பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / புற்று நோய் / இணைப்புத் திசுப் புற்று
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இணைப்புத் திசுப் புற்று

இணைப்புத் திசுப் புற்று பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இணைப்புத் திசு உயிரணுக்களில் உண்டாகும் புற்று நோயாகும்.  புற்று  தாக்கிய எலும்புகள், குருத்தெலும்புகள், கொழுப்பு, தசை, இரத்த நாளம், கருத்திசுக்கள்  ஆகியவற்றால் உருவான தீங்கான கட்டிகளே இணைப்புத்திசுப் புற்று எனக் கருதப்படுகின்றன.  இவற்றில் நான்கு வகை உண்டு

எலும்புத் தசைக் கட்டி

எலும்புப்புற்றில் இதுவே பரவலாகக் காணப்படுவது. இது பெரும்பாலும் 5-20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இளவயதினருக்கும் ஏற்படுகிறது. இதுவே இளம்வயதினருக்கு ஏற்படும் நோய்களில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது (வெள்ளணுப்புற்று, மூளைக்கட்டிக்கு அடுத்தபடி). தொடை எலும்பு, முழந்தாள் எலும்பு போன்ற பெரிய எலும்புகளில் பொதுவாக இது உண்டாகிறது.

எலும்பு மச்சைக்கட்டி

இடுப்பு, தொடை எலும்பு, முழந்தாள் எலும்பு ஆகியவற்றில் பெரும்பாலும் 10-20 வயதுக்கு உட்பட்ட இளம்வயதினருக்கு எலும்பு மச்சைக்கட்டி ஏற்படுகிறது.

குருத்தெலும்பு ஊன்மவளர்ச்சி

இவ்வகைப் புற்று நோய் பொதுவாக 40-50 வயது பெரியவர்களுக்கு உருவாகிறது. இடுப்பு, தொடை எலும்பு, மேல் கை எலும்பு, தோள்பட்டை, விலா எலும்பு ஆகியவைகளே பெரும்பாலும் இவ்வகைப் புற்று நோய் ஏற்படக்கூடிய இடங்கள்.

மூட்டுநாள உறைப்புற்று

அறிகுறி, மருத்துவம் ஆகியவற்றைப் பொறுத்த வரையில் இது எலும்புத்தசைக் கட்டி போன்றதே. ஆனால் இது 40 வயதுக்கும் மேற்பட்டவர்களைப் பாதிக்கிறது.

நோயறிகுறிகள்

எலும்புப் புற்று நோயின் மிகவும் பொதுவான அறிகுறி எலும்பு வலியே ஆகும். முதலில் பாதிக்கப்பட்ட எலும்பு பகுதியில் மென்மை உணர்வு உண்டாகும். பின் படிப்படியாக நிரந்தர வலியாக மாறும். இரவிலும், பாதிக்கப்பட்ட எலும்புகளைப் பயன்படுத்தும் போதும் வலி அதிகரிக்கும். எலும்புப் புற்று நோயின் பிற

அறிகுறிகள்

  • அதிகக் காய்ச்சல்: 38C (100.4F)  அல்லது மேலும்
  • விளக்க முடியாதபடி எடை இழப்பு
  • இரவில் வியர்வை

காரணங்கள்

டி.என்.ஏ அமைப்பில் ஏற்படும் பிறழ்ச்சி காரணமாக மாற்றங்கள் ஏற்படுவதாலேயே பொதுவாக புற்று நோய் உண்டாகிறது.

நோய்கண்டறிதல்

எக்ஸ்-கதிர்: புற்று நோயால் எலும்பு சிதைவு அடைந்ததையும், புதிய எலும்பு வளர்வதையும் எக்ஸ்-ரே மூலம் அறியலாம்.

காந்த அதிர்வு பிம்ப வரைவி (எம்.ஆர்.ஐ)

எலும்புகளுக்குள் இருக்கும் புற்று நோய்க் கட்டிகளின் வளர்ச்சியை சிறந்த முறையில் எம்.ஆர்.ஐ. வரைவியால் கணக்கிட முடியும்.

திசு ஆய்வு

பாதிக்கப்பட்ட  இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட எலும்பு மாதிரி ஆய்வுக் கூடத்தில் சோதிக்கப்படுகிறது. இதுவே எலும்புப் புற்று நோயை உறுதியாகக் கண்டறியும் சோதனை.

நோய் மேலாண்மை

வேதியற்சிகிச்சை:  புற்று நோய்க்கட்டியைச் சுருக்கம் அடையச்செய்யவும், பரவும் புற்றணுக்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பொதுவாக இம்முறை பயன்படுத்தப்படுகிறது.

அறுவை மருத்துவம்

வேதியற் சிகிச்சையைத் தொடர்ந்து, புற்றெலும்பு அறுவை மருத்துவத்தால் அகற்றப் படுகிறது. பல நோயாளிகளுக்கு அகற்றப்பட்ட எலும்புகளை மறு சீரமைப்பு செய்ய முடியும். இதனை எலும்பு காப்பு அறுவை மருத்துவம் என்பர். இதற்குப் பின் வேதியற் சிகிச்சை மூலம் எஞ்சி இருக்கும் புற்றணுக்கள் அழிக்கப்படும்.

கதிர்வீச்சுசிகிச்சை

எலும்பு மச்சை கட்டி (எவிங்கின் இணைப்புத் திசுப் புற்று) போன்ற சில எலும்பு புற்று நோய்களுக்கு  இது பயன்தரும் சிகிச்சை முறையாகும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

2.9898989899
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top