பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மூளைக்காய்ச்சல்

மூளைக்காய்ச்சலைப் பற்றிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

மூளைக்காய்ச்சல்

வைரஸ் கிருமிகளால் மூளையும், நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டு செயல் இழந்து போய்விடுகின்றன. இதுதான் மூளைக் காய்ச்சல் எனப்படுகிறது. இதனால், உயிருக்கே ஆபத்து நேரலாம்.நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சரியான சிகிச்சை அளித்தால் பாதிப்பில் இருந்து மீளலாம். இந்த மூளைக்காய்ச்சல் நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் ஏற்படுகிறது. மூளைக்காய்ச்சல் நோயால் கை கால்கள் செயல் இழந்துபோதல், வலிப்பு, கண் பாதிப்பு, காது கேளாமே போன்ற நிரந்தரப் பாதிப்புகள் ஏற்படலாம்.மூளைக் காய்ச்சல் நோய் ஒருவருக்கு உடனடியாகவும் வரலாம். மெதுவாகவும் வரலாம்.

மூளையைப் பாதிக்கும் வைரஸ்கள்

தாவாட்டி அம்மை, மணல்வாரி அம்மை, ரூபெல்லா, சைட்டோ மெகாலோ வைரஸ், எப்ஸ்டீன் வைரஸ், பாக்ஸ் வைரஸ், ஈக்குன் வைரஸ், ரேபிஸ் வைரஸ், டெங்கு வைரஸ் போன்றவை மூளையைப் பாதிக்கும் வைரஸ்கள்.நோயின் தீவிரத்தை தீர்மானிப்பவை.நோய்க் கிருமிகளின் வீரியம், நோயாளியின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புத் திறன், மூளையில் உள்ள நீரின் அழுத்தம் ஆகியவைதான் மூளைக்காய்ச்சல் நோயின் தீவிரத்தை தீர்மானிக்கின்றன.

வகைகள்

மூளைக்காய்ச்சல் மூன்று வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 • அறிகுறிகள் இல்லாமலும் நோயின் தாக்கம் குறைவாகவும் இருத்தல்.
 • மூளையின் பாதுகாப்பான் ஜவ்வைத் தாக்குவது.
 • மூளையில் பாதுகாப்பான ஜவ்வையும், மூளையையும் மிகத் தீவிரமாகத் தாக்கி நரம்பு மண்டலத்தை செயல் இழக்க வைப்பது.

அறிகுறிகள்:

 • அதிகமான காய்ச்சல்
 • தலைவலி
 • வாந்தி
 • மூளை நிலைகுலைதல்
 • நினைவிழத்தல்
 • வலிப்பு
 • இதயம் மற்றும் சுவாச உறுப்புகள் செயலிழத்தல்
 • அதிக ஆழ்ந்த மூச்சு
 • கண் தசை நார்கள் செயல் இழப்பு
 • கை, கால்கள் முடங்கிப் போதல்


சிகிச்சை:

மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தாலோ, குழந்தை திடீரென்று  நினைவிழந்தாலோ, வலிப்பு வந்தாலோ உடனே குழந்தைகள் நல மருத்துவரிடம் குழந்தையைக் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்பாட்டால், மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தர வேண்டும்.

முக முக்கியமான மூன்று விஷயங்களுக்கான குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவேண்டியத மிக மிக அவசியம்.

 • குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவது.
 • குழந்தையின் மூளை பாதிக்கப்படுவதைத் தடுப்பது.
 • நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிப்பது.

 

ஆதாரம்: தினகரன் நாளிதழ்

3.06329113924
உதயா Nov 28, 2015 12:22 PM

மிக நன்றி

Poendi May 26, 2015 08:45 AM

If your ariletcs are always this helpful, "I'll be back."

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top