பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

விரைப் புற்றுநோய்

விரைப் புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

விரைகள் என்பவை விரைப்பைக்குள் அமைந்துள்ள 2 முட்டை வடிவ சுரப்பிகளாகும். விரைகள் என்பவை விரைப்பைக்கு உள்ளே விரை நாண்களால் பிடிக்கப்பட்டுள்ளன, அவ்விரைப்பை தான் விந்தணு வெளியேறு குழல்களையும் விரைகளின் இரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகளையும் கொண்டுள்ளது. விரைகள் என்பவை தான் ஆண் பால் சுரப்பிகளாகும் மேலும் அவை டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோனையும் விந்துவையும் உற்பத்தி செய்கின்றன.

விரைகளுக்கு உள்ளே உள்ள ஜீவ அணுக்கள் தான், நுண் குழாய்கள் கொண்டதோர் வலையமைப்பு வழியாகச் சென்று விந்தணு முதிர்ச்சிப்பைக்குள் (எபிடிடிமிஸ்) (விரைகளுக்கு அடுத்துள்ள ஓர் நீண்ட சுருண்ட குழாய்) பயணிக்கிற, முதிர்வுறாத விந்துவை உற்பத்தி செய்கின்றன. அவ்விந்து முதிர்ச்சியடைந்து, விரைகளில் இருப்பு வைக்கப்படுகிறது. விரைப் புற்றுநோய் என்பது, ஒன்று அல்லது இரண்டு விரைகளின் திசுக்களில் புற்றுப்பண்புள்ள (மெலிக்னண்ட்) அணுக்கள் உருவாகின்றதோர் நோயாகும். கிட்டத்தட்ட அனைத்து விரைப் புற்றுநோய்களுமே ஜீவ அணுக்களில் தான் ஆரம்பிக்கின்றன

வகைகள்

 • ஜெர்ம் செல் டியூமர்ஸ் (ஜீவ அணுப் புற்றுக் கட்டிகள்): இவை தான், விரைப் புற்றுக்கட்டிகளிலேயே மிகவும் பொதுவானதாகும். ஜீவ அணுப் புற்றுக்கட்டிகள், விந்துவை உண்டாக்குகிற அணுக்களிலேயே ஆரம்பிக்கின்றன
 • ஸ்டிரோமல் டியூமர்ஸ் (நடு (ஸ்டிரோமா) அடுக்குப் புற்றுக்கட்டிகள்): இது, ஹார்மோன்களை உருவாக்குகிற அணுக்களிலும், விந்துவை உருவாக்குகிற அணுக்களை ஆதரிக்கிற அணுக்களிலும் ஆரம்பிக்கிறது
 • இ‏ரண்டாம் நிலை விரைப் புற்றுக்கட்டிகள்: உடலின் மற்ற பாகங்களிலிருந்து விரைகளுக்குப் பரவியிருக்கிற புற்றுநோயிலிருந்து ஆரம்பிக்கிறது

ஜெர்ம் செல் டியூமர்ஸ் (ஜீவ அணுப் புற்றுக் கட்டிகள்)

ஜீவ அணுப் புற்றுக்கட்டிகளின் முக்கியமான 2 வகைகள், செமினோமாஸ் மற்றும் நான்செமினொமாஸ் என்பவையாகும்.

செமினோமாஸ்

விந்துவை உண்டாக்குகிற விரைகளின் ஜீவ அணுக்களிலிருந்து ஆரம்பிக்கின்றன. இ‏ந்தக் குழுவிற்குள், இரண்டு துணை வகைகளும் உள்ளன. செமினோமாஸ் புற்றுக்கட்டி வழக்கமாக ஆண்கள் 25 மற்றும் 45 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்கும் போதே அவர்களில் தோன்றுகிறது

நான்செமினோமாஸ்

செமினோமாஸ் புற்றுக்கட்டியை விட, ஆயுளின் ஆரம்ப காலத்திலேயே தோன்ற முயற்சிக்கின்றன. அவை பெரும்பாலும் ஆண்களில், அவர்களது பதின்வயதின் பின்பகுதியிலும், 30 வயதுகளின் ஆரம்பத்திலும் காணப்படுகின்றன இதில் 4 முக்கியமான துணை வகைகள் உள்ளன. பெரும்பாலான புற்றுக்கட்டிகள், குறைந்தது 2 துணைவகைகள் கொண்டுள்ள கலப்பானவையாகும். ஆனால் அனைத்து நான்செமினோமா ஜீவ அணுப் புற்றுக்கட்டிகளுமே ஒரே வழியில் தான் சிகிச்சையளிக்கப்படுகின்றன, ஆகவே மிகச் சரியான வகை என்ன என்பது அந்தளவிற்கு முக்கியமானதல்ல.

ஸ்டிரோமல் டியூமர்ஸ் (நடு (ஸ்டிரோமா) அடுக்குப் புற்றுக்கட்டிகள்)

ஹார்மோன்களை உண்டாக்குகிற அணுக்களிலும், அதற்குத் துணையாக அமைகிற விரைகளின் திசுக்களிலும் (ஸ்டிரோமா) புற்றுக்கட்டிகள் வளரக்கூடும். ஸ்டிரோமா அணுக் கட்டிகள் (டியூமர்ஸ்) பெரு தீங்கற்றவையாகும் (புற்றுநோய் அல்லாத்வை) அவை வழக்கமாக விரையைத் தாண்டி வளர்வதில்லை. மேலும் அவற்றை வெளியே எடுத்துவிடுவதன் மூலம் அவற்றைக் குணப்படுத்திவிடலாம். ஆனால் சில ஸ்டிரோமல் அணுக் கட்டிகள் (டியூமர்ஸ்) உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி விடுகின்றன. மெட்டாஸ்டேட்டிக் ஸ்டிரோமா அணுப் புற்றுக்கட்டிகள் மோசமான தோற்றத்தை உடையவையாக உள்ளன. ஏனென்றால் அவை வேதிச்சிகிச்சை முறைக்கோ அல்லது கதிரியக்கச் சிகிச்சைக்கோ நன்றாகப் பதிலளிப்பதில்லை

இ‏ரண்டாம் நிலை விரைப் புற்றுக்கட்டிகள்

இப்புற்றுக்கட்டிகள், மற்றொரு உடலுறுப்பில் ஆரம்பித்து, விரைகளுக்குப் பரவுகின்றன. லிம்•போமா தான், இதனைச் செய்கிற மிகவும் பொதுவான புற்றுநோயாகும். லியூக்கேமியா அணுக்கள் சில நேரங்களில் விரைகளில் ஓர் கட்டியை (டியூமர்) உருவாக்கிவிட முடியும். ஆண்மைச் சுரப்பி, நுரையீரல், சருமம், சிறுநீரகம் மற்றும் மற்ற உடலுறுப்புகளில் உள்ள புற்றுநோயும் விரைகளுக்குப் பரவ முடியும்.

இ‏த்தகைய புற்றுக்கட்டிகளின் தோற்றம் வழக்கமாகவே மோசமாகத் தான் உள்ளது. அது ஏனென்றால், மிகப் பெரும்பா‎லும், இப்புற்றுக்கட்டிகள் பரவலாகவே மற்ற உடலுறுப்புக்களுக்கும் பரவியிருக்கின்றன. சிகிச்சையானது, புற்றுநோயின் மிகச் சரியான வகையைப் பொருத்தே இருக்கிறது.

ஆபத்துக் காரணிகள்

ஒரு நோயைப் பெற்றுக் கொள்வதற்கு உங்களுக்குள்ள வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிற எதுவும், ஒரு ஆபத்துக் காரணி என்று அழைக்கப்படுகிறது. ஒரு ஆபத்துக் காரணி இருப்பது என்பது உங்களுக்குப் புற்றுநோய் வந்துவிடும் என்று அர்த்தமாவதில்லை; ஆபத்துக் காரணிகள் இல்லாமலிருப்பதற்கு‏ உங்களுக்குப் புற்றுநோயே வராது என்றும் அர்த்தமாவதில்லை

விரைப் புற்றுநோய் ஆபத்துக் காரணிகள்

விரைப் புற்றுநோயிற்கான ஆபத்துக் காரணிகளில் பின்வருபவை அடங்குகின்றன:

 • கீழிறங்காத விரை (கிரிப்டார்சைடிசம்)
 • குழந்தைப் பிராய‏ இயல்பிற்கு மாறான தன்மைகள்
 • விரைப் புற்றுநோயின் வரலாறு
 • விரைப் புற்றுநோயின் குடும்ப வரலாறு
 • இயல்பிற்கு மாறான விரை வளர்ச்சி

கீழிறங்காத விரை (கிரிப்டார்சைடிசம்)

சாதாரணமாக, பிறப்பிற்கு முன்பாக விரைகள் அடிவயிற்றுக்கு உள்ளிருந்து விரைப்பைக்கு உள்ளே கீழிறங்குகின்றன. விரைப்பைக்கு உள்ளே கீழ் நகராத விரையுள்ள ஆண்களில், விரைப் புற்றுநோயிற்கான ஆபத்து அதிகரிக்கிறது. விரையை விரைப்பையிற்குள் நகர்த்துவதற்கான அறுவைச் சிகிச்சைக்குப் பின்பும் கூட இந்த ஆபத்து மாறுவதில்லை. இரு விரைகளுக்குமே இவ்வதிகரித்த ஆபத்து பொருந்துகிறது.

குழந்தைப் பிராய‏ இயல்பிற்கு மாறான தன்மைகள்

விரைகள், ஆணுறுப்பு அல்லது சிறுநீரகங்களி‎ல் இயல்பிற்கு மாறான தன்மைகளோடு பிறக்கிற ஆண்கள், இங்வினல் ஹெர்னியா (தொடை அடிவயிற்றோடு இணைகிற அரைப்பகுதியில் குடல் இறக்கம்) உள்ள ஆண்கள், அதிகரித்த ஆபத்தில் இருக்கலாம்.

விரைப் புற்றுநோயின் வரலாறு

விரைப் புற்றுநோய் இருந்திருக்கிற ஆண்கள், அடுத்த விரையிலும் புற்றுநோய் தோன்றி விடுவதற்கான அதிகரித்த ஆபத்தில் இருக்கிறார்கள். சகோதர‎ர் அல்லது தந்தைக்கு இந்நோய் இருந்திக்கிற ஆண்களில், விரைப் புற்றுநோயிற்கான ஆபத்து மிக அதிகமானதாகும். க்ளின்•பெல்டெர்ஸ் சிண்ட்ரோம் போன்ற நிலைமைகள், இதில் விரைகள் இயல்பாக வளர்ச்சியடையாமல், விரைப் புற்றுநோயிற்கான ஒரு நபரின் ஆபத்தை அதிகரிக்கச் செய்யக்கூடும்.

அடையாளங்களும் அறிகுறிகளும்

காயம், சுகவீனம், நோய் அல்லது உடலில் சரியாக இல்லாத ஏதோவொன்றின் சமிக்கைகள்

அடையாளம்:

வேறு ஏதோவொன்றினால் காணமுடிகிற சமிக்கை உதாரணமாக, காய்ச்சல், வேகமான சுவாசம், மற்றும் ஸ்டெத்தாஸ்கோப் வாயிலாக‏ இயல்பிற்கு மாறான நுரையீரல் ஒலிகள் கேட்பது ஆகியவை நிமோனியாவின் அடையாளங்களாக இருக்கலாம்.

அறிகுறிகள்

 • சமிக்கைகள் உள்ள நபரால் உணரப்படுகிற அல்லது அறிவிக்கப்படுகிற ஆனால் வேறு யாராலும் எளிதாகக் காண முடியாத சமிக்கைகள். உதாரணமாக, பலவீனம், நோவெடுத்தல் மற்றும் மூச்சுத்திணறலாக உணர்தல் ஆகியவை நிமோனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம்.
 • விரைப் புற்றுநோயி‎னால் ஏற்படக்கூடிய அடையாளங்களில், விரைப்பையில் வீக்கம் அல்லது அசௌகரியம் அடங்குகிறது. இத்தகைய மற்றும் மற்ற அறிகுறிகளும் விரைப் புற்றுநோயினால் உண்டாக்கப்படலாம்.
 • இரு விரையிலும் ஓர் வலியில்லாத திரட்சி அல்லது வீக்கம்
 • ஒரு விரை எவ்விதம் உணர்கிறது என்பதில் ஓர் மாற்றம்
 • விரைப்பையில் திடீரென்றதோர் திரவத் தேக்கம்
 • அடிவயிற்றின் கீழ்ப் பகுதியில் அல்லது அரைப்பகுதியில் ஓர் மந்தமான நோவு
 • ஒரு விரையில் அல்லது விரைப்பையில் வலி அல்லது அசௌகரியம்

