பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இளவயது மூட்டு அழற்சி

இளவயது மூட்டு அழற்சி பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இளவயது மூட்டு அழற்சி (Juvenile Idiopathic Arthritis)

இது 16 வயதிற்கு குறைந்த சிறுவர்களிடையே ஏற்படுகின்ற மூட்டு அழற்சி நோயாகும். இது 6 கிழமைகளுக்கு தொடர்ச்சியாக காணப்படவேண்டும்.

அறிகுறிகள்

இளவயது மூட்டு அழற்சிக்குரிய அறிகுறிகளாக

  1. உடல் அசதி
  2. உடல் மந்தம்
  3. பசிக்குறைவு

என்பன ஏற்பட்டாலும் இவை இந்நோய்க்குரிய சிறப்பான இயல்புகள் அல்ல இத்துடன் குழந்தை நடக்கும்போது அவயங்கள் குறுகியது போன்று காணப்படும்.

முக்கியமாக முழங்கால், கணுக்கால், மணிக்கட்டு மூட்டுக்களில் வீக்கம் ஏற்பட்டு நோயளியின் அசைவில் கட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றது.

இந்நோய் ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று அறியப்படாதபோதும் சூழலியல் காரணங்களே பெரிதும பங்கு வகிப்பதாக நம்பப்படுகின்றது.

நோய்ப்பரிசோதனை

கழியொலிப்பரிசோதனை – இதனால் மூட்டுக்களில் ஏற்படும் வீக்கம், அவை கொண்டுள்ள

பாயியின் தன்மை, கூறுகள் என்பன பற்றி இனம் காண முடியும்

காந்தப்பரிவுப் படப்பிடிப்பு – இதன் மூலம் மூட்டுக்களில் காணப்படும் மென்மையான

இழையங்களிலுள்ள குறைபாடுகள் பற்றி அறிய முடியும்.

இந்நோயின் வகைகளும் பண்பும்

ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுக்கள் பாதிக்கப்படல் (ஒலிகோ) இதில் ஐந்துக்கு குறைவான மூட்டுக்களே பாதிக்கப்படுகின்றன. பெரும்பாலும் பெண்பிள்ளைகளில் ஏற்படுகின்ற இவ்வகை நோயானது ஒன்று தொடக்கம் மூன்று வயது  வரையான பிள்ளைகளையே பாதிக்கும்.

இவ்வகை நோயுள்ளவர்கள் சிறந்த நோய்ப்போக்கினை காண்பிக்கிறார்கள் மற்றொயிட்டு காரணியற்ற பல் மூட்டு அழற்சி இதில் 4 இற்கு மேற்பட்ட மூட்டுக்கள் பாதிக்கப்படுவதுடன் பெரும்பாலும் பாலர் பாடசாலைக் குழந்தைகளிலேயே பெரும்பாலும் ஏற்படுகின்றது. இது ஆண் : பெண் = 1 : 3 என்ற விகிதத்தில் காணப்படுவதோடு நீண்ட கால நோக்கில் சிறந்த நோய்ப்போக்கினைக் காட்டுகின்றது.

ஆதாரம் : ஆரோக்கிய தகவல் தளம்

3.06849315068
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top