பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / எலும்பு மற்றும் வாதம் / நொறுங்கும் எலும்புகள் [ஆஸ்டியோபோரோசிஸ்]
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நொறுங்கும் எலும்புகள் [ஆஸ்டியோபோரோசிஸ்]

நொறுங்கும் எலும்புகள் [ஆஸ்டியோபோரோசிஸ்] என்றால் என்னவென்று அறிய இங்கே காணவும்.

 1. ஆஸ்டியோபோரோசிஸ் என்பது கால்சியம் சத்தில்லாமல், எலும்புகள் தேய்ந்து, நொறுங்கி, எலும்பு முறிவு ஏற்படுத்துவது என்பதே.
 2. 35 வயதுக்கும் மேல் குறிப்பாக பெண்களுக்கு எலும்பு தேய ஆரம்பிக்கும். 50 வயதை தாண்டினால், இத்தைகைய நோய் தலைதூக்க ஆரம்பிக்கும். ஆனால் எல்லாருக்கும் வராது. மிக மோசமான நிலையில் தான் வரும்.
 3. ஒரு நாளைக்கு சராசரியாக ஒருவர் 500 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்தியா மட்டுமல்ல, ஆசியாவிலேயே பலரும் குறைவாகத்தான் எடுத்துக்கொள்கின்றனர்.
 4. ஆண்களை விட, பெண்களுக்கு தான் இது வரும். அதுவும், ஆண்களை விட நான்கு மடங்கு அதிகமாக வர வாய்ப்புண்டு.
 5. இந்தியாவில் மொத்தம் மூன்றுகோடி பெண்களுக்கு இந்த நோய், பல கட்டங்களில் உள்ளது. அதுவும் 50 வயதான பெண்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது.
 6. நாம் உடலில் மொத்த 99 சதவீதம் கால்சியம் எலும்புகளில் தான் இருக்கிறது. அது ஆண்டுகள் கழிந்த பின், குறைய ஆரம்பிக்கும், அதனால், எலும்புகள் தேயும். இப்படி தேய்ந்தால் ஏற்படுவது தான் இந்த நோய்.
 7. வாழ்க்கை முறை மாறிவிட்ட நிலையில், இப்போதுள்ள தலைமுறையினர் பலருக்கும் அவர்கள் 50 வயதை தாண்டினால், இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
 8. சிறிய வயதில் இருந்தே கால்சியம், நம் உணவுகளில் இருக்க வேண்டும். அப்போது தான் உடலுக்கு தேவையான கால்சியம் தொடர்ந்து கிடைத்துவரும். இல்லாவிட்டால், எலும்புகளுக்கு கால்சியம் குறைந்து தேய ஆரம்பித்துவிடும்.
 9. மாதவிடாய் நின்ற பின்னர், பெண்களுக்கு எலும்பு தேய்மான பாதிப்பு ஆரம்பிக்கும். சிலருக்கு பரம்பரை மூலமும் இது ஏற்பட வாய்ப்புண்டு.
 10. கர்ப்பிணிகளில், தாங்கள் சுமக்கும் கருவுக்கு, 25 முதல் 30 கிராம் கால்சியம் தேவைப்படுகிறது. அதனால், கால்சியம் தேவை, பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அதாவது, ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு, இந்தியாவில் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
 11. தொடர்ந்து பால் குடித்துவந்தாலே போதும், கால்சியம் சத்து உடலில் நீடித்து நிற்கும். கால்சியம் மாத்திரைகளும் பயன்தரும்.

ஆதாரம் : மீனாட்சி மருத்துவ மலர்

Filed under:
2.98591549296
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top