பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நரப்பிசிவு நோய் (வில்வாதசன்னி)

நரப்பிசிவு நோய் (வில்வாதசன்னி) பற்றிய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.

அறிமுகம்

எலும்புத் தசை நார்களின் நீடித்த சுருக்கமே நரப்பிசிவு நோயின் மருத்துவ இயல்பாகும். கிளாஸ்டிரிடியம் டெட்டானி (Clostridium tetani) என்ற கிராம்-நேர்மறை, குச்சிவடிவ, பிணைப்புற்ற, காற்றின்றி வாழும் பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் நரம்புநச்சான டெட்டனோஸ்பேஸ்மினால் முதன்மையான நோயறிகுறிகள் தோற்றுவிக்கப்படுகின்றன. இத்தொற்று பொதுவாக உடல் முழுவதும் வலியோடு கூடிய தசை விறைப்பை உண்டாக்குகிறது. நாடி  “மூடிக்கொள்வதால்” வாயைத் திறக்கவோ விழுங்கவோ முடியாது. இது ஏற்பட்டால் மூச்சுத் திணறி நோயாளி இறக்க நேரிடலாம். காயத்தில் அழுக்குப் படுவதால் இது பொதுவாக ஏற்படுகிறது. மருத்துவம் அளிக்கப்படாவிட்டால் சிக்கல்கள் உருவாகி உயிருக்கு ஆபத்து உண்டாகும்.

நோயறிகுறிகள்

நாடி இறுகுதல். தசைப்பிடிப்பும் விறைப்பும் நாடியில் இருந்து கழுத்து மற்றும் உடல் உறுப்புகளுக்கு 24-72 மணி நேரத்தில் பரவும். பிற அறிகுறிகளாவன:

  • அதிகக் காய்ச்சல். 38C (100.4F) அல்லது அதிகமாக
  • வியர்வை
  • இதயத்துடிப்பு வேகமாதல்
  • கூடுதல் இரத்த அழுத்தம்

காரணங்கள்

கிளாஸ்டிரிடியம் டெட்டானி என்ற பாக்டீரியாவால் நரப்பிசிவு நோய் ஏற்படுகிறது. கிளாஸ்டிரிடியம் டெட்டானி வித்துக்கள் உடலுக்கு வெளியே சுற்றுப்புரத்தில் பரவலாக உள்ளன. இவை விலங்குகளின் சாணத்திலும் அழுக்கு மண்ணிலும் பெரும்பாலும் காணப்படுகின்றன. உடலுக்குள் பாக்டீரியா புகுந்த உடன் பலுகி டெட்டனோஸ்பாஸ்மினை வெளிவிடுகிறது. இது ஒரு நரம்பு நச்சாகும். இது இரத்த ஓட்டத்தில் கலந்தால் உடல் முழுவதும் பரவி நரப்பிசிவு நோயின் அறிகுறிகளை உண்டாக்குகிறது. மூளையில் இருந்து தண்டுவடத்திற்கும் பின் தசைகளுக்கும் செல்லும் சைகைகளை நரம்புநச்சுக்கள் தடுத்து விடுகின்றன. இதனால் நரப்பிசிவோடு தொடர்புடைய தசைப்பிடிப்புகளும் விறைப்புகளும் உண்டாகின்றன.

நோய் கண்டறிதல்

பொதுவாக நரப்பிசிவு அல்லது வில்வாதசன்னி அறிகுறிகளைக் கொண்டே அறியப்படுகிறது. அறிகுறிகளோடு கரண்டி சோதனை மூலமும் இந்நோய் உறுதி செய்யப்படுகிறது.

கரண்டிச்சோதனை

இச்சோதனையில் தொண்டைக்குள் ஒரு கரண்டி செலுத்தப்படுகிறது. கரண்டி வாந்தி உணர்வை ஏற்படுத்தும். நோயாளி கரண்டியை வாயில் இருந்து வெளித்தள்ள முயற்சி செய்வார். நரப்பிசிவு தொற்று இருந்தால் கரண்டி தொண்டைத் தசையில் தசைப்பிடிப்பை உண்டாக்குவதால் கரண்டியை அது பிடித்திழுக்கும்.

நோய் மேலாண்மை

நரப்பிசிவு நோய்க்கு இரு வகையான மருத்துவங்கள் உள்ளன:

தடுப்புமுறை மருத்துவம்

முழுமையாக அல்லது அரைகுறையாக நரப்பிசிவுக்கு தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்கள் அல்லது நரப்பிசிவு நோய்த்தாக்கும் அளவுக்கு காயம்பட்டவர்களுக்கு: நோய்த் தொற்று அபாயம் கொண்ட காயம் உடையவர்களுக்கு டெட்டனஸ் இம்முனோகுளோபுலின் என்ற மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

அறிகுறிகளைக் கொண்டு மருத்துவம்

நரப்பிசிவு நோய்த்தொற்று ஏற்பட்டு விட்டவர்களுக்கு. மூன்று முக்கிய வகையான மருந்துகள்:

  • மயக்க மருந்துகள்
  • தசை தளர்த்திகள்
  • நரம்புத்தசை தடுப்பு மருந்துகள்

தடுப்புமுறைகள்

டெட்டனஸ் டாக்சைட் தடுப்பு மருந்தால் நரப்பிசிவு நோயைத் தடுக்க முடியும். தடுப்பு மருந்தில் நான்கு வகையான சேர்க்கைகள் உள்ளன:  DTaP, Tdap, DT, and Td. இவற்றில் DTaP யும் DT யும் 7 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கும் Tdap யும் Td யும் 7 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொடுக்கப்படுகின்றன.  CDC யின் பரிந்துரைப்படி பெரியவர்களுக்கு ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஊக்கத்தடுப்பு அளிக்க வேண்டும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.06097560976
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top