பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / எலும்பு மற்றும் வாதம் / இளம்பிள்ளை வாதம் (போலியோமைலிட்டிஸ்)
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இளம்பிள்ளை வாதம் (போலியோமைலிட்டிஸ்)

இளம்பிள்ளை வாதம் (போலியோமைலிட்டிஸ்) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

போலியோ (சாம்பல்நிறம்) மற்றும் மைலான் (மச்சை, தண்டுவடத்தைக் குறிக்கிறது) ஆகிய இரு சொற்களும் கிரேக்க மொழி மூலம் கொண்டவை. போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது. போலியோவைரசால் உண்டாகும் இந்நோய் முடமாக்கக் கூடியதும் மரணத்தை வரவழைப்பதுமான தொற்று நோய். மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவுகிறது. இது மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதால் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. போலியோ வைரசுக்கு அறியப்பட்ட ஒரே புகலிடம் மனிதனே. தொற்று உள்ள ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது.

இது வரையிலும் இதற்கான குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப் படவில்லை. ஆகவே, தடுப்பு மருந்து மட்டுமே பாதுகாப்புக்கும் பரவாமல் தடுப்பதற்கும் உள்ள ஒரே வழி.

பொதுவாக, போலியோ தொற்றில் இரு அடிப்படை வடிவங்கள் உள்ளன:

நடுநரம்பு மண்டலத்தைத் தாக்காத குறும்நோய். இது சில சமயம் குறை இளம்பிள்ளைவாதம் என அழைக்கப்படும்.

நடுநரம்பு மண்டலத்தைத் தாக்கும் பெரும்நோய். இதில் பக்கவாதம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

இளம்பிள்ளை வாதம், வைரஸ் உள்ள உணவு அல்லது நீரை உட்கொள்ளும்போது மலவாய்-வாய் வழியாகவோ அல்லது வாய்-வாய் வழி மூலமாகவோ பொதுவாகப் பரவுகிறது. நோய் தோன்றும் பகுதிகளில் முழு மக்கள் தொகுதியையும் போலியோ வைரஸ் பாதிக்கும். மிதவெப்ப வானிலைகளில் பருவகாலம் சார்ந்து இந்நோய் பரவும். கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் உச்சத்தை அடையும்.

நோயறிகுறிகள்

95% போலியோ தொற்று அறிகுறிகளைக் காட்டுவதில்லை. போலியோ வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மலம் மூலமாக தொற்று பிறருக்குப் பரவும் அபாயம் உள்ளது.

ஏறக்குறைய 4-8%  போலியோ தொற்று, குறும்நோயாக மாறுகிறது. மருத்துவ மற்றும் ஆய்வகச் சோதனைகளில் நடுநரம்பு மண்டலத்தைப் பாதித்ததற்கான தடயங்கள் இருப்பதில்லை. இது குறை இளம்பிள்ளை வாதம் எனப்படுகிறது. ஒரு வாரத்தில் முற்றிலும் குணமடைவது இதன் இயல்பு. இத்தகைய போலியோவைரஸ் தொற்றில் மூன்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன: மேல் மூச்சுப்பாதைத் தொற்று  (தொண்டைவலியும் காய்ச்சலும்), இரைப்பைக்குடல் உபாதைகள் (குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு) மற்றும் இன்ஃபுளுயன்சா போன்ற நோய்கள்.

1-2 % தொற்று, வாதமற்ற பரவாத மூளைக்காய்ச்சலாக (கழுத்து, முதுகு மற்றும்/அல்லது கால் விறைப்பு அறிகுறி) உருவாகிறது. இந்த அறிகுறிகள் சிறு நோய் போல பல நாட்கள் தொடரும். அதிக அல்லது அசாதாரண உணர்வுகள் ஏற்படும். 2-10 நாட்கள் வரை இவ்வறிகுறிகள் நீடித்துப் பின் முற்றிலும் மறைந்து போகும்.

