பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பின் இளம்பிள்ளைவாத நோய்

பின் இளம்பிள்ளைவாத நோய் பற்றிய தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கடுமையான இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப், பல ஆண்டுகளுக்குப் பின், புதிதாக நரம்புத்தசைக் கோளாறுகள் தோன்றுவதே பின் இளம்பிள்ளைவாத நோயின் இயல்பாகும். முதன்முதலில் இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நலமடைந்து பல ஆண்டுகள் கழித்துப், பின்இளம்பிள்ளை வாத நோய் தாக்குகிறது. பொதுவாக, கடுமையான பாதிப்புக்குப் பின்,  இது 15 ஆண்டுகள் கழித்து ஏற்பட்டாலும் இதன் மேல் எல்லை 30-40 ஆண்டுகள் வரை இருக்கும். ஏறத்தாழ 25%-28% நோயாளிகளில் இத் தாக்குதல் ஏற்படலாம். ஏற்கெனவே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட தசைகளில் புதிய பலவீனமாக இது தோன்றும். இந்தத் தசைப் பலவீனம் கூடியும் குறைந்தும் படிப்படியாக நிகழும்.

நோயறிகுறிகள்

புதிய பலவீனம், தசைச் சோர்வு, பொதுவான களைப்பு, வலி ஆகியவை முக்கிய மருத்துவத் தன்மைகள். குளிர் தாங்க முடியாமை, விழுங்குவதிலும் மூச்சு விடுவதிலும் சிரமம், தூக்கக் கோளாறுகள், செயலாற்றல் குறைவு ஆகியவையும் ஏற்படலாம்.

காரணங்கள்

இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கே பின் இளம்பிள்ளை வாதம் ஏற்படும். போலியோவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களும் அதிகமான உடல் இயக்கத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டவர்களுமே பின் இளம்பிள்ளைவாதத்தால் கடுமையாகப் பாதிக்கப்படக் கூடியவர்கள்.

இதற்கான காரணம் இன்னும் விவாதத்திற்கு உரிய ஒன்றே. தண்டு வடத்தில் போலியோ வைரசால் பாதிப்படைந்த நரம்பணுக்கள் மெதுவாக பலவீனம் அடைந்து வருவதே இதற்குக் காரணம் என்பது பொதுவான மருத்துவக் கொள்கை. பலவீனம் அடைந்த இந்த நரம்பணுக்கள் அதிக வேலைப்பளுவினால் மேலும் சிதைவடைந்து பின் இளம்பிள்ளைவாதமாக மாறுகிறது. முதல்முறை இளம்பிள்ளைவாதம் ஏற்பட்டு 10-40 ஆண்டுகள் கழித்துப் பின் இளம்பிள்ளைவாதம் தோன்றலாம். முதல் தாக்குதலுக்குப் பின் சராசரியாக 30 ஆண்டுகளில் இது தோன்றுகிறது.

பின் இளம்பிள்ளை வாதம் தொற்று நோயல்ல. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவாது. பின் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் போலியோ வைரஸ் மீண்டும் தாக்குவதில்லை; எனவே அவர்களால் பிறருக்கு நோய் பரவாது.

நோய்கண்டறிதல்

அறிகுறிகள் எதுவும் குறிப்பாகத் தோன்றுவதில்லை. ஆதலால் பின் இளம்பிள்ளை வாதத்தைக் கண்டறிவது கடினம். பெரும்பாலும் நீக்கல் முறையிலேயே கண்டறியப்படும். உங்கள் மருத்துவர் பிற நோய்கள் இல்லை என்று உறுதி செய்து கீழ்வருவனவற்றின் மூலம் நோயை இனங்காணுவார்:

  • முன்னர் ஏற்பட்ட இளம்பிள்ளைவாதப் பாதிப்பு
  • முதல் தாக்கத்திற்குப்பின் மீட்சி காலம், அதைத் தொடர்ந்து நீண்டகால நிலைத்தன்மை
  • மெதுவாக அதிகரித்து நிலைத்து நிற்கும் தசை பலவீனம்
  • களைப்புடன் கூடிய அல்லது களைப்பற்ற குறைந்த சகிப்புத்தன்மை
  • தசைச் சுருக்கும் அல்லது தசை மற்றும் மூட்டு வலி
  • குறைந்த பட்சம் ஓர் ஆண்டு நீடித்து நிலைக்கும் அறிகுறிகள்

நீங்களாகவே நோய்கண்டறிய முனையக்கூடாது. அறிகுறிக்கான பிற காரணங்களும் இருக்கலாம்.

நோய்மேலாண்மை

குறிப்பாக எந்த ஒரு சிகிச்சையும் பின் இளம்பிள்ளைவாத நோய்க்கு இல்லை. பல்துறை சார்ந்த முறைகள் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் பலன் அளிக்கலாம். மருந்தியல் மற்றும் புனரமைப்பு சிகிச்சைகள் இதுவரை நிறுவப்படவில்லை. IVIG, லமோட்ரோஜின், தசை வலிமைப்படுத்தும் பயிற்சிகள், நிலைகாந்தப்புலம் ஆகியவை பலனளிப்பதாகத் தோன்றுகிறது; ஆனால் மேலும் ஆய்வு தேவைப்படுகிறது. பயிற்சி, தகுந்த மருந்துகள் அல்லது எலும்பு ஆதரவு சிகிச்சை போன்ற பல்துறை அணுகுமுறை தேவை.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

Filed under:
2.86046511628
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top