பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / மன நலம் / உளவியலின் அடிப்படைக் கொள்கைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உளவியலின் அடிப்படைக் கொள்கைகள்

உளவியலின் அடிப்படைக் கொள்கைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உளவியல் என்பது அறிவியல் படிப்பின் ஒரு பகுதியாகும். இது மனம் மற்றும் ஆன்மாவைப்பற்றி அறியும் அறிவாகும். செவிலியத்துறையில் நோயாளிகளை கவனித்தலுக்கு இத்துறை இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். செவிலி தனது நடத்தை முறைகளையும், நோயாளியுடன் தொடர்பு கொள்ளும்போது நடந்து கொள்ளும் முறையைப் பற்றிய அடிப்படைத் தேவைகளை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.

செவிலியத்துறையில் உளவியலின் முக்கியத்துவம்

மனநலம் பற்றி படித்தல் செவிலியருக்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும்.

 • தன்னைத்தானே அறிந்து கொள்ளுவதற்கு உதவுகிறது
 • மற்றவரை புரிந்துகொள்ள உதவுகிறது
 • மற்றவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அதை தீர்த்து வைக்க உதவுகிறது
 • இது உடல், மனம், ஆன்மா இவைகளின் நெருங்கிய தொடர்புகளை புரிந்து கொள்ள உதவுகிறது.

மனநலத்தை பாதிக்கும் காரணிகள்

அ. தனிமனித காரணிகள் (Personal factors)

 1. வயது வளர்ச்சியும் அபிவிருத்தியும், பரம்பரை மற்றும் உயிரியல் உடல்நலம் மற்றும் பழக்கவழக்கம், வாக்கை காப்பாற்றும் செயல்திறன், கட்டுப்பாடு மற்றும் வெற்றி பெறும் தன்மை
 2. எதிர்த்து நிற்றல் (கடுமையான சூழ்நிலையிலும் எதிர்த்து நிற்கும் உடல்நிலை)
 3. வளமிக்க வாய்ப்புகளை கொண்டிருத்தல்
 4. ஆன்மீக ஈடுபாடு

ஆ. மற்றவறை சார்ந்த காரணிகள்

 1. உடமைகளை பற்றியதான அறிவு
 2. சமுதாயத்துடன் தொடர்பும் மற்றும் ஆதரவும்
 3. குடும்பத்தினரது ஆதரவு

இ. நாகரீகம் சார்ந்த காரணி

 1. நாகரீகம்
 2. இனம்
 3. பால்
 4. பால் பற்றி அறிந்திருத்தல்
 5. சமுதாயத்தில் அவரது நிலை
 6. பொருளாதார நிலை

கற்றல்

மனித சமுதாயத்தின் முக்கியமான பண்பு கற்றல், கற்றல் என்பது நமது நடத்தையை மையாக கொண்டது. நம்முடைய மனப்பான்மை மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் ஆகியவை நாம் கற்றுக் கொண்ட செயல்களாகும். கற்றல் என்பது நமது மனநிலையின் செயல்பாடுகளாகும். இவை அறிவு, திறமை, மனப்பான்மை, செயலாக்கம் மற்றும் கருத்துகள் ஆகியவைகளை கொண்டதாகவும் நமது நடத்தைகளை மாற்றி அமைக்கவும் பயன்படுகிறது.

கற்றலை பாதிக்கும் காரணிகள்

 1. கற்பவரின் இயல்புநிலை
 2. கற்க பயன்படும் கருவிகளின் நிலை
 3. கற்கும் சூழ்நிலை

கற்றலின் கோட்பாடுகள்

 • சோதனையும், தவறும்
 • கட்டுப்பாட்டிற்கு புறத்தூண்டுதல் கோட்பாடு
 • ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுப்பாடு (Classical conditioning)
 • ஏற்றுக்கொள்ள செய்யப்பட்ட கட்டுப்பாடு (Operant conditioning)
 • அறிவு சார்ந்த கற்றல்
 • மனத்தால் அறிந்து கற்றல்
 • அறிகுறிகளை பார்த்து கற்றல்

சோதனையும் தவறும்

உளவியல் தந்தை என கருதப்படுகிற அமெரிக்காவின் எட்வர்ட் லீ தான்டிக் (Edward Lee Thorndike) என்பவர் விலங்குகளிடையே நடத்திய சோதனைகளில், எல்லா கற்றலும் சோதனையும், தவறும் முறையில் நடைபெறுகிறதென்று கண்டுபிடித்தார். அவர் கற்றலின் சில விதிகளை ஏற்படுத்தினார்.

விதிகளினால் ஏற்படும் விளைவு

ஒரு செயலை செய்யும் போது அதற்கு வெகுமதி அளிக்கப்படுதல் ஊக்கத்தை ஏற்படுத்தும். திரும்ப, திரும்ப ஒரு செயலை செய்யும் போது அதன் விளைவு நேரடியாக உறுதிசெய்யப்படுகிறது. எந்த ஒரு செயலும் திரும்ப, திரும்ப செய்யும் போது அச்செயலுடன் ஒன்றிப்போகும் தன்மை ஏற்படுகிறது. (உ.தா) வாசித்தல். எழுதுதல், தட்டச்சு, பாடல், நடனம், ஓவியம் ஆகியவை தொடர்ந்த செயல்பாட்டினால் கற்கப்படுகிறது.

