பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குடல் புற்றுநோய்

குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன?

அறிகுறிகள்

புற்றுநோயின் பாதிப்பு வயிறு, தொண்டை, மார்பகம், கல்லீரல், குடல்... என அனைத்து உறுப்பிலும் ஏற்படும். இந்த நோய் ஏற்பட பல காரணங்கள் சொல்லாம்.

அவை புற்றுநோய் பாதிக்கும் உறுப்பை பொறுத்து அமையும். குடல் மற்றும் மலக்குடலில் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் முறையற்ற உணவு பழக்கம். இது மட்டுமே காரணி என்று சொல்ல முடியாது. மரபணு, பரம்பரை... என பல அம்சங்கள் புற்றுநோய் தோன்றுவதற்கான காரணங்களாய் இருக்கின்றன. பொதுவாவே புற்றுநோய் பாதிப்பை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மருந்து மாத்திரைகள் கொண்டே குணப்படுத்த முடியும்.

ஆனால் நோய் முற்றிய நிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிய வரும் போது குணப்படுத்தும் சாத்தியம் மிகவும் குறைவு. காரணம் குடல் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். ஆனால் இந்த பிரச்னை மிகவும் சாதாரணமானது. வயிற்று பிரச்னை இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும் என்பதால், டாக்டரின் ஆலோசனை பெற தவறிவிடுகிறார்கள். காலம் கடந்த பிறகு புற்றுநோய் கண்டறிந்தால், அந்த கட்டத்தில் மருந்து மாத்திரையில் இதனை கட்டுப்படுத்த முடியாது.

சிகிச்சை முறை

அறுவை சிகிச்சை ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி மூலம் ஓரளவு கட்டுப்படுத்த முடியும். குடல் புற்றுநோய் பொதுவான பெயர் என்றாலும் அவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எல்லாருக்கும் அவரவர் உடல் நிலை, மரபணுக்கு ஏற்ப நோய் கிருமிகள் மாறுபடும். இருப்பினும் தற்போது மருந்து மாத்திரை, ரேடியேஷன், கீமோதெரபி என ஒரே மாதிரியான சிகிச்சை முறைகளை கடைப்பிடித்து வருகிறோம்.

அதே சமயம் நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்து மாத்திரைகள் மற்றும் சிகிச்சை முறையில் சில மாற்றங்கள் ஏற்படுமே தவிர ஒவ்வொருவருக்கும் தனித்தனி மாத்திரைகளை கொடுக்க முடியாது. ஆனால் இன்னும் பத்தாண்டுகளில் மருத்துவ துறையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.புற்றுநோயை ஆரம்ப காலத்தில் கண்டுபிடிப்பது மிகவும் அரிதான விஷயம்.

ஆதாரம் : தினகரன் நாளிதழ்

3.11392405063
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
காேபாலகிருயஷ்ணன் Mar 15, 2017 11:33 AM

சில நாட்களாக தீராத வயிற்று வலி இது என்னவாக இருக்கும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top