விரைப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தல் / நோய்ப்பாதிப்பு ஆய்வு (ஸ்க்ரீனிங்) செய்தல்

ஆரம்பகாலத்திலேயே விரைப் புற்றுநோயைக் கண்டுபிடிக்க வழிசெய்கிற ஒரு அணுகுமுறையை உபயோகித்தல்.

பெரும்பாலான விரைப் புற்றுநோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்துவிட முடியும். சில ஆண்களில், ஆரம்பகட்ட விரைப் புற்றுநோய்கள், மருத்துவ உதவியை அவர்கள் நாடச் செய்யும் அளவிற்கு, அறிகுறிகளை உண்டாக்கி விடுகின்றன. பெரும்பாலான நேரங்களில், விரையில் ஏற்படுகிறதோர் திரட்சியே முதல் அடையாளமாகி விடுகிறது. ஆயினும், துரதிஷ்டவசமாக, சில விரைப் புற்றுக்கட்டிகள், ஒரு முற்றிய நிலையை அடைந்திருப்பதற்குப் பின்பு வரை, அறிகுறிகளை உண்டாக்காமல் இருக்கலாம். ஒரு ஆணின் விரைகளை ஆய்வு செய்வது என்பது ஓர் பொது உடற்பரிசோதனையின் ஓர் பகுதியாக இருக்க வேண்டும் எ‎ன்பதை பெரும்பாலான மருத்துவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்

வழக்கமான புற்றுநோய் - தொடர்புடைய பரிசோதனையின் ஒரு பகுதியாக ஓர் விரைப் பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும் என்றே அமெரிக்கப் புற்றுநோய் சங்கம் (ஏசிஎஸ்) சிபாரிசு செய்கிறது. விரைப் புற்றுநோய் குறித்துத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு விரையில் திரட்சி எதுவும் இருப்பதாக அவர்கள் காண்கிற பட்சத்தில் அப்போதே ஒரு மருத்துவரைப் பார்க்கும்படியும் ஆண்களுக்கு ஏசிஎஸ் ஆலோசனையளிக்கிறது.

விரைப்புற்றுநோய் தோன்றுவதற்கான உங்களுக்குள்ள வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிற ஒரு சில ஆபத்துக் காரணிகள் உங்களுக்கு இருக்கிற பட்சத்தில் (கீழிறங்காத விரை, ஒரு விரையில் முன்பே இருந்த ஜீவ அணுப் புற்றுக்கட்டி, அல்லது ஓர் குடும்ப வரலாறு), நீங்கள் மாதாமாதம் பரிசோதனை செய்வதை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.

சுய விரைப் பரிசோதனை

உங்கள் விரைகளை பரிசோதனை செய்வதற்கான மிகச் சிறந்த நேரம் என்பது குளித்த பிறகு அல்லது தூவாலைக் குளியல் எடுத்த பிறகேயாகும், அப்போது விதைப்பையின் சருமம் தளர்வடைந்திருக்கிறது. ஆணுறுப்பைப் பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு, ஒவ்வொரு விரையையும் தனித்தனியாக ஆய்வு செய்யவும், விரைகளை உங்கள் பெருவிரலுக்கும் மற்ற விரல்களுக்கும் இடையே வைத்து இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, அதனை விரல்களுக்கு இடையே நாசுக்காக உருட்டவும், கடினமான திரட்சிகள் அல்லது கட்டிகள் (மிருதுவான வட்டவடிவ திரள்கள்) ஏதும் உள்ளதா என அல்லது விரைகளின் அளவு, வடிவம் அல்லது ஒத்ததன்மையில் மாற்றம் எதுவும் உள்ளதா எனத் தொட்டுப் பாருங்கள்.

