பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / மூளை / அல்ஸிமர்ஸ் மற்றும் ஸ்ட்ரோக்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அல்ஸிமர்ஸ் மற்றும் ஸ்ட்ரோக்

அல்ஸிமர்ஸ் மற்றும் ஸ்ட்ரோக் பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அல்ஸிமர்ஸ் நோய்

இந்நோய் மூளையில் ஏற்படும் குறைபாட்டினால் ஏற்படுகிறது. இந்நோயினை ஆலாய்ஸ் அல்ஸ்மீர் என்பவர் முதன்முதலில் விளக்கினார். எனவே அவரின் பெயர் இந்நோய்க்கு சூட்டப்பட்டது.

அறிகுறிகள்

 • இது வேகமாய் வளரக்கூடிய மற்றும் மரணத்தை தோற்றுவிக்கும் ஒரு மூளைநோய்.
 • அல்ஸிமர்ஸ், மூளை செல்களை அழிக்கிறது. இதனால் ஒருவரின் வேலை மற்றும் சமூக வாழ்வினை மோசமாக பாதிக்கினற வகையில், நினைவாற்றல், சிந்தித்தல் மற்றும் செயல்பாடுகள் போன்றவற்றில் கோளாருகள் ஏற்படுகின்றன
 • அல்ஸிமர்ஸ் நாளடைவில் மோசமடைந்து மரணத்தை ஏற்படித்தும்
 • அனுதின வாழ்வில் இடையூறு விளைவிக்கும் நினைவாற்றல் இழப்பு (டிமென்ஷியா) மற்றும் அறிவாற்றல் திறன் குறைபாடுகள்
அல்ஸிமர்ஸ் நோயின் 10 எச்சரிக்கையான அறிகுறிகள்
 • ஞாபகம் இழப்பு : சமீபத்தில் கற்றவைகளை மறந்துபோதல் என்பது அறிவாற்றல் இழப்பின் (டிமன்ஷியா) பொதுவான ஆரம்ப அறிகுறியாகும். ஒரு நபர் அடிக்கடி மறந்து போக ஆரம்பித்தல் அல்லது கற்றவற்றை நினைவுக்கு கொண்டுவர முடியாத நிலையாகும்
 • தெரிந்தவற்றை சரிவர செய்ய முடியாதநிலை : அறிவாற்றல் இழப்பு உள்ள நபர்கள் தினந்தோறும் செய்யும் செயல்களை கூட திட்டமிட்டு செய்தலை கடினமாக உணர்கின்றனர். சமைத்தல், தொலைபேசியை சரியாக வைத்தல் அல்லது விளையாடுதல் போன்றவற்றில் கைகொள்ள வேண்டிய படிகளை மறக்கின்றனர்.
 • மொழிப் பிரச்சினை : அல்ஸிமர்ஸ் நோயுடன் உள்ள நபர்கள், சாதாரண சிறிய வார்த்தைகளை மறந்து விடுவர். சம்மபந்தம் இல்லாத பிற வார்த்தைகளை உபயோகிப்பர். அவர்களின் பேச்சு மற்றும் எழுதது என்னவென்று அறிவது கடினம். உதாரணம். அவர்களால் பல்துலக்கும் பிரஷை கண்டெடுக்க இயலாத போது, "பிரஷ்" என்று கேட்பதற்கு பதிலாக, "என் வாய்க்கான பொருள் எங்கே" என்று கேட்பர்.
 • காலம் மற்றும் இடம் போன்றவற்றை பற்றின திசையமைவு அறிவு இல்லாமை : அல்ஸிமர்ஸ் நோயுடன் உள்ள நபர்கள், தங்கள் வசிக்கும் இடத்தை கூட அறிய முடியாதவர்களாய் இருப்பார்கள். எங்கே இருக்கின்றார்கள், எப்படி அவ்விடத்திற்கு வந்தார்கள் என்பதை மறந்து விடுவர், மற்றும் அங்கிருந்து எப்படி வீட்டிற்கு செல்வது என்பது கூட அவர்களுக்கு தெரியாது.
 • குறைந்த முடிவு எடுக்கும் திறன் : அல்ஸிமர்ஸ் நோயுடன் உள்ள நபர்களின் ஆடை அணியும் தன்மை வித்தியாசப்படலாம். உஷ்ணம் நிறைந்த நாட்களில் ஒன்றின் மேல் ஒன்றாய் பல உடைகளை அணிந்து கொள்வர். அல்லது, குளிர் நாட்களில் குறைந்த உடைகளை அணிந்து கொள்வர். அவர்களின் நிதானிக்கும் திறன் குறைவாகவே இருக்கும். உ.ம். தெரியாத நபருக்கு அதிக பணத்தை கொடுப்பது போன்றவை.
 • தெளிவாக யோசிப்பதில் பிரச்சினை : அல்ஸிமர்ஸ் நோய் கண்ட சிலரில், சிக்கலான மனக்கடைமைய செய்வது கடினமாக இருக்கலாம். உ.ம். எண்கள் யாவை மற்றும் அவற்றை எப்படிப் பயன்படுத்துவது போன்றவற்றை மறத்தல்
 • பொருட்களை மாற்றிவைத்தல் : அல்ஸிமர்ஸ் நோயுள்ள ஒரு நபர் பொருட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்காமல் வேறு இடத்தில் வைப்பர். உ.ம். இரும்பை எடுத்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தல்.
 • மனநிலை மற்றும் நடக்கையில் மாற்றங்கள் : அல்ஸிமர்ஸ் நோய் கண்ட சிலரில் மனநிலை விரைவாக மாறுபடும். உ.ம். அமைதியாக இருப்பர் பின் அழுவர், எரிச்சலடைவர் ஆனால் எந்தவித காரணங்களும் இருக்காது.
 • ஆளுமையில் மாற்றங்கள் : அல்ஸிமர்ஸ் நோய் கண்ட ஒரு நபரின் ஆளுமை நாடகத்தைப்போல மாறும். அவர்கள் மனக்குழப்பமடையலாம், சந்தேகமடையலாம், பயப்படலாம் அல்லது ஒரு குடும்ப நபரை சார்ந்திருக்கலாம்.
 • தன்முயற்சித்திறன் இழப்பு : அல்ஸிமர்ஸ் நோய் கண்ட நபர் எந்தவித செயலும் செய்யாமல் காணப்படலாம். உ.ம். தொலைக்காட்சி பெட்டியின் முன் பல மணிநேரங்கள் அமர்ந்திருத்தல், இயல்பைவிட அதிக நேரம் தூங்குதல் அல்லது இயல்பான வேலைகளை செய்யாமல் இருத்தல்.

உங்களிலோ அல்லது நீங்கள் நேசிக்கும் எந்த ஒரு நபரிலிலாவது அல்ஸிமர்ஸ் நோய்க்கான எச்சரிக்கையான அறிகுறிகள் கண்டறியப்பட்டால், மருத்துவரை உடன் அணுகவும். அல்ஸிமர்ஸ் அல்லது டிமென்ஷியா எனப்படும் குறைகள் இருப்பின், அவசியம் சரியான சிகிச்சை, பராமரிப்பு பெற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலம் : சைலெஷ் மிஷ்ரா, சில்வர் இன்னிங்ஸ் பவுண்டேஷன்.

அல்ஸிமர்ஸ்-ம் மூளையும்
நாம் வயதுசென்றவர்களாகும் போது நமது சிந்திக்கும் திறன் மற்றும் நினைவாற்றல் குறைகிறது. ஆனால் மோசமான நினைவுக் குறைவு, குழப்பமான நிலை மற்றும் மூளையின் வேலையில் ஏற்படும் மற்ற பெரிய மாற்றங்கள் மூப்படைவதினால் ஏற்படுவதில்லை. இவை மூளை செல்கள் செயலிழப்பதின் அடையாளங்களாகும்.
மூளையில் நியுரான் எனப்படும் நரம்பு செல்கள் 100 பில்லியன்களுக்கு மேல் உள்ளன. இவை இணைந்து ஒரு பட்டறைப் போல் பல செயல்பாடுகளை செய்கின்றன. எல்லா செயல்களையும் சரியாய் நடத்திச் செல்ல ஒருங்கிணைப்பு மற்றும் அதிகளவு உணவு மற்றும் பிராணவாயு தேவைப்படுகிறது.
அல்ஸிமர்ஸ் நோய் ஏற்படும் போது, மூளையில் ஒரு பகுதி செல்கள் செயலிழக்கிறது இதினால் மற்ற பகுதி மூளை செல்களின் செயல்களும் பாதிப்படைகிறது. இவ்வகை பாதிப்பு பரவும்போது செல்கள் செயல்படும் திறனையும் இழக்கிறது. முடிவாக செல்கள் மரிக்கின்றன.

ப்ளாக்ஸ் மற்றும் டான்ஜல்ஸ் எனப்படும் இரண்டு இயல்புக்கு மாறான அமைப்புகளே மூளைசெல்களின் சிதைவு மற்றும் இறப்பிற்கு முதல் முக்கிய காரணமென கருதப்படுகிறது. ப்ளாக்ஸ் படிகங்கள் நரம்பு செல்களுக்கு இடையில் உருவாகின்றன. டான்ஜல்ஸ் இறந்து கொண்டிருக்கிற நரம்பு செல்களுக்குள் உண்டாகின்றன. பெரும்பாலான நபர்களில் முதிரவயதில், இதுபோன்ற ப்ளாக் மற்றும் டான்ஜல்ஸ் தோன்றினாலும், அல்ஸிமர்ஸ் நோய் உள்ளவர்களில் இவை மிக அதிக அளவில் ஏற்படுகின்றன. ப்ளாக்ஸ் மற்றும் டான்ஜல்ஸ் முதலில் கற்றல் மற்றும் நினைவாற்றலுக்குரிய மூளை பகுதிகளில் தோன்றுகின்றன. பிறகு மற்ற பகுதிகளுக்கு பரவுகின்றன.

தொடக்கநிலை மற்றும் இளம்பருவ நோய் காணுதல்
தொடக்கநிலை என்பது அல்ஸிமர்ஸ் நோயின் ஆரம்பநிலையாகும். இதில் நினைவாற்றல், சிந்தித்தல், சிந்தனைகளை ஒருமுகப்படுத்தல் போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படும். இளம்பருவ நோய் காணுதல் என்பது, அல்ஸிமர்ஸ் நோய், 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படுவதாகும்.

சிகிச்சை
அல்ஸிமர்ஸ் நோய்க்கு தற்போதைக்கு எந்த சிகிச்சையும் இல்லை. குணப்படுத்த முடியாது. ஆனால் இந்நோய் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன், அந்நபருக்கு சரியான ஒத்துழைப்பு மற்றும் அரவணைப்பு கொடுப்பதின் மூலம் அந்நபரின் வாழ்க்கைகை ஓரளவுக்கு செம்மையாக இருக்கச் செய்யலாம்

அல்ஸிமர்ஸ் நோய் பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)
http://www.youtube.com/watch?v=ezBtsBWWh6s
http://www.youtube.com/watch?v=NjgBnx1jVIU

மூளை செயலிழப்பு (ஸ்ட்ரோக்)

மனித மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களில் (தமனி) ஏற்படுகின்ற அடைப்பினால்தான் ஸ்ட்ரோக் ஏற்படுகின்றன. மூளையின் பகுதிகள் பாதிக்கப்படுவதுடன் மூளையின் பாதிக்கப்பட்ட பகுதியின் கட்டுப்பாட்டில் இயங்கும் செயல்களும்/பாகங்களும் கட்டுப்பாட்டை இழக்கின்றன. உதாரணமாக, ஒரு கை/கால் செயல்படாமை அல்லது பேச இயலாமை. இந்த பாதிப்பு தற்காலிகமானதாகவோ, நிரந்தரமாகவோ, பகுதி அளவு பாதிப்பாகவோ அல்லது முழுமையான அளவிலோ இருக்கலாம். அறிகுறிகள் ஆரம்பித்த பிறகு உடனடி மருத்துவ சிகிச்சையைப் பெற்றால், மூளைக்கு முறையாக ரத்தம் செலுத்த வழிவகை செய்யப்பட்டு, பாதிப்புக்குள்ளாவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியுமென்று மருத்துவர்கள் கண்டறிந்து உள்ளார்கள்.

எனக்கு ஸ்ட்ரோக் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?

கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருக்குமேயானால், உடனடி அவசர கால சிகிச்சைப் பெற ஏற்பாடு செய்யவும். விரைவான உதவிகளை நீங்கள் பெற்றால் அது இனி வரும் பாதிப்புகளில் இருந்தும் நிரந்தர பாதிப்பிலிருந்தும் உங்களைக் காப்பாற்ற மருத்துவருக்குப் பேருதவி புரியும்.

 • திடீரென்று முகத்தின் ஒரு பகுதி , உடலின் ஒரு புறத்தில் உள்ள கை/கால்களில் மட்டும் ஏற்படும் குறைபாடு (வலுவின்மை) அல்லது உணர்ச்சியற்ற நிலை.
 • திடீரென்று ஏற்படும் பார்வை மங்கல் அல்லது குறைபாடு, குறிப்பாக ஒரு கண்ணில் மட்டும் ஏற்படுதல்.
 • பேச முடியாமை, பேசுவதில் தடுமாற்றம் அல்லது பிறர் சொல்லுவதைப் புரிந்து கொள்வதில் சிரமம்.
 • காரணமின்றி பயங்கரமாக வரும் திடீர் தலைவலி
 • காரணமின்றி கிறு கிறுவென வருதல், தடுமாற்றமான நடை அல்லது கீழே விழுதல், குறிப்பாக மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து வருதல்.

ஸ்ட்ரோக் வருவதைச் சுட்டிக்காட்டும் மற்றொரு அபாய அறிகுறிதான் சிறு அளவிலான தாற்காலிகத் தாக்குதல் [ட்ரான்ஸியென்ட் இஸ்செமிக் அட்டாக்- டி ஐ ஏ]. டி ஐ ஏ என்பது 'சிறு அளவிலான தாக்குதல்'ஆகும். மாரடைப்பு வருவதற்கான ஒத்த அறிகுறிகளுடன் வந்தாலும், சில நிமிடங்களுக்கு மட்டுமே இது நீடிக்கும். ஆனாலும் இதனைக் கண்டு கொள்ளாமல் இருக்கக்கூடாது. டி ஐ ஏ தாக்குதல் வந்துவிட்டால் அது பிற்காலத்தில் மாரடைப்பு ஏற்பட கட்டாயம் வழி வகுக்கும். உங்களுக்கு டி ஐ ஏ இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் ,உடனடியாக மருத்துவரை அணுகவும்.

ஸ்ட்ரோக் வருவதற்கான காரணிகள்:
 • அத்திரோஸ்க்ளிரோசிஸ் (ரத்த நாளங்கள் சுருங்குதல்)
 • கட்டுப்படுத்தாத நீரிழிவு நோய்
 • உயர் ரத்த அழுத்தம்
 • அதிக அளவிலான கொலஸ்ட்ரால்
 • புகை பிடித்தல்
 • ஏற்கனவே ஏற்பட்ட சிறு அளவிலான தாற்காலிகத் தாக்குதல்[Transient Ischemic Attack]
 • இதய நோய்கள்
 • கரோடிட் ஆர்ட்டெரி நோய் (உங்கள் மூளைக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளம்)
ஸ்ட்ரோக் வராமல் தடுப்பது எப்படி?

உங்கள் குடும்ப மருத்துவரிடம் இதற்கான காரணிகளையும் (காரணிகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன) பாதிப்பைக் குறைப்பதற்கான வழிகளையும் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். ஸ்ட்ரோக் வராமல் தடுக்க சில ஆலோசனைகள் இங்கே தரப்பட்டுள்ளன.

 • உயர் ரத்த அழுத்தம் இருந்தால்,உங்கள் மருத்துவரின் அறிவுரைப்படி அதைக் கட்டுப்படுத்துங்கள்
 • ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதற்காக அதிக கொழுப்பும் கொலஸ்ட்ராலும் உடைய உணவு வகைகளைத் தவிர்த்தல் & உப்பு (சோடியம்) குறைவான உணவுகளை உண்ணுதல்.
 • நீரிழிவு நோய் இருந்தால்,சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்தல்
 • மது அருந்தும் பழக்கத்தை முடிந்த அளவு குறைத்து அதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
 • புகை பிடிக்காதீர். புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லையென்றால், புகைப்பிடிக்க ஆரம்பிக்காதீர்.

ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்காமல் இருக்க மருத்துவ பரிசோதனைகளைத் தொடர்ந்து முறையாக அவ்வப்போது செய்து கொள்ளுதல் மிக அவசியம். ஆஸ்ப்ரின் மருந்தைக் குறைந்த அளவு டோஸில் உட்கொள்ளுதல் மாரடைப்பினால் வரும் பாதிப்பினைக் குறைக்குமா என்பதை மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தைத் தடுக்க காரணமான கட்டிகள் (அடைப்புகள்) உருவாதலைத் தடுக்க ஆஸ்ப்ரின் மருந்து உதவி செய்யும்.

மூளை செயலிழப்பு பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)
http://www.youtube.com/watch?v=fKrXCly1kK0
http://www.youtube.com/watch?v=Jpoybk9HGRY

Filed under:
3.10526315789
vadie velan Aug 01, 2016 05:52 PM

இது ஒரு அற்புதமான வெப்சைட். நான் மற்றும் என் நண்பரகளின் மணடர்ந்த
பாராட்டுக்கள் .
நன்றி
ர்.ஸ். வடி வேலன்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top