பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / மன நலம் / கிளாஸ்கோ கோமா அளவுத்திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கிளாஸ்கோ கோமா அளவுத்திட்டம்

கிளாஸ்கோ கோமா அளவுத்திட்டம் பற்றிய குறிப்புகள்.

கிளாஸ்கோ கோமா அளவுத்திட்டம் என்பது?

உலகளாவிய ரீதியில் தன்நினைவிழத்தல்/சுயநினைவிழத்தலை அளவிடப் பயன்படும் அளவுத்திட்டமாகும்.. இது மிகவும் நம்பகரமான மற்றும் விஞ்ஞான முறையில் ஒருவரின் தன் உணர்வு/ சுயநினைவினை அளவிடப் பயன்படும் முறையாகும். இம்முறையினை வைத்தியர்களாலும் தாதியர்களாலும் ஆரம்பக்கட்ட பரிசோதனையின் போதும் தொடர்ச்சியாக நோயாளியினை அவதானிக்கவும் பயன்படுத்த முடியும். இது நோயாளியின் நீண்டகால விளைவினை எதிர்வுகூறவும் உபயோகமானது. இங்கு மூன்று விதமான வெளிப்பாடுகள் தனித்தனியே அவதானிக்கப்பட்டு அட்டவணைப்படுத்தப்படும். இவற்றின் கூட்டுத்தொகை பெறப்பட்டு சுயநினைவின் அளவு வரையறுக்கப்படும்.

அங்க அசைவுகள் – 6 தரங்கள்

 • வலி உணர்ச்சித்தூண்டலுக்கு அங்க அசைவுகள் இன்மை
 • வலி உணர்ச்சித்தூண்டலுக்கு அங்கங்களை(கைகள், கால்கள்) வெளிப்புறமாக விரித்தல்
 • வலி உணர்ச்சித்தூண்டலுக்கு அங்கங்களை உட்புறமாக மடித்தல்
 • வலி உணர்ச்சித்தூண்டலுக்கு தூரமாக அங்கங்களை எடுத்தல்
 • வலி உணர்ச்சி தூண்டப்படும் பகுதியை அடையாளம் கண்டு வெளியேற்ற அதனை நோக்கி அங்கங்களை அசைத்தல்
 • கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து அங்கங்களை அசைத்தல் – நோயாளி வைத்தியர் கூறும் சிறுசிறு கட்டளைக்கேற்ப நடந்து கொள்வர்

பேச்சு – 5 தரங்கள்

 • பேச்சு முற்றாக இன்மை
 • விளங்கிக் கொள்ளமுடியாத சொற்களற்ற பேச்சு
 • பொருத்தமற்ற பேச்சு – தொடர்பாடலுடன் சம்பந்தமற்று பேசுதல்
 • குழப்பமடைந்த பேச்சு – நோயாளி கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடியதாக இருப்பினும் குழப்பமடைந்து காணப்படுவார்
 • நேர்த்தியான பேச்சு – நோயாளி குழப்பமற்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதுடன், தான் இருக்குமிடம், எதற்காக இருக்கிறார், தற்போதைய வருடம், மாதம் போன்றவற்றை அறிந்திருப்பார்.

கண் அசைவுகள்

 • கண் அசைவுகள் முற்றாக இன்மை
 • தூண்டப்படும் வலிக்கு கண் அசைத்தல்
 • ஒலிக்கு கண் அசைத்தல்
 • தன்னிச்சையாக கண் அசைத்தல்

மருத்துவமுறைகள்

 • அளவுத்திட்டப் புள்ளி 3 – மிகக்குறைந்த கிளாஸ்கோ கோமா அளவுத்திட்டப் புள்ளி ஆகும். இது ஆழ்ந்த தன் உணர்வற்ற நிலை/ இறப்பைக் குறிக்கும்.
 • புள்ளி <8 – மிகவும் தன் நினைவு குறைவடைந்த நிலை. இவர்களால் சுவாசப்பாதையினை தாமாகவே பேண முடியாது இருக்கும். எனவே குழாய் மூலம் செயற்கை சுவாசம் வழங்க வேண்டி இருக்கும்.
 • புள்ளி 15 – அதி உச்சப்புள்ளி ஆகும். இதுவே சாதாரண தன் நினைவுள்ள நபர்களில் காணப்படும்.
 • மிகத் தாழ்ந்த கிளாஸ்கோ கோமா அளவுத்திட்டப்புள்ளியை கொண்டுள்ள நோயாளிகள் சுவாசப்பாதையை பேணுவதில் சிரமத்தை எதிர்கொள்வர். (முக்கியமாக புள்ளி 8 அல்லது அதிலும் குறையும் போது). எனவே அவர்களுக்கு அவசர உயிர்ப்பு புனருத்தாரண சிகிச்சை வழங்கப்பட்ட பின்னரே கோமாவுக்கான காரணம் பற்றி ஆராயப்படும். இதன் போது குழாய் மூலமான செயற்கைச் சுவாசம் வழங்கப்படுவதுடன் ஊசி மூலம் திரவங்களும் வழங்கப்படும்.

ஆதாரம் : ஆரோக்கியத்தளம்

 

Filed under:
3.064
TASNA Nov 03, 2015 10:54 AM

ஹைபோதைராய்டிஸம் இருப்பவர்களுக்கு இந்த விதமான பிரச்சனைகள் இருக்கும். உடல்நலம் - தெரிந்து கொள்ள வேண்டியவை பகுதியில் உள்ள "தைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்" என்ற பக்கத்தை படித்துப் பயன்பெறவும்.

kaleel rahman Nov 02, 2015 09:58 PM

எனக்கு பல வருடங்களாக பகலில் தூக்கம் அதிகமாக வருகிறது என்ன செய்வது எந்த டாக்டரை பார்ப்பது 97*****60

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top