பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வெள்ளணுப்புற்று

வெள்ளணுப்புற்று பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வகைகள்

இது இரத்தம் அல்லது எலும்பு மச்சையின் புற்றுநோய் ஆகும். வளர்ச்சியற்ற வெள்ளையணுக்களின் அளவுக்கு அதிகமான பெருக்கமே இந்நோயின் தன்மை. இரு வகையான வெள்ளணுப்புற்று உண்டு

கடும் வெள்ளணுப்புற்று

வளர்ச்சியற்ற வெள்ளணுக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகமாவதை வைத்து இது இனங்காணப்படுகிறது. வளர்ச்சியற்ற வெள்ளணுக்களால் எலும்பு மச்சையில் நெருக்கம் மிகுவதால் அதனால் ஆரோக்கியமான வெள்ளணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போய்விடுகிறது. கடும் வெள்ளணுப்புற்றுவிற்கு உடனடி மருத்துவம் தேவை. ஏனெனில், வளர்ச்சியற்ற வெள்ளணுக்கள் வேகமாகப் பெருகி தேங்குகின்றன.  பின் இவை இரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் பிற உறுப்புகளுக்கும் பரவுகின்றன. வெள்ளணுப்புற்று வகைகளில் கடுமையானவையே குழந்தைகளுக்குப் பொதுவாகக் காணப்படுகிறது.

நீடித்த வெள்ளணுப்புற்று

வளர்ச்சியுற்ற ஆனால் அசாதாரணமான இரத்த வெள்ளணுக்கள் வேகமாகப் பெருகுவதைக் கொண்டு இது இனங்காணப்படுகிறது. இது வளார்ச்சி அடைய பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் பிடிக்கும். இயல்பை விட இது அதிக வேகத்தில் உற்பத்தியாகும்.  இதனால் அசாதரணமான வெள்ளணுக்கள் அதிகமாகி விடுகின்றன.

கடும் வெள்ளணுப்புற்றுவிற்கு உடனடியாக மருத்துவம் அளிக்க வேண்டும். அதே நேரத்தில் நீடித்த வகைக்கு தகுந்த பலனளிக்கும் மருத்துவத்தை உறுதி செய்ய சிறிது காலம் கண்காணித்துப் பின் சிகிச்சை அளிக்க வேண்டும். நீடித்த வெள்ளணுப்புற்று பெரும்பாலும் முதுமையில் உண்டாகிறது. ஆனால் அது எவ்வயதினருக்கும் வரும் வாய்ப்புண்டு. வெள்ளணுப்புற்று சிகிச்சை அளிக்கக் கூடிய நோயே. பெரும்பாலான சிகிச்சைகள், வேதிச்சிகிச்சை, மருத்துவ கதிர்வீச்சு சிகிச்சை அல்லது இயக்குநீர் சிகிச்சை ஆகியவற்றில் அடங்கும்.

நோய்றிகுறிகள்

கடும் வெள்ளணுப்புற்றின் அறிகுறிகளில் அடங்குவன

 • வெளிறிய தோல்
 • களைப்பு
 • அடிக்கடி ஈறுகள் அல்லது மூக்கில் இரத்தம் வடிதல் போன்ற அசாதாரணமான இரத்தக் கசிவு
 • தோல் எளிதாகக் காயமடைதல்
 • குறுகிய கால அளவில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்
 • கடும் காய்ச்சல் - 38C (100.4F) அல்லது மேலும்
 • அதிக வியர்வை
 • எலும்பு மற்றும் மூட்டு வலி
 • எடை குறைவு

பின்னர் தோன்றும் அறிகுறிகள் (நீடித்த வகை)

 • தொற்று (குறுகிய கால அளவில்)
 • களைப்பு
 • மூச்சடைப்பு
 • பலவீனம்
 • இரவில் வியர்வை
 • அசாதாரண இரத்தக்கசிவு மற்றும் காயம்
 • மண்ணீரலும், நிணநீர் சுரப்பிகளும் வீங்குதல்

காரணங்கள்

வெள்ளணுக்களை உற்பத்தி செய்யும் மூல உயிரணுக்களில் காணப்படும் டி.என்.ஏ அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும்போது கடும் வெள்ளணுப்புற்று தொடங்குகிறது. இது மரபியல் பிறழ்வு எனப்படுகிறது.

நீடித்த வெள்ளணுப்புற்று ஒரு பெறப்பட்ட மரபியல் நோயாகும். இயல்பான இரத்த அணுக்கள் மாற்றங்களைப் பெறுவதால் அவை மேலும் வளர்கின்றன.

