருக்க, துணைவர் முழுமையாக சிகிச்சை எடுத்து முடியும் வரையும் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உடலுறவில் ஈடுபடாமல் இருக்க இயலாது என்ற சூழ்நிலையில் பிறப்பு வாய் வழி,  ஆசனவாய் வழி மற்றும் வாய்வழி என்ற எந்த வகை உடலுறவு கொண்டாலும் ஆணுரை அல்லது பெண்ணுரை பயன்படுத்த வேண்டும்.
 • சிகிச்சை முடிந்த ஏழாம் தொடர் கண்காணிப்புக்காக நோயாளி சிகிச்சை மையத்திற்கு வர வேண்டும்.

மருந்து

 • அசித்ரோமைசின் 1 கிராம் ஒரே வேளை ஒரு நாள் மட்டும் செஃபிக்சிம்  400 மிகி ஒரே வேளை ஒரு நாள் மட்டும்

விளைவுகள்

 • ஆண்களுக்கு மலக்குடல் ஆசனவாய் கசிவுகள் அதிக வலியுண்டாக்கலாம், உள் மூலம், மலக்குடல் இறுக்கமடைதல் ஆகிய விளைவுகளால் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படலாம்.
 • ஆண் பெண் இருவருக்கும் ஆசனவாயில் ஏற்படும் புண்களால் அப்பகுதியில் உள்ள நிணநீர் முடிச்சிகளில் வீக்கம் ஏற்பட்டு வலியுள்ள பல புண்கள் ஏற்பட்டு அவற்றில் நீர் வடியும்
 • கர்ப்பிணி பெண்களுக்கு இந்த நோய் காரணமாக கருச்சிதைவு, குறை பிரசவம் மற்றும் பிரசவ நேரத்தில் குழந்தைக்கும் நோய் பரவி கண் நோய் ஆகியவை ஏற்படும் ஆபத்து ஆகியவை உள்ளது.

துணைவரைபரிந்துரை செய்தல்

 • நோயாளி கடந்த இரண்டு மாதங்களில் தொடர்பு கொண்ட உடலுறவுத்துணைவர்களுக்கு தனக்கு பால்வினை நோய் உள்ளதை தெரிவித்து அவர்களையும் சிகிச்சை மையத்திற்கு சிகிச்சை பெற அழைத்து வர ஊக்கப்படுத்த வேண்டும்.

எச்சரிக்கை

ஒரு சில மருந்துகளை கர்ப்ப காலத்தில் உட்கொள்வது பாதுகாப்பானதல்ல. எனவே சிகிச்சைக்கு முன் நோயாளி கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை கேட்டு அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்

3.03658536585
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top