பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / புற்று நோய் / புற்றுநோய் - எச்சரிக்கை நடவடிக்கைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புற்றுநோய் - எச்சரிக்கை நடவடிக்கைகள்

புற்றுநோயை கண்டறிய மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

புற்றுநோயைப் பொறுத்த வரையில் வருமுன் காப்பது, கண்டு கொள்வது தான் சாலச்சிறந்தது. மிக விழிப்பாகவும் சரியான ஸ்க்ரீனிங்கும், சரியான காலகட்டங்களில் செய்து கொள்ள வேண்டும். வருமுன் எச்சரிக்கை நடவடிக்கைகளாக சில விதிமுறைகளை அனுசரிக்கலாம் :

விதிமுறைகள்

  • திருமணம் ஆன அனைத்துப் பெண்களும் வருடா வருடம் அவசியம் பாப் - ஸ்மியர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மிக எளிமையான இந்தப் பரிசோதனையின் மூலம் கர்பப்பைவாய் புற்று நோயை மிக எளிதாக முன் கூட்டியே கண்டு பிடித்து விடலாம் .
  • 40 வயதுக்கு மேலான எல்லாப் பெண்களும் வருடம் ஒரு மாமோகிராம் செய்து கொள்ளவேண்டும். மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டு கொள்ள வேண்டும்
  • 40 வயதுக்கு மேற்பட்ட அத்தனை ஆண்களும் ப்ராஸ்டரெட் புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங் செய்து கொள்வது அவசியம் .
  • ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை குடல்புற்றுக்காண பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மற்றபடி மார்பு, அக்குள், கழுத்து இது போன்ற இடங்களில் நெறி கட்டுதலோ, வீக்கமோ , கட்டியோ காணப்பட்டால் உடன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
  • ஆறாத வாய்ப்புண், தொடர் இருமல் முக்கியமாக புகைப்பழக்கம் உள்ளவர்களில் 2 வாரங்களுக்கு மேல் இருப்பது, சிறுநீரில் இரத்தம், மலத்தில் இரத்தம், மலம் கருப்பு நிறமாக இருப்பது , பெண்களில் நாட்பட்ட வெள்ளைப் படுதல், மாதவிலக்கு நின்று விட்ட நிலையில் இரத்தப் போக்கு ஏற்படுவது ஆகிய அறிகுறிகள் காணப்பட்டால் மிக விழிப்புடன் பரிசோதனைக்கு தங்களை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆதாரம் : ஹர்ஷமித்ரா – இலவச புற்றுநோய் தகவல் மையம், திருச்சி

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top