பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புனர்ஜனி

புனர்ஜனி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை மதிப்பீடு செய்ய உதவும் ஒருங்கிணைந்த முறை

புனர்ஜனி என்பது, மனவளர்ச்சி குறைபாடுகளை ஆய்வு செய்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் பல்துறை கல்வியியல் வல்லுனர்களின் உதவியோடு தேவையான திட்டமிடலுக்கு உதவும் இணையம் சார்ந்த மென்பொருளாகும். மனவளர்ச்சி குன்றியவர்களின் நன்மைக்காக இந்தியாவில் பயன்படுத்தப்படும் மென்பொருள் வகைகளில் இது முதன்மையானதாகும்.

RCI அங்கீகாரம் பெற்ற FACP, MDPS மற்றும் BASIC-MR ஆகிய மூன்று மதிப்பீடு மற்றும் ஆய்வு முறைகளை புனர்ஜனி ