உடலிலுள்ள சிறிய, பெரிய மூட்டுக்களை பாதித்து மீண்டும் மீண்டும் வீக்கத்தையும் நோவையும் விறைப்பையும் ஏற்படுத்தும் ஒரு நீண்டகால நோயாகும். மூட்டுக்களின் வீக்கம், நோவு, நிற மாற்றம் வேலை நிகழாமை என்பன இந்த நோயினால் எற்படும்.
நடுத்தர வயதுள்ள பெண்களுக்கே பொதுவாக இந்த நோய் ஏற்படுகிறது. பிள்ளைகளை மிகவும் அரிதாகவே இந்த நோய் தாக்கும். பரம்பரையாக ஒரு குடும்பத்திலிருந்து இன்னொரு குடும்பத்திற்கு மிக அரிதாகவே கடத்தப்படலாம். அதாவது உங்கள் பிள்ளைகளுக்கு இந்நோய் வர வாய்ப்புக்குறைவு. உங்கள் வாழ்க்கைத் துணைக்கோ அல்லது உங்களுடன் சம்பந்தப்பட்ட வேறு எவருக்கும் இது தொற்ற மாட்டாது.
சரியான காரணம் தெரியாது. சரீரத்தில் ஏதோ ஒரு எதிர்ப்பு சக்தியின் குறைபாடாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
நாடா போன்ற அனேக இழையங்களே மூட்டுக்களை நிலையாக வைத்திருக்கின்றன. முடக்கு வாத நோயினை இதற்கு கீழே கூறப்படும் பராமரிப்பு முறையினால் தடுத்துக் கொள்ளலாம்.
வெவ்வேறு விதமான அப்பியாச சிகிச்சை முறைகள் உண்டு.
வெப்ப சிகிச்சை மூலமாக அதாவது மின்கதிர் உபகரணங்கள், உருக்கப்பட்ட மெழுகுகள் கைகளை அமிழ்த்துவதனாலும் மின்கதிர்களை வீசும் விளக்குகளைப் பாவிப்பதனாலும், மூட்டுக்களின் நோவு விறைப்பு என்பனவற்றைக் குறைக்கலாம். மின்கதிரும் அப்பியாசமும் மூட்டுக்களின் ஆட்ட அசைவுகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. நீங்கள் இப்படியான அப்பியாசச் சிகிச்சை முறை வசதிகள் உள்ள வைத்தியசாலைக்கு அண்மையில் இல்லாவிட்டால் வீட்டிலே குறிப்பிட்டவற்றைச் செய்து பார்க்கலாம்.
மூட்டு வாதம் சீவியகாலம் வரை நீடிக்குமா?
இது நீண்ட கால நோய் தான். என்றாலும் மருந்தினாலும் அப்பியாசத்தினாலும் இடையிடையே ஒரு மாதமோ அல்லது வருடமோ குறைந்திருக்கலாம். சில வேளைகளில் குறைந்திருந்த நோய் சடுதியாக நோய்க்ககுறிகளுடன் தோன்றவும் கூடும். அப்படியானால் தீவிரமான அப்பியாசம் செய்யவேண்டி ஏற்படும்.
வாதமும் முடக்கு வாதமும் ஒன்றா?
இல்லை வாதச்சுரமானது பிள்ளைகளிலும் இளம் வாலிபர்களிலும் காணப்படும் வேறொரு நோயாகும். அவர்களுடைய இருதயமும் மூட்டும் பாதிக்கப்படுகின்றன.
மாரடைப்பு வரும் வாய்ப்பு உள்ளதா?
நோய் எதிர்ப்பு செல்கள் ஏற்படுத்தும் பிரச்னையால், ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் ரத்த குழாய்களில் கொழுப்பு படிந்து, மாரடைப்பு வர காரணமாகிறது.
வலி நிவாரணிகளால் பக்க விளைவுகள் ஏற்படுமா?
மூன்று மாதத்திற்கு ஒருமுறை, ரத்த பரிசோதனை, கல்லீரல், சிறுநீரகங்களின் செயல்பாடு குறித்து அறிய பரிசோதனைகள் அவசியம். தேவையான மருத்துவ கண்காணிப்பு இருந்தால், பக்க விளைவுகள் குறித்து பயப்படத் தேவை இல்லை.
இந்நோயை குணப்படுத்த முடியுமா?
கட்டுப்படுத்தலாம்; குணப்படுத்த முடியாது. வாழ் நாள் முழுதும், மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை செய்தால், குணமடைய வாய்ப்புண்டு.
ஆதாரம் : ஆரோக்கிய தகவல் தளம்