இது கீலொஸ்ட்ரிடியம் ரெரனி எனப்படும் பாக்டிரியாவின் புறச்சுவர் புரதநஞ்சால் தசைகள் அதிகளவில் சுருங்க ஆரம்பிப்பதால் ஏற்படுகிறது. இந்நோய் உருவாகினால் நோயாளிகள் இறக்க நேரிடும்.
15-25% நோயாளிகளின் சமீபகாலத்தில் ஏற்பட்ட காயத்துக்கான அறிகுறி காணப்படாது. அறிகுறிகள் 1 நாள் மூதல் பல மாதகாலங்கள் வரை ஏற்படலாம். இங்கு முதலில் காய்ச்சல், இளைப்பு, தலைவலி ஆகியன பிரதான குணங்குறீகள் ஏற்படும்.தாடைகள் இறுக்கமடைந்து வாய்களை திறக்கமுடியாமை, முகமானது இறுக்கமடைதல், உடலானது பின்புறமாக வளைதல், ஆகியன ஏற்படும்.
தசையின் தாறுமான செயற்பாடானது முதலில் அசைவு, ஊசிமருந்தேற்றல், ஒலிமுதலியவற்றால் ஏற்படலாம் எனினும் பின்பு தூண்டல் இல்லாமலே இடம்பெறும். விழுங்குவதில் சிரமம், சுவாசித்தல் தடைப்படல், பரிவுபரபரிவு நரம்பின் செயலிழப்பு, நாடித்துடிப்பு, ஆகியன ஏற்படலாம். குருதியழுத்தம் பெரியளவில் மாற்ற்மடையும்.
நோயானது நோயாளியால் தெரிவிக்கப்படும் காயம் தொடர்பான சான்று, குணங்குறிகள் ஆகியவற்றில் இருந்து கண்டறியப்படும். இந்த நோய்க் குணங்குறீகளை போன்றவை பின்வரும் நிலைகளில் ஏற்படலாம்.
1)பற்களில் சிதழ்க்கட்டி 2)விசர்நாய்க்கட்டி 3)பீனோதையசீன் நஞ்சாதல்
அவசர தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கவும். மூச்சுப்பாதை, சுவாசவீதம்,சுற்றோட்டம் ஆகியவை கண்காணிக்கப்படல் வேண்டும். மின் இதய வரைபு, குருதியழுதம், ஒட்சிசன் அளவு ஆகியன கண்காணிக்கபடும்
1) மனித டெடஸ் பிற்பொரு ளெதிரி-5000-10000அலகுகள் நாளம் மூலம் ஏற்படுத்தபட்டு நஞ்சுக்கனது ஒடுநிலையக்கப்படும்
2) நோயாளி எழுப்பக்கூடிய, சுற்று தூங்கிய நிலையில் இருத்தல் வேண்டும்டையசிபாம் 5-20மி.கி 8மணி நேரங்களுக்கு ஒரு முறை வழங்கலாம்.தசைச் செயற்பாட்டை தடுக்க பீனோபார்பிடல்1மி.கி/கி.கி/மணிநேரம் தசைமூலம்/நாளம் மூலம் ஏற்றப்படும்.
இதனுடன் குளோப்ரமசின் 0.5மி.கி/கி.கி/6மணி நேரங்களுக்கு ஒருமுறை தசைமூலம் ஏற்றப்படும் தசை சுருக்கத்தை கட்டுப்படுத்த முடியாவிடில் நோயாளியை சுய நினைவு அகற்றி உபகரணத்தால் மூச்சு வழங்கப்படும்.
மூன்று ஊசிமருந்து வழங்கல்கள் அடங்கிய தடுப்பு மருந்து ஏற்றலானது 1 வயதினுள் செய்யப்பட வேண்டும். பாடசாலை ஆரம்பிக்கப்படும் காலத்திலும் பின்பும் பருவ வயதிலும் ஒவ்வொன்றாக 2 மேலதி ஊசிகள் வழங்கப்படும். 5 ஊசி வழங்கப்பட்ட பின்னர் முக்கியமான காயங்களேற்படும் வேளையில் மட்டும் ஊசியேற்றினால் போதுமானது.
ஆதாரம் : ஆரோக்கியத்தளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/20/2020
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
11 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை இங்கு கொடுக்கப்பட...
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...