பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / புற்று நோய் / நடந்தால் நாடாது புற்றுநோய்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நடந்தால் நாடாது புற்றுநோய்

நடந்தால் நாடாது புற்றுநோய் திருச்சி புற்றுநோய் கதிர்யிக்க சிகிச்சை நிபுணர் சசிபிரியா.

அறிமுகம்

கடந்த சில வருடங்களில் அதிகமாக பரவும் நோயாக புற்றுநோய் மாறியுள்ளது. இந்த நோய்க்கு ஆண்பெண் பாரபட்சம் இல்லாமல் தாக்கம் அதிகமாக உள்ளது. புற்றுநோய்க்கான பல மருத்துவ கண்டுபிடிப்புகள், மருந்துகள், சிகிச்சை முறைகள் என வளர்ந்து வந்தாலும், புற்றுநோயின் வீரியத்தை ஒழிக்க முடியவில்லை. உணவுப்பழக்கம், சிதைந்துபோன உடல் கூறுகள், தூக்கமின்மை என பலவற்றால் புற்றுநோய் பரவுக்கூடும்.

புற்று நோய் - காரணங்கள்

புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல பொதுவாகவே ஆண், பெண் என இருபாலருக்கும் வரக்கூடிய நோய்தான். அதில் 4வகையான நிலை உண்டு. முதல் இரண்டு நிலைகளில் உள்ள நோயாளிகளை 90 சதவிகிதம் காப்பாற்ற முடியும். 3வது நிலையில் 50 சதவீதம் மட்டுமே காப்பாற்ற முடியும், 4வது நிலையை கடந்தவர்களுக்கு 5வருடங்கள் வரை வாழ வைக்க முடியும்.

புற்றுநோய் மரபுவழி, உணவு, பழக்கவழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் வருகிறது.  இப்போது பெண்கள், ஆண்கள் என பலரும் ஜங்க் புட், துரித உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். அதேபோல், பரோட்டா, சில்லிச் சிக்கன் உள்ளிட்டவற்றில் மொறுமொறுப்பாக உள்ள உணவுகள், அதிக தடவை பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் செய்யப்படும் உணவு உள்ளிட்டவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

புற்று நோய் வைரஸ் என்பது, வழக்கமாக ஆண்களிடம் இருந்து தான் பெண்களுக்கு பரவுகிறது. காற்றில் கலந்துள்ள வைரஸ் திருமணம் ஆன ஆண்களின் பிறபுறுப்பின் மூலம் பெண்களுக்கு செல்வதால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருகிறது. பெண்களுக்கு அதிகளவில் வெள்ளைபடுதல், இரத்தபோக்கு, முறையான மாதவிடாய் சுழற்சி இல்லாமல் இருப்பது போன்ற காரணிகளால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருகிறது. இதை அலட்சியப்படுத்தக்கூடாது. மேலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் வகையில் 9வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 3 முறை இந்தத் தடுப்பூசியை போட்டு கொண்டால் பெண்ணுக்கு எந்தவிதத்திலும் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் .

இதேபோல் பெண்களுக்குப் பொதுவாக மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகளவில் உள்ளது. பெரிய நகரங்களில் 25பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் உள்ளது. எனவே மார்பகத்தில் சிறிய அளவிலான வலி இல்லாத கட்டி, அல்லது இயல்பான அமைப்பைவிட மார்பகம் மாறுபடுதல் போன்ற அறிகுறிகள் வந்தால், அந்தப் பெண்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பெண்கள் தங்களுக்கு உள்ள அறிகுறிகளை சுயபரிசோதனை செய்துகொள்ளலாம். எனவே குறைந்தது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது பெண்கள், இதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, சில பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். அதேபோல் ஆண்களும் புற்றுநோய் அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

ஆலோசனைகள்

காலை 11 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். உணவிற்கும் புற்றுநோய்க்கும் அதிகளவில் தொடர்பு உண்டு. நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர், பழங்கள், காய்கறிகள் கண்டிப்பாக எடுக்க வேண்டும். தற்போது பரோட்டா மீது உள்ள மோகம் இன்று பலரை மலக்குடல் புற்றுநோய்க்கு தள்ளி உள்ளது. எனவே நார்சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு செரிமானம் சரியில்லை என்றால் புற்றுநோய் வரும்.

தினமும் குறைந்தபட்சம் 20நிமிடம் நடந்தாலே 50 சதவீதம் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும், அதேபோன்று கருகிபோனது, தீய்ந்துபோனது போன்ற உணவுப் பொருட்களை குறைத்துக் கொள்ள வேண்டும். 7 நிமிடத்திற்கு ஒரு பெண் கற்பபைவாய் புற்றுநோயால் இறக்கிறார்கள். எனவே உங்கள் உடம்பில் வழக்கத்துக்கு மாறிய சிறிய மாற்றங்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். வருடத்திற்கு ஒருமுறை உடல் முழு பரிசோதனை செய்து கொள்ளுங்கள். புற்று நோயை அலட்சியப்படுத்தினால் உயிரை பறிக்கும்.. கொஞ்சம் விழிப்புணர்வோடு ஒருந்தால் உயிர்வாழலாம்.

ஆதாரம் : திருச்சி புற்றுநோய் கதிர்யிக்க சிகிச்சை நிபுணர் - சசிபிரியா.

2.85416666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top