இவான் பாவ்லோ என்ற ரஷ்ய வல்லுனர் நாயை பயன்படுத்தி பரிசோதனையை செய்தார். நாயின் உமிழ்நீர் சுரப்பியில் ஒரு மருந்து உள்ளடங்கிய உரையை பொருத்தி உமிழ்நீர் சுரப்பதன் அளவை கணக்கிட்டார். ஒவ்வொரு முறை மணி அடிக்கும் போது இறைச்சி பொடி கொடுக்கப்பட்டது. இவ்வாறு பலமுறை செய்யப்பட்டது. மணி அடித்தவுடனேயே இறைச்சி பொடி கொடுக்காமலே நாய்க்கு உமிழ்நீர் சுரந்தது. இவ்வாறு அந்த நாய் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. இதன்மூலம் உட்புற செயல்பாடுகள் கற்றலில் பயன்படுத்தப்படுகிறது என்பதை நிரூபித்தார்.

கற்றலின் மாற்றி அமைக்கும் கோட்பாடு

கற்றலின்போது ஒரு சூழ்நிலையிலிருந்து மற்றொரு சூழ்நிலைக்கு மாறுவது இயலக்கூடிய ஒன்றாகும் என்று தொரன்டிக் (Thorandike) கோட்பாடு கூறுகிறது. உதாரணமாக ஒரு இரு சக்கர வாகனம், அல்லது ஒரு நான்கு சக்கர வாகனத்தை இயக்கும் போது பல மாறுதல்களை கடைபிடிக்கவேண்டும். ஸ்டியரிங்கை அசைத்தல், சாலை விதிகள் மற்றும் சாலையை கவனித்தல் ஆகியவைகள். ஒரு தட்டச்சு இயந்திரம் அல்லது பியானோவை இயக்கும்போது கைகளும், தலை, கண்கள் ஆகியவை ஒருநிலை படவேண்டும்.

கவனித்தல்

ஒரு குறிப்பிட்ட பொருளின் மேல் உள்ள கவனத்தில் நோக்கமாக இருத்தல் அல்லது அதே சமயத்தில் வேறொரு செயல்பாடோ அல்லது பொருளின் மேல் கவனம் செல்லக்கூடாது.

உணர்ச்சி

குல்ப் (Kulph) என்ற உளவியல் நிபுனர் உணர்ச்சி என்பது உடல் உறுப்புகளில் ஏற்படும் மனக்கிளர்ச்சி மற்றும் உணர்வுகளின் கூட்டு என்று கூறுகிறார்.

தனிமனித தன்மை

தனிமனித தன்மை கீழ்க்கண்டவைகள் மூலம் அறியப்படுகிறது.

 • நடத்தை,
 • ஒழுக்கம்,
 • செயல்பாடுகள் மற்றும் செய்கைகள்.

இது சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் செயல்படுகிறது. வெளிப்புற சூழ்நிலைக்கு தகுந்தாற்போல், ஒருவர் தன்னை மாற்றி அமைக்கும் வழியை "பெர்சனாலிட்டி" என்று அழைக்கிறோம்.

தனிமனிதத்தன்மை பொருள் விளக்கம்

மன் (Muun) என்பதன் பொருள் ஒரு தனிமனிதனின் ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்பட்ட குணநலன்கள் என்று அழைக்கலாம். இக்குணங்கள், ஒழுக்கம், விருப்பம், நடப்பதை புரிந்துகொள்ளும் திறன், செயலாற்றும் திறன் ஆகியவை அடங்கும். தனிமனிதத் தன்மை என்பது உள் மற்றும் வெளிப்புற செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது என்பதாகும். இது தனித் தன்மையின் தொகுப்பு அல்ல. அவைகளில் குறிப்பிட்ட சில ஒருங்கிணைப்பாகும்.

தனிமனிதத்தன்மை என்பது ஒழுக்கம், நடத்தை, புரிந்துகொள்ளும் திறன், செயலாற்றும் திறன், விருப்பம் மற்றும் ஒழுக்கத்தின் வகை ஆகியவைகள் சூழ்நிலைக்கேற்ப ஒருவரால் மாற்றி அமைக்கப்படும் தன்மையே பெர்சனாலிட்டி (Personality) என்று குறிப்பிடுகிறோம். இக்குணநலன்கள் ஒருங்கிணைக்கப்படுவதால் கட்டுப்பாடுள்ள குணநலங்கள் வெளிப்படுகிறது. தனித்தன்மையில் அசாதாரண நிலை ஏற்படும் போது குணநலன்களின் ஒருங்கிணைப்பில் தடை ஏற்படும். மனநலம் குன்றியோரிடையே நல்லொழுக்கம் மற்றும் தனிமனித தன்மையில் ஒழுங்கின்மை ஏற்படுகிறது.

தனிமனித தன்மை வளர்ச்சியடைவதற்கு முக்கிய காரணம் பரம்பரை மற்றும் சுற்றுச் சூழலாகும். பரம்பரை காரணமாக இருந்தாலும் சூழ்நிலை அந்த நிலையை மாற்றும் காரணியாக அமையும். இவைகளின் வெளிப்பாடு தனிமனித கட்டமைப்பு, ஒழுங்கான அமைப்பு ஆகியவைகளில் முக்கியத்தும் வாய்ந்ததாக இருக்கும். சிறப்பான பண்பு மற்றும் நடத்தைக்கும், தனித்தன்மைக்கும் உள்ள நெருக்கம் மனிதனின் அடிப்படை தன்மைகள், பல சிறப்பு பண்புகளை உள்ளடக்கியதாகும். ஒரு மனிதனின் தனித்தன்மை அவனது சிறப்பு பண்புகளின் நிலைகளை அளவிடக்கூடிய ஒரு பகுதியாக உள்ளது. பலதரப்பட்ட சூழ்நிலையில் ஒரு மனிதன் எவ்வாறு செயல்படுகிறான் என்பதை கவனிப்பதாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் ஆராய்ச்சி கல்வி மையம்

2.81578947368
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top