অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பியூர்கர்ஸ் நோய்

பியூர்கர்ஸ் நோய்

பியூர்கர்ஸ் நோய்

  • "த்ராம்போ ஆங்கிட்டிஸ் ஓப்ளிடெரன்ஸ்' (Thromboangiitis obliterans) அல்லது பியூர்கர்ஸ் நோய் என்றழைக்கப்படும் டி.ஏ.ஓ. நோய் அதிகப்படியான புகையிலைப் பழக்கத்தால் ஏற்படுகிறது.
  • கை, கால்களில் உள்ள தமனி, சிரைகளைப் பாதிக்கும் இந்த நோய் முதலில் விரல்களைப் பாதித்து பிறகு படிப்படியாக கை, கால்களுக்குப் பரவும்.
  • நோய் தீவிரமானால் ரத்தப் போக்கு இல்லாமல் கை, கால்கள் அழுகி, வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

நோயின் தாக்கம்

அதிகமாக புகை பிடிப்பதாலும், புகையிலைப் பொருள்களை உட்கொள்வதாலும் ரத்த நாளங்களும், நரம்புகளும் சுருங்கி வலுவிழக்கும். பின் ரத்த நாளங்களிலும், நரம்புகளிலும் ரத்த அடைப்பு ஏற்படும். எனவே ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு விரல்களில் வீக்கமும் வலியும் ஏற்படும். பிறகு புண்கள் ஏற்பட்டு அழுக ஆரம்பிக்கும்.

அறிகுறிகள்

நோய் தாக்கிய இடத்தில் வலி இருக்கும். ஆரம்பத்தில் விட்டு விட்டு வரும் வலி, பின்னர் தொடர்ந்து இருக்க ஆரம்பிக்கும். பாதித்த பகுதி வலுவிழந்து காணப்படும். நரம்புகளில் வீக்கம், புண்கள் தோன்றுவது, குளிர் காலங்களில் விரல்கள் வெளுத்துக் காணப்படுவது போன்ற அறிகுறிகள் தென்படும். இதுபோன்று காணப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

இந்த நோய் யாரைப் பாதிக்கும்?

"பியூர்கர்ஸ்' நோய் 20 வயது முதல் 50 வயது வரையுள்ள ஆண்களையே அதிகம் பாதிக்கும். அண்மைக் காலமாக பெண்களுக்கும் ஆங்காங்கே இந்த நோய் ஏற்பட்டு வருகிறது.  பெரும்பாலும் அதிகமாக புகை பிடித்தல், புகையிலைப் பொருள்களை உட்கொள்வது, பதப்படுத்தாத புகையிலையை உபயோகப்படுத்துவது, பீடி, சுருட்டு போன்றவற்றைப் புகைப்பது போன்றவையே இந்த நோய் ஏற்படக் காரணங்களாகின்றன.

கை-கால் துண்டிப்பைத் தடுக்க நவீன சிகிச்சை முறை

  1. பொதுவாக அதிகம் பாதிப்படைந்த பாகங்களை நீக்குவது என்பதே இதற்கான சிகிச்சையாகும்.
  2. ஆனால் 'டிஸ்டிராக்ஷன் ஆஸ்ட்டியோ ஜெனிஸிஸ்' என்ற சிகிச்சை முறையில் நல்ல பலன் கிடைக்கும். இது 'இலிசராவ்' என்கிற ரஷிய முறை மருத்துவ சிகிச்சையாகும். இந்த முறையில் எலும்புகளுக்கிடையில் சிறு இடைவெளி மாற்றம் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்தும், புண்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறை மூலம் பல நோயாளிகள் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இதனால் கை, கால்கள் துண்டிப்பிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள்.
  3. மூட்டுத் தேய்மானத்தால் நடக்க முடியாமல் சிரமப்படும் நோயாளிகளுக்கு முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை, இடுப்பு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மூலம் ஆராதனா சிகிச்சை மையத்தில்  மறு வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. கழுத்து வலி, முதுகு வலிக்காக வருபவர்களுக்கு இயன்முறை சிகிச்சை முறையில் வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  4. 40 வயதுக்குட்பட்டவர்கள் முழங்கால் மூட்டு, தோள் மூட்டுகளில் வலி ஏற்பட்டு சிரமப்படுகிறவர்களுக்கு "ஆர்த்ராஸ்கோப்பி' என்னும் நுண்துளை அறுவைச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ உபகரணங்கள், இயன்முறை மருத்துவக் கூடம், டிஜிட்டல் எக்ஸ்-ரே, மருத்துவக் காலணிகள், ஸ்பிளின்ட்ஸ், பிரேஸ் போன்ற பொருள்களுடன் இயங்கும் 24 மணி நேர மருந்தகம் ஆகியவையும் ஆராதனா சிறப்பு முடநீக்கியல் மையத்தில் அமைந்துள்ளன.
  5. இங்கு லேமினார் ஏர் ப்ளோ என்கிற 100 சதவீதம் பாதுகாப்பு கொண்ட அறுவைச் சிகிச்சை அரங்குகள் ஏற்படுத்தப்பட்டு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுவதால் முதல் தரமான சிகிச்சை கிடைப்பது உத்தரவாதமாகிறது.

ஆதாரம் : சிறப்பு எலும்புமுறிவு சிகிச்சை மையம், பொள்ளாச்சி.

கடைசியாக மாற்றப்பட்டது : 6/8/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate