பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

புற்று நோய்

புற்று நோய்க்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைப் பற்றி இங்கு விளக்கியுள்ளனர்.

புற்று நோய் - அறிமுகம்

செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உண்டாக்கப்பட்டுள்ளது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உண்டுபண்ணுகிறது. சில வேலைகளில், உடலுக்கு தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறக்காமல் இருக்கின்றன.  இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (க்ரோத்) அல்லது கழலை (டியூமர்) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.

எல்லா கழலைகளும் (டியூமர்) புற்று நோய் போன்றவையல்ல. கழலைகள் தீங்கில்லா கழலைகள் (பினைன் டியூமர்ஸ்) மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் (மாலிக்கண்ட் டியுமர்ஸ்) என இருவகைப்படும்.

தீங்கில்லா கழலைகள் என்பவை புற்றுநோய் அல்ல. அவைகளை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவை நீக்கின பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.

கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாக மற்றும் எந்த கட்டுப்பாடுமின்றி பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.

இரத்த நாளங்கள் (ஆர்டரி-தமனி, வெய்ன்-சினை, கேட்டல்லரி-நுண்ணாளி) மூலம் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. நிணநீர் மண்டலம் (லம்பாடிக் சிஸ்டம்), நிணநீர் மற்றும் இரத்த வெள்ளை அணுக்களை, நிணநீர் நாளங்கள் உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் எடுத்துச் செல்லும். கேடு விளைவிக்கும் கழலை உடைந்து, அதிலிருந்து வெளிவரும் புற்றுநோய் செல்கள், இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் மண்டலத்தின் மூலம் மற்ற உடல் உறுப்புகளுக்குச் சென்று அப்பகுதியில் கழலைகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு புற்று நோய் பரவுவதை திசுத்தொற்று (மெடாஸ்டாஸிஸ்) என்பர்.

இரத்தப்புற்று நோய் (ப்ளட் கான்சர்)

லுகிமியா அல்லது லுகேமியா என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்றுநோய். இரத்த செல்கள் குறிப்பாக, வெள்ளை இரத்த அணுக்கள் இயல்புக்கு மாறாக அதிகளவில் பெருகும் நிலை காணப்படும்.

அறிகுறிகள்

 • அதிகளவில் இரத்தம் வடிதல்
 • இரத்தசோகை
 • காய்ச்சல், குளிர், இரவுநேரத்தில் வேர்த்தல் மற்றும் ப்ளு போன்ற அடையாளங்கள்
 • பெலவீனம் மற்றும் சோர்வு
 • பசியின்மை மற்றும் /அல்லது எடை குறைதல்
 • பல் ஈறுகள் வீக்கமடைதல் அல்லது இரத்தம் வடிதல்
 • நரம்பியல் சம்பந்தமான அடையாளங்கள் (தலைவலி)
 • ஈரல் மற்றும் கணையம் வீக்கமடைதல்
 • காயங்கள் சுலபமாக ஏற்படுதல் மற்றும் அடிக்கடி நோய்தொற்று ஏற்படுதல்
 • மூட்டு வலி
 • உள்நார்தசைகள் வீக்கமடைதல்.

ப்ரஸ்ட் கான்சர் (மார்பகப் புற்றுநோய்)

மார்பகப்புற்று நோய் என்பது பெண்களில் ஏற்படும் பொதுவான வகை புற்றுநோயாகும். பெண்களில், மரணத்தை ஏற்படுத்தும் புற்றுநோய் வகைகளில் இரண்டாம் மிக பொதுவான காரணமாகும்.

அறிகுறிகள்

 • மார்பு வீங்குதல்
 • மார்புக் காம்பிலிருந்து வடிதல்
 • மார்பகக் காம்பு உள் நோக்கி இழுத்தல்
 • சிவந்த / வீக்கமடைந்த மார்புக் காம்பு
 • மார்பகம் பெரியதாகுதல்
 • மார்பு சுருங்குதல்
 • மார்பகம் கல்போல் கடினமாதல்
 • எலும்பு வலி
 • முதுகு வலி

இடர்காரணிகள்

 • குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மார்பக புற்று நோய் இருத்தல் (பெரும்பாலான நெருங்கிய உறவினர்களுக்கு)
 • பெண்களுக்கு வயதாகும் போது ஆபத்து அதிகமாகிறது.
 • ஏற்கெனவே ஏற்பட்ட கர்ப்பப்பை புற்றுநோய்.
 • ஏற்கெனவே ஏற்பட்ட மார்பக புற்றுநோய், இயல்புக்கு மாறுபட்ட மாற்றங்கள், ஏற்கெனவே உள்ள மார்பக நோய்கள்.
 • மரபுவழிக் கோளாறு அல்லது மாற்றங்கள் (அரிதான மாற்றங்கள்)
 • 12 வயதிற்கு முன்பாகவே வயதுக்கு வருதல்
 • 50 வயதுக்கு மேற்பட்டு மாதவிடாய் முடிதல்
 • குழந்தை இல்லாமை.
 • மது வகைகள், அதிக கொழுப்பான உணவு, அதிக நார்பொருள் உள்ள உணவு, புகைப்பழக்கம், உடற்பருமன் மற்றும் ஏற்கெனவே உள்ள கருவக அல்லது பெருங்குடல் புற்றுநோய்.

சிகிச்சை முறை

மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை, மூன்று முக்கிய காரணிகளைப் பொறுத்துள்ளது

 1. பெண்ணுக்கு மாதவிடாய் காலங்கள் நின்றுவிட்டதா?
 2. மார்பகப் புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது?
 3. மார்பகப் புற்றுநோய் செல்லின் வகை.

புற்றுநோய் எந்த அளவ பரவியுள்ளது என்பதை கீழ்க்கண்டவாறு வரையறை செய்யப்பட்டுள்ளது

 • புற்று நோய் எந்த இடத்தில் உள்ளது?
 • எந்த அளவு புற்றுநோய் நிணநீர் சுரப்பி கணுக்களுக்கு பரவியிருக்கிறது?
 • புற்றுநோய் மார்பகத்தின் உள்பகுதியில் உள்ள தசை வரை பரவியுள்ளதா?
 • மற்றொரு மார்பகத்திற்கும் புற்றுநோய் பரவியிருத்தல்
 • புற்றுநோய் மற்ற உடல் உறுப்புகளுக்கு பரவியிருத்தல் உ-ம் எலும்பு அல்லது மூளை

புற்றுநோய் செல்களின் வகையப் பொருத்து சிகிச்சை முறை வேறுபடுகிறது

 • மோர் ஆக்ரஸிவ் செல் (அதிக ஆக்கிரமிக்கும் செல்)
 • லெஸ் ஆக்ரஸிவ் செல் (குறைவாக ஆக்கிரமிக்கும் செல்)

மேற்கூறிய காரணிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் என்ன செய்யலாம் என முடிவு செய்வர்

 • கதிர்வீச்சு மருத்துவத்தினை பயன்படுத்தி அல்லது பயன்படுத்தாமல் வீக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள திசுக்களை அகற்றுவது.
 • முழு மார்பக பகுதியையும் அகற்றுவது.

தடுத்துக்காத்தல்

 • மாதாமாதம் மார்பகத்தினை தற்பரிசோதனை செய்தல்.
 • உங்கள் மருத்துவரிடம் வருடத்திற்கு ஒரு முறை சென்று மார்பகப் பரிசோதனை செய்தல்.
 • சத்தான உணவுகளை உட்கொள்ளுதல்.

உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்குமோ என சந்தேகம் ஏற்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகவும். மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தக்கூடிய ஒன்று. ஆனால் கண்டறியப்படவில்லையென்றால் மரணத்திற்கு நேராக வழி நடத்தும்.

கேள்வி பதில்கள்

புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பணித்தளங்கள் போனறவற்றிற்கு உட்படும்போது இது போன்ற மாற்றங்கள் மரபிகளில் ஏற்படுகிறது. எச்.ஐ.வி நோய் தொற்றுவில் இது போன்ற திடீர் மாற்றம் ஏற்படும். சில வேளைகளில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.

புற்றுநோய் வராமல் தடுத்துக்காக்க முடியமா?

புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்

 • புகையிலை பயன்படுத்தக்கூடாது.
 • கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.
 • முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை?

புற்றுநோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன

 • மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்
 • புதிய மச்சம் அல்லது ஏற்கெனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
 • குணப்படாத புண்கள்.
 • கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
 • மலம் மற்றும் மூத்திரம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.
 • தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.
 • விவரிக்கமுடியாத விதத்தில உடல் எடையில் மாற்றம்.
 • இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு

புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?

அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரபி), வேதி மருத்துவம் (கீமோதெரபி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும்., புற்றுநோயின் வகை, பாதிக்கப்பட்டிள்ள இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொருத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.

புற்றுநோய் எப்போதும் வலியை ஏற்படுத்துமா?

புற்றுநோய் எப்பொழுதும் வலியை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல. புற்றுநோயின் வகை, நோயின் அதிகரிப்புதன்மை மற்றும் நோயாளியின் வலி பொறுத்துக் கொள்ளும் தன்மையைப் பொறுத்து வலி இருக்கும். பெரும்பாலும் புற்று நோய் வளர்ந்து, எலும்புகள், உறுப்புகள் அல்லது நரம்புகளை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது.

2.9702970297
பிரியா கோவிந்தராஜ் Feb 19, 2020 10:58 PM

அருமையான பயனுள்ள தகவல்

கிருஷ்ணன் Mar 22, 2015 03:58 PM

முதுகெலும்புள்ள புற்றுநோய்க்கான சிகிச்சை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top