நோய் கண்டறிதல்

நுண்ணோக்கி ஆய்வு: இரத்த எண்ணிடலில் அதிக எண்ணிக்கையில் லிம்போசைட்டுகள் (வடிநீர் உயிரணு – ஒரு வகையான இரத்த வெள்ளணு) காணப்படும்.

எலும்பு மச்சை ஆய்வு:  கடும் வெள்ளணுப்புற்றை உறுதி செய்ய எலும்பு மச்சையின் ஒரு சிறு மாதிரி நுண்ணோக்கியில் ஆய்வு செய்யப்படுகிறது. இது எலும்புமச்சை ஆய்வு எனப்படும்.

உயிரணுமரபியல் சோதனை: புற்றணுவின் மரபியல் அமைப்பு முறை ஆய்வு இதில் அடங்கும்,

கணினி வரைவி: கடும் வெள்ளணுப்புற்று நோயாளிகளின் இதயம் நுரையீரல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தைச் சோதிக்கக் கணினி வரைவிப் படம் எடுக்கப்படுகிறது.

இடுப்புத் துளையிடல்: கடும் வெள்ளணுப்புற்று நரம்பு மண்டலத்துக்கு பரவும் அபாயம் இருந்தால் இடுப்புத் துளையிடல் ஆய்வு செய்யப்படும்.

இவைகள் குறிப்பான தகவல்களே. நோய் கண்டறிதலுக்கும் மருத்துவத்துக்கும் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

நோய் மேலாண்மை

வெள்ளணுப்புற்று நோய்க்கு மருத்துவம் கட்டம் கட்டமாகச்  செய்யப்படுகிறது.

 • தொடக்கம் ––– எலும்பு மச்சையில் இருக்கும் வெள்ளணுப்புற்று உயிரணுக்களை அழித்து, தகுந்த முறையில் செயல்பட இரத்தத்தைப் பழையநிலைக்கு கொண்டுவந்து, அறிகுறிகள் இருந்தால் அவற்றைத் தீர்ப்பதே முதல் கட்ட மருத்துவத்தின் நோக்கமாகும்.
 • ஒருங்கிணைப்பு ––– நடு நரம்பு மண்டலத்தில் ஏதாவது வெள்ளைப் புற்றணுக்கள் தப்பி இருந்தால் அவற்றையும் அழிப்பது.
 • பராமரிப்பு —— வெள்ளணுப்புற்று மீண்டும் வராமல் தடுக்கத் தொடர்ந்து வேதியற் மாத்திரைகளை உட்கொள்ளுவதே இறுதிக்கட்டமாகும்.

கடும் வெள்ளணுப்புற்றுக்கு மருத்துவம்

வேதியற்சிகிச்சை: கடும் நோயாளிகளுக்கு இது மிகவும் பலனளிக்கக் கூடியது. அல்கைலேற்றும் மருந்துப் பொருளுடன் (சைக்ளோஃபாஸ்பாமைட்) ஃபுளூடரபைன் சேர்த்துக் கொடுப்பது தனி மருந்தைவிட அதிக பலனையும் நீண்ட குணம் அடைந்துவரும் வாழ்வையும் தருகிறது.

எலும்பு மச்சை மற்றும் மூல உயிரணு மாற்றம்: நீடித்த வெள்ளணுப்புற்று நோய்க்கு  எலும்பு மச்சை அல்லது மூல உயிரணு மாற்றம் இன்னொரு முறையாகும்.

இவைகள் குறிப்பான தகவல்களே. நோய் கண்டறிதலுக்கும் மருத்துவத்துக்கும் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

சிக்கல்கள்

கடும் வெள்ளணுப்புற்றின் பொதுவான சிக்கல் நோய்த்தடுப்பு மண்டலம் பலவீனமாவதே. இரத்தத்தில் உறைதல் தன்மை உயிரணுக்கள் குறைவாக இருப்பதால் கடும் வெள்ளணுப்புற்று நோயாளிகளுக்கு இரத்தக் கசிவும் காயம்படுதலும் பரவலாக இருக்கும். இரத்தப்போக்கும் மிக அதிகமாகும். கடும் வெள்ளணுப்புற்றின் சிக்கல்கள்:

ரிக்டர் நோய்: ரிக்டர் நோய் அறிகுறிகள்:

 • நிணநீர்ச் சுரப்பிகள் திடீரென வீங்குதல்
 • தொற்றால் அதிக காய்ச்சல்
 • இரவு வியர்வை
 • எடை குறைவு
 • வயிற்று வலி

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top