விரைப் புற்றுநோயைக் கண்டறிதல் மற்றும் அதன் நிலையறிதல்

இது, நிணநீர் மண்டலத்தை ஊடுகதிர் படம் எடுப்பதற்கு உபயோகிக்கிறதோர் நடைமுறையாகும். பாதத்தில் உள்ள நிணநீர் குழாய்களுக்குள் ஒரு நிறமி ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. அந்த நிறமி, நிணநீர் முடிச்சுகள் மற்றும் நிணநீர் குழாய்கள் வழியாக மேல்நோக்கிப் பயணிக்கிறது, மேலும் அங்கே அடைப்புகள் ஏதும் உள்ளனவா என்பதைப் பார்ப்பதற்காக ஊடு-கதிர் படங்கள் எடுக்கப்படுகின்றன. இப்பரிசோதனை, நிணநீர் முடிச்சுகளுக்கும் புற்றுநோய் பரவியிருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க உதவுகிறது. இது, அடிவயிற்றில் உள்ள நிணநீர் முடிச்சுகள் அகற்றியெடுக்கப்பட்டு, புற்றுநோயின் அடையாளங்களுக்காக அதன் திசு மாதிரி ஒன்று ஒரு நுண்ணோக்கியின் கீழ் வைத்து சோதித்துப் பார்க்கப்படுகிறது.

நான்செமினோமா உள்ள நோயாளிகளைப் பொருத்த வரையில், அந்நிணநீர் முடிச்சுகளை அகற்றியெடுப்பது, நோய் பரவுவதைத் தடுத்து நிறுத்த உதவிபுரியலாம். செமினோமா நோயாளிகளின் நிணநீர் முடிச்சுகளில் உள்ள புற்றுநோய் அணுக்களுக்கு, கதிரியக்கச் சிகிச்சைமுறை கொண்டு சிகிச்சையளிக்கலாம்.

நிலை 1 என்பது, நிலை 1எ, நிலை 1பி மற்றும் நிலை 1எஸ் என்பதாகப் பிரிக்கப்பட்டு, ஒரு ரேடிக்கல் இங்வினல் ஆர்கியெக்டமி செய்த பிறகு தீர்மானிக்கப்படுகிறது.

 • நிலை 1 : விரையிலும், எபிடிடிமிஸிலும் புற்றுநோய் இருக்கிறது மேலும் அது விரையைச் சுற்றியுள்ள சவ்வின் உள் அடுக்குகளுக்குப் பரவியிருக்கலாம் அனைத்து புற்றுக்கட்டி குறிகாட்டி அளவுகளும் இயல்பாக உள்ளன.
 • நிலை 1பி : விரையிலும், எபிடிடிமிஸிலும் புற்றுநோய் இருக்கிறது மேலும் அது இரத்தக் குழாய்களுக்கு அல்லது விரையில் உள்ள நிணநீர் குழாய்களுக்குப் பரவியிருக்கிறது அல்லது விரையைச் சுற்றியுள்ள சவ்வின் வெளி அடுக்குகளுக்குப் பரவியிருக்கிறது. அல்லது அது விரை நாண் அல்லது விரைப்பையில் உள்ளது மேலும் அது இரத்தக் குழாய்களில் அல்லது விரை‏யின் நிணநீர் குழாய்களில் இருக்கலாம்.
 • நிலை 1எஸ் : விரை, விரை நாண், அல்லது விரைப்பையில் எங்கேனும் ஒரு இடத்தில் புற்றுநோய் காணப்படுகிறது. மேலும் அனைத்து புற்றுக்கட்டி அளவுகளும் இயல்பை விட சற்று மேலே அல்லது உயர்வாக உள்ளன.

நிலை 2 என்பது, நிலை 2எ, நிலை 2பி மற்றும் நிலை 2சி என்பதாகப் பிரிக்கப்பட்டு, ஒரு ரேடிக்கல் இங்வினல் ஆர்கியெக்டமி செய்த பிறகு தீர்மானிக்கப்படுகிறது.

