பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / வயிறு / குடற்புண்ணை குணப்படுத்தும் கீரை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குடற்புண்ணை குணப்படுத்தும் கீரை

குடற்புண்ணை குணப்படுத்தும் கீரை

சுக்கான் கீரை

சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத காரணத்தால் இதை மக்கள் பயன்படுத்துவது குறைவு. இதனை சுக்குக் கீரை, சொக்கான் கீரை என அழைக்கின்றனர். இது பலவித நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

சத்துக்கள்

சுண்ணாம்புச் சத்து - 60 மி.கி.
இரும்புச் சத்து - 9 மி.கி.
மணிச்சத்து - 15 மி.கி.
வைட்டமின் ஏ - 6000 த
வைட்டமின் சி - 13 மி.கி.
தயாமின் - 0.03 மி.கி.
ரைபோஃபிளேவின் - 0.066

குடற்புண் குணமாக

உணவுமுறை மாறுபாடு, வாயு சீற்றமடைதல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் குடலில் புண்கள் உருவாகின்றன. இவர்கள் சுக்கான் கீரையை புளி சேர்க்காமல் பாசிப் பருப்புடன் கலந்து வேகவைத்து மதிய உணவில் சேர்த்துக்கொண்டால் குடல்புண் குணமாகும். இதனை சட்னி செய்தும் சாப்பிடலாம்.

மலச்சிக்கல் நீங்க

மலச்சிக்கலின்றி இருந்தால் நோய்கள் எளிதில் அணுகாது. இந்த மலச்சிக்கலைத் தீர்க்க சுக்கான் கீரை சிறந்த மருந்து. சுக்கான் கீரையை ஏதாவது ஒரு வகையில் உணவில் தினமும்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

பசி

சிலருக்கு சாப்பிட்ட உணவு எளிதில் சீரணமாகாது. மேலும் பசி என்பதே இவர்களுக்கு இருக்காது. இவர்கள் சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும்.

ஈரல் பலப்பட

மது, புகை, போதை வஸ்துக்கள் பயன் படுத்துபவர்களுக்கு ஈரல் வெகு விரைவில் பாதிக்கப்படும். இதனால் இவர்களின் உடலில் பித்தம் அதிகரித்து பல நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. இவர்கள் சுக்கான் கீரையை சூப் செய்து அருந்தி வந்தால் ஈரல் நன்கு பலப்படும்.

நெஞ்செரிச்லைத் தடுக்க

சிலருக்கு எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும். இவர்கள் சுக்கான் கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும்.

இதய பலவீனம் சரியாக

மனித இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரியும். இதில் மாறுபாடு ஏற்படுமானால் உடலில் ஏதோ நோய் ஏற்படுகிறது என்று பொருள். அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது. இவர்கள் சுக்கான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலப்படும், சீராக இயங்கும் . தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வருதல் நலம்.

பல்வலி

சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்கள் பலப்படுவதுடன் பல் ஈறுகள் உறுதியாகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்த: இரத்தம் தூய்மையாக இருந்தால் தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். சுக்கான் கீரை இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி பின் சட்னியாக அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தப்படும். இத்தகைய சிறப்புகள் கொண்ட கீரையை நாமும் சாப்பிட்டு நலமுடன் வாழ்வோம்.

ஆதாரம் : தினகரன் நாளிதழ்

3.00869565217
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top