பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

எலும்பழற்சி

எலும்பழற்சி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

எலும்பழற்சி என்பது ஓர் எலும்புத் தொற்றுநோயைக் குறிக்கிறது. பொதுவாக இது ஒரு பாக்டீரியாவால் உண்டாகிறது. இதனால் எலும்பு சிதைவடைகிறது. இதனை இருவகையாகக் குறிப்பிடலாம்

 • கடுமையான எலும்பழற்சி
 • நீடித்த எலும்பழற்சி

மேலும் இது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது:

 • சீழ்க்கட்டு எலும்பழற்சி
 • கடும் சீழ்க்கட்டு எலும்பழற்சி
 • நீடித்த சீழ்க்கட்டு எலும்பழற்சி
 • முதனிலை (முந்திய கட்டம் இல்லை)

இரண்டாம் நிலை ( கடுமையான ஒரு கட்டத்தைத் தொடர்ந்து)

 • சீழற்ற எலும்பழற்சி
 • பரவல் எலும்புக்காழ்ப்பு
 • குவி எலும்புக்காழ்ப்பு (ஒடுங்கு எலும்பழற்சி)
 • வளர் அழற்சி (எலும்பு வளர்ச்சி அழற்சி, கரேயின் எலும்புக்காழ்ப்பு எலும்பழற்சி)
 • கதிர்வீச்சு எலும்புநசிவு

நோய் அறிகுறிகள்

மிகவும் பொதுவான அறிகுறி எலும்பு வலியும் அதிகமான காய்ச்சலும் ஆகும்.

கடும் எலும்பழற்சியின் அறிகுறிகளில் அடங்குவன:

 • அதிகக் காய்ச்சல்: 38°C (100.4°F) அல்லது கூடுதல்
 • கடுமையான எலும்பு வலி
 • அழற்சியுள்ள இடத்தில் வீக்கம், சிவத்தல் மற்றும் வெப்பம்
 • பாதிக்கப்பட்ட உடல் பகுதி மென்மையாக இருக்கும்
 • பாதிக்கப்பட்ட உடல் பகுதியில் அசைவு குறைதல்
 • பாதிக்கப்பட்ட பகுதியில் நிணநீர்ச் சுரப்பிகளின் வீக்கம்

நீடித்த எலும்பழற்சியின் அறிகுறிகள்

முன் ஏற்பட்ட தொற்றின் அறிகுறிகள் மீண்டும் நீடித்த எலும்பழற்சியில் தோன்றும். அறிகுறிகள் எப்போது வேண்டுமென்றாலும் வெடித்தெழும்

 • எலும்பு வலி
 • தொடர்ந்து களைப்பாக உணர்தல்
 • அழற்சியுற்ற எலும்பின் அருகில் ஏற்படும் துளையிலிருந்து சீழ் வடிதல்
 • அழற்சி இடத்தில் வீக்கம்
 • தோலில் மாற்றம்
 • அதிக வியர்வை
 • திடீர் உடல்குளிர்

காரணங்கள்

பொதுவாக ஸ்டேஃபிலோ ஆரியஸ் என்ற பாக்டீரியாவால் இது ஏற்படுகிறது.

பெரும்பாலும் குழந்தைகளில் காணப்படுகிறது. பெரியவர்களிடத்தில் காணப்படுவதற்குக் காரணங்களாவன:

 1. நோய் எதிர்ப்புசக்தியில் குறைபாடு
 2. நுரையீரல் காசநோயின் இரண்டாம் கட்டத் தொற்று

நோய் கண்டறிதல்

உடல் பரிசோதனை

எலும்பழற்சியை உறுதிசெய்ய மருத்துவர் பாதிக்கப்பட்ட உடற்பகுதியில் சிவப்பு, வீக்கம், மென்மை ஆகியவை உள்ளனவா என்று பரிசோதனை செய்கிறார்.

இரத்தப் பரிசோதனை

நோயாளிக்கு இரத்தப்பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் எலும்பழற்சியை உறுதிசெய்ய முடியாது. ஆனால் தொற்று இருப்பதை வெள்ளணுக்களின் எண்ணிக்கையைக் கொண்டு அறியலாம்.

பிம்பசோதனைகள்

எலும்பழற்சி என சந்தேகம் எழுந்ததும் பிம்ப சோதனைகள் நடத்தப்படுகின்றன. எலும்பழற்சியால் ஏற்பட்ட எலும்புச் சிதைவை அறிய பல பிம்ப சோதனைகள் நடத்தப்படுகின்றன. அவைகளாவன:

 • எக்ஸ்-கதிர்: குறைந்த அளவு கதிர்வீச்சு பயன்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட எலும்பின் பகுதியின் பிம்பம் உருவாக்கப்படுகிறது. பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் இருந்தால் இச்சோதனை மூலம் பயன் இருக்காது.
 • காந்த அதிர்வு பிம்ப வரைவி: ஒரு வலிமையான காந்தப்புலத்தையும், வானொலி அலைகளையும்பயன்படுத்தி பாதிக்கப்பட்ட எலும்பின் உட்பகுதியின் பிம்பம் உருவாக்கப்படுகிறது.
 • கணினி வரைவிப்படம்: பாதிக்கப்பட்ட எலும்புப் பகுதியின் தொடர் எக்ஸ்-ரே படங்கள் எடுக்கப்பட்டு அவற்றைக் கணினியின் உதவியால் தொகுத்து இன்னும் விவரங்கள் அடங்கிய முப்பரிணாமப் படமாக உருவாக்கப்படுகிறது.
 • கேளா ஒலி: அதி-அதிர்வெண் ஒலி அலைகள் மூலம் பாதிக்கப்பட்ட எலும்பின் பிம்பம் உருவாக்கப்பட்டு அசாதாரண நிலைகள் கண்டறியப்படுகின்றன.

திசு ஆய்வு

ஆரம்ப கட்ட ஆய்வுகளில் எலும்பு அழற்சி என தென்பட்டால் சிறு எலும்பு மாதிரி எடுக்கப்பட்டு மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. எந்த வகையான பாக்டீரியா அல்லது பூஞ்சையால் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய திசு ஆய்வு முக்கியமாகத் தேவைப்படுகிறது. சரியான சிகிச்சை முறையை முடிவு செய்யவும் இது முக்கியமானது. நாட்பட்ட நோயாளிகளுக்கு இதனுடன் அறுவை மருத்துவமும் பொதுவாக சேர்த்துச் செய்யப்படும்.

நோய் மேலாண்மை

கடுமையான நோயாளிகளுக்கு: நுண்ணுயிர்க்கொல்லிகள் வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகின்றன.

நீடித்த நோயாளிகளுக்கு: மருந்துகளுடன் அறுவை மருத்துவமும் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொற்றுக்குக் காரணமான எலும்பை அகற்றவும், சீழையும் கட்டியையும் வடித்தெடுக்கவும், மூட்டை அகற்றவும் மாற்றவும் அறுவை மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது.

உயிர்வளி அழுத்த சிக்க்சை: மரபான சிகிச்சைகள் பலனளிக்காத கடும் மற்றும் நீடித்த எலும்பு அழற்சி நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அறுவை மருத்துவம் அல்லாத இம்முறை பயன்படுத்தப் படுகிறது.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.10989010989
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top