ஒட்டுமொத்தப் போலியோ தொற்றில், 1% விட குறைவானவையே தசை மெலிந்த வாதமாக வெளிப்படுகிறது. ஒரு சிறு நோயைத் தொடர்ந்து 1-10 நாட்களில் இளம்பிள்ளை வாத அறிகுறிகள் பொதுவாகத் தொடங்குகின்றன. காய்ச்சல் இயல்பு நிலைக்கு வந்த பின் மேலும் வாதம் ஏற்படாது. தொடக்கத்தில் தசைநாண் செயல்பாடு அதிகரிப்பும், கடும் தசை வலியும், அவயவ அல்லது முதுகு பிடிப்போடும் கூடிய மேலோட்டமான அனிச்சை செயல் இழப்பு அறிகுறியில் அடங்கும். ஆழ்தசைநாண் அனிச்சை செயல்கள் குறைந்து இந்நோய் தொய்வு வாதமாக மாறும். பலநாட்கள் அல்லது வாரங்களுக்கு மாற்றமின்றி அவ்வாறே இருக்கும். இந்நிலையில் இது சமச்சீரற்றுக் காணப்படும். பின் வலிமை திரும்பத் தொடங்கும். நோயாளிக்கு உணர்விழப்போ அறிவாற்றல் மாற்றமோ இருக்காது.

பல பக்கவாதமுள்ள போலியோமைலிட்டிஸ் நோயாளிகளுக்கு தசைச் செயல்பாடுகள் சிறிதளவு பழைய நிலைக்குத் திரும்பும். அறிகுறி தோன்றி 12 மாதத்துக்குப் பின்னும் நீடிக்கும் பலவீனம் அல்லது வாதம் பொதுவாக நிலைத்து நிற்கும்.

காரணங்கள்

போலியோவைரசால் இளம்பிள்ளைவாதம் உண்டாகிறது. இந்த வைரசு இரைப்பைக்குடல் பாதையில் (குறிப்பாகத் தொண்டையிலும் குடலிலும்) குடியேறுகிறது. இது மிகவும் பரவும் தொற்றாகும். வைரசுள்ள உணவு மற்றும் நீரின் மூலமாக, மலவாய்ப் பாதை வழியாகவோ அல்லது வாய்-வாய்ப் பாதை வழியாகவோ வைரஸ் பரவும்.

நோய்கண்டறிதல்

வைரசைத் தனிமைப்படுத்தல்

இளம்பிள்ளை வாதமுடைய ஒருவரின் மலம் அல்லது தொண்டையில் இருந்து போலியோவைரஸ் எடுக்கப்படுகிறது. மூளைத்தண்டுவட பாய்மத்தில் இருந்து வைரசைப் பிரித்து எடுப்பதே நோய்கண்டறிதல். ஆனால் அது அபூர்வமாகவே முடியக்கூடியது ஆகும். கடும் தளர் வாதம் உடைய ஒருவரிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட வைரஸ் மேலும் சோதிக்கப்பட வேண்டும். ஒலிகோநியூக்ளியோடைட் படமிடல் (oligonucleotidemapping) அல்லது மரபணு வரிசைப்படுத்துதல் (genomic sequencing) மூலம் அந்த வைரசு இயற்கையானதா (“wild type”) அல்லது தடுப்புமருந்து வகையா (தடுப்பு மருந்து திரிபில் இருந்து பெறப்பட்டது) என்று தீர்மானிக்கப்படும்.

ஊனீரியல்

தொடக்கத்திலேயே சமன்படுத்தும் எதிர்பொருட்கள் தோன்றி, நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அதிக அளவில் பெருகி இருக்கும். இதனால் நான்கு மடங்கு அதிகரிப்பை எதிர்பொருள் வேதியல் வினையூக்கி சோதனையால் காட்ட முடியாது.

மூளைத்தண்டுவடப் பாய்மம்

இளம்பிள்ளைவாதத் தொற்று நோய் இருந்தால் மூளைத் தண்டுவட பாய்மத்தில் பொதுவாக வெள்ளணுக்களின் என்ணிக்கை அதிகமாய் இருக்கும் (10-20 உயிரணுக்கள்/mm3, பெரும்பாலும் வடிநீரணுக்கள்). மேலும், புரத அளவும் சற்றே அதிகரிக்கும் (40–50 mg/100 mL).

நோய்மேலாண்மை

இளம்பிள்ளை வாதத்தைக் குணப்படுத்த முடியாது. எனவே நோயாளிக்கு ஆதரவு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளி நலமடையும் வரை அறிகுறிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படும். போலியோ அறிகுறிகளுக்கான மருந்துகள், உடற்பயிற்சிகள் மற்றும் சமநிலை உணவு.

