பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / புற்று நோய் / புற்றுநோயும் புகையிலையும்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

புற்றுநோயும் புகையிலையும்

புற்றுநோயும் புகையிலையும்

அறிமுகம்

சிகெரெட் (புகை) மற்றும் ஹான்ஸ் போன்றவை வாயில் மெல்லுதல் இரண்டும் ஒன்றுதான். புகையிலையில் நிக்கோடின் உள்ளது இந்த நிக்கோடின் அதிக நச்சுத் தன்மை உடையது மற்றும் அந்த பழக்கத்திற்கு அடிமையாக்கும் தன்மை உடையது. இந்தியாவில் ஒரு வருடத்தில் 9,00,000 (ஒன்பது லட்சம்) பேர் புகையிலை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் நோய்களால் இறக்கிறார்கள். புகைபிடிப்பதால் ஏற்படும் புற்றுநோயால் இறப்பவர்கள் 30 வயது முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

புகைப் பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய், புகைப் பிடிப்பவர்களை விட புகைப்பவர்களின் அருகில் இருந்து அந்த புகையைச் சுவாசிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் 10 மடங்கு அதிகமாக வர வாய்ப்புள்ளது. நுரையீரல் புற்றுநோய் 87 சதவீதம் புகைப்பிடிப்பதால் வருகிறது. நுரையீரல் மட்டும் இல்லாமல் வாய், தொண்டை, கணையம், கழுத்து, சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்றவைகளில் ஏற்படும் புற்று நோயும் புகைப்பிடிப்பதால் அதிகம் வருகிறது.

ஹான்ஸ், புகையிலை போன்ற மென்று உபயோகப்படுத்தும் புகையிலையினால் தொண்டை, கன்னம், பல்ஈறுகள் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பிடிப்பவர்களுக்கு அதிக அளவில் ஹார்ட் அட்டாக் மற்றும் சளி, இருமல், அல்சர், கை, கால் பக்கவாதம் (TB) போன்றவைகளும் பெரும் அளவில் இருக்கிறது.

புகைப்பிடிப்பதை நிறுத்தினால் உடனடியாக தெரியும் பலன்கள்

 • புகைப் பிடிப்பதை நிறுத்திய அடுத்த 20 நிமிடங்களில் இரத்தக் கொதிப்பு அளவு குறையும்.
 • புகைப்பிடிப்பதை நிறுத்திய அடுத்த 8 மணிநேரத்தில் இரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு சரியான அளவில் இருக்கும்.
 • இரண்டு முதல் 3 மாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் நுரையீரலில் வேலை 30% முன்பைவிட அதிகரிக்கும்.
 • 5 முதல் 9 மாதங்களில் இருமல், சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவைகள் குறையும்.
 • ஒரு வருடத்தில் ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் 50% குறையும்.
 • புகைப் பிடிக்காதவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு குறைவோ அந்த அளவுக்கு புகையை நிறுத்தி 5 வருடங்களில் அதே பலனை புகை நிறுத்தியவர்களுக்கும் கிடைக்கும்.
 • புகையை நிறுத்திய 10 வருடங்களில் நுரையீரல் புற்றுநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை, 50% குறைந்துள்ளது.

புகைப்பிடிப்பவர்கள் கூறும் காரணங்கள்

புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிக்க நிறைய காரணங்கள் சொல்கிறார்கள். புகைப்பிடித்தால் ஊக்கம் சுறுசுறுப்பு உண்டாகும், டென்சனாக இருக்கும்போது, சிகெரெட் தொட வேண்டும் என்ற எண்ணம், புகை பிடிக்க வேண்டும் என்ற ஆவல் (புகைக்கு அடிமையாதல்) இது போன்ற நிறைய காரணங்களை புகை பிடிப்பவர்கள் சொல்கிறார்கள். இதுபோலவே, புகையை நிறுத்த நிறைய வழிகள் இருக்கின்றன.

புகைப்பிடிப்பதை நிறுத்தும் வழிகள்

 • புகைப்பிடிப்பதை நிறுத்தினால் என்ன நன்மை என்று நினைத்துப் பார்க்கவேண்டும். புகைபிடிப்பதைத் தவிர வேறு பொழுதுபோக்கு வழிகள் என்ன என்று யோசனை செய்து அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
 • குடும்பத்தினர், குழந்தைகள் நலனை கருத்தில் கொள்ளவும்.
 • நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகளுடன் கலந்து ஆலோசிக்கவும்
 • சர்க்கரை இல்லாத பபுல்காம் அல்லது சாக்லைட் போன்றவற்றை புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் போதும் சுவைக்கலாம்.
 • மீண்டும் புகைப்பிடிக்காமல் இருக்க இப்பழக்கத்தை நிறுத்த உதவிய சம்பவங்களை நினைத்துப்பார்க்கவும்,
 • புகைபிடிக்க சொல்லி நண்பர்கள் தூண்டினாலும் வேண்டாம் என்று மனஉறுதியுடன் மறுக்க வேண்டும்
 • புகை பிடிக்கும் இடங்களில் இருப்பதை தவிர்க்கவும்.
 • புகைப்பிடிக்க தூண்டும் பொருள்களை நாம் இருக்கும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்தவும்
 • இத்தனையும் கடைப்பிடித்து மீண்டும் புகைப்பழக்கம் ஆரம்பிக்க நேரிட்டால் மனம் தளரவேண்டாம், மீண்டும் முயற்ச்சிக்கவும், மருத்துவரை ஆலோசித்து இந்தப் பழக்கத்தை கைவிடவும்.

ஆதாரம் : http://puducherrycancertrust.org/index

3.14705882353
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top