 • நிலை 2எ-வில் புற்றுநோய் விரை, விரை நாண், அல்லது விரைப்பையில் எங்கேனும் ஒரு இடத்தில் புற்றுநோய் உள்ளது; மேலும் அடிவயிற்றில் உள்ள 5 நிணநீர் முடிச்சுகள் வரை பரவியிருக்கிறது, அதில் குறைந்தது ஒரு நிணநீர் முடிச்சாவது 2 செண்டிமீட்டர்களை விடப் பெரிதாக உள்ளது, ஆனால் எதுவுமே 5 செண்டிமீட்டர்களை விடப் பெரிதாக இல்லை.
 • நிலை 2சி-யில் புற்றுநோய் விரை, விரை நாண், அல்லது விரைப்பையில் எங்கேனும் ஒரு இடத்தில் உள்ளது; மேலும் அடிவயிற்றில் உள்ள 5 நிணநீர் முடிச்சுகளுக்குப் பரவியிருக்கிறது, அது 5 செண்டிமீட்டர்களை விட பெரிதாக இருக்கிறது. அனைத்து புற்றுக்கட்டி குறிகாட்டி அளவுகளுமே இயல்பாக உள்ளன அல்லது இயல்பை விட சற்று மேலே உள்ளன.

நிலை 3 என்பது, நிலை 3எ, நிலை 3பி மற்றும் நிலை 3சி என்பதாகப் பிரிக்கப்பட்டு, ஒரு ரேடிக்கல் இங்வினல் ஆர்கியெக்டமி செய்த பிறகு தீர்மானிக்கப்படுகிறது.

 • நிலை 3எ-யில் புற்றுநோய் : விரை, விரை நாண், அல்லது விரைப்பையில் எங்கேனும் ஒரு இடத்தில் உள்ளது; மேலும் அடிவயிற்றில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிணநீர் முடிச்சுகளுக்கு, தொலைவில் உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கு, அல்லது நுரையீரல்களுக்குப் பரவியிருக்கலாம். புற்றுக்கட்டிக் அளவுகள், இயல்பான அளவிலிருந்து சற்று மேலான அளவு வரை இருக்கலாம்.

விரைப் புற்றுநோயை வரவிடாமல் தவிர்த்தல்

விரைப் புற்றுநோயை வராமல் தவிர்த்து விட முடியுமா? விரைப் புற்றுநோயுள்ள அநேக ஆண்களுக்கு எவ்வித தெரிந்த ஆபத்துக் காரணிகளும் இருப்பதில்லை. மேலும் கீழிறங்காத விரைகள் மற்றும் அந்நோயின் குடும்ப வரலாறு போன்ற தெரிந்த ஆபத்துக் காரணிகளில் சில, தவிர்க்க முடியாதவையாகும். இக்காரணங்களினால், இந்நோயின் பெரும்பாலான நிலைகளை இப்போது தவிர்ப்பது சாத்தியமற்றதாகும். ஆண் குழந்தைகளில் கிரிப்டார்கிடிசம் (விரை கீழிறங்காத) நிலையை சரிசெய்து கொள்வது புத்திசாலித்தனமானதாகும். ஆனால் விரைப் புற்றுநோய் ஏற்படுவதற்கு அக்குழந்தைக்குள்ள ஆபத்தை இது மாற்றிவிடுகிறது என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

ஆயுளின் ஆரம்பத்திலேயே கிரிப்டார்கிடிசம் நிலையை சரி செய்வது என்பது, கருவுறச் செய்யும் திறன் மற்றும் உடல் தோற்றம் போன்ற காரணங்களுக்காக பருவம் அடையும் வரைக் காத்திருப்பதை விட சிறந்தது என்பதாகத் தோன்றவில்லை. மேற்கொண்டும், கிரிப்டார்கிடிசம் போன்றதோர் ஆபத்துக் காரணி தனக்குள்ளதாகத் தெரிந்திருக்கிற ஒருவர், மிகுந்த கவனத்தோடு இருக்குமாறும், ஆரம்பகாலத்திலேயே நோயைக் கண்டறிந்து விட வழி செய்கிற வகையில், சுய விரை ஆய்வை கைக்கொள்ளுமாறும் ஊக்குவிக்கப்படலாம்.

ஆதாரம் : ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையம்

2.92156862745
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top