சிக்கல்கள்

நிரந்தரமான தசை வாதமும், இடுப்பு, கணுக்கால், மற்றும் பாதங்களின் குறைபாடுகளும், ஊனமும், இளம்பிள்ளை வாதத்தினால் உண்டாகலாம். பல குறைபாடுகளை அறுவை மருத்துவத்தின் மூலமும் உடலியல் சிகிச்சை மூலமும் சரிசெய்ய முடியும் என்றாலும் இடம்சார்ந்த நோயாக இன்னும் விளங்கும் வளர்ந்து வரும் நாடுகளில் இந்த சிகிச்சை முறைகள் சாத்தியமில்லை. இதன் காரணமாக இளம்பிள்ளை வாதத்திற்குத் தப்பிப் பிழைக்கும் குழந்தைகள் கடுமையான குறைபாடுகளோடேயே வாழவேண்டியுள்ளது.

  • நுரையீரல் அழற்சி
  • இதயக்கீழறை மிகுவழுத்தம்
  • அசைவின்மை
  • நுரையீரல் பிரச்சினைகள்
  • நுரையீரல் வீக்கம்
  • அதிர்ச்சி
  • நிரந்தரத் தசை வாதம்
  • சிறுநீர்ப்பாதைத் தொற்று

தடுப்புமுறை

இளம்பிள்ளை வாதம் இதுவரை குணப்படுத்த முடியாத நோயாக இருந்து வருகிறது. எனவே தடுப்பு மருந்து ஒன்றே பாதுகாப்பும் நோயைக் கட்டுப்படுத்தும் ஒரே வழியுமாகும்.

இரு வகையான தடுப்பு மருந்துகள் உள்ளன: வீரியம் அழிக்கப்பட்ட இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து (Inactivated polio vaccine- IPV) மற்றும் வாய்வழி இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து (oral polio vaccine - OPV).  வயதைப் பொறுத்துக் காலிலோ புயத்திலோ IPV ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது. பிற தடுப்பு மருந்துகள் அளிக்கும்போதே போலியோ தடுப்பு மருந்தும் அளிக்கலாம். குழந்தைப் பருவத்திலேயே தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு 4 வேளை IPV பின்வரும் வயதில் அளிக்கவேண்டும்: 2 வது மாதம், 4 வது மாதம், 6-18 வது மாதம் மற்றும் ஊக்க அளவு 4-6 வயதில்.

OPV – யில், மூன்று போலியோவைரஸ் வகையிலும் உயிருள்ள மற்றும் வீரியம் குறைந்த போலியோ வைரஸ் திரிபுகளின் கலவை இருக்கும். போலியோ சொட்டு மருந்துத் திட்டத்தின் கீழ் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு இரு வேளை வாய்வழி தடுப்பு மருந்து கொடுக்கப்படும். குழந்தைகள் காக்கப்படுவதோடு சமூகத்தில் பரவலாக்கப்பட்டு விரிவான பாதுகாப்பையும் அளிக்கிறது.

கேள்வி பதில்கள்

போலியோ என்றால் என்ன?

இளம்பிள்ளை வாதம் என்ற போலியோமைலிட்டிஸ் ஒரு கடுமையான தொற்று நோய். பெரும்பாலும் இது (5 வயதுக்கு உட்பட்ட) இளம் குழந்தைகளேயே பாதிக்கிறது. இந்த வைரஸ், மனிதரில் இருந்து மனிதருக்கு, மலம் அல்லது வாய் நீர்மங்கள் வழி பெரும்பாலும் பரவுகிறது. அசுத்த நீர் அல்லது உணவு போன்ற பொது வகையில் சிறிதளவே பரவும். இது குடலில் பெருகி நரம்பு மண்டலத்தை அடைந்து வாதத்தை உருவாக்குகிறது.  

உலக அளவில் போலியோவின் நிலை என்ன?

இன்று ஆப்கானிஸ்தான், நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே இயற்கைப் போலியோ வைரஸ் பரவல் உள்ளது. 1988 ஆம் ஆண்டில் இருந்து போலியோ நேர்வுகள் 99.9 சதவிகிதமாகக் குறைந்து விட்டன. அப்போது போலியோ நேர்வுகள் 35000 மாக கணிக்கப்பட்டன.  உலக அளவில் 2016-ல் 37 நேர்வுகளே அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நோயினால் இறப்பு நிகழுமா?

200-ல் ஒரு தொற்று, குணப்படுத்த முடியாத வாதமாக மாறுகிறது (பொதுவாகக் கால்). மூச்சு மண்டலத் தசை செயல் இழப்பதால் வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 5-10% பேர் இறந்து போகின்றனர்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.01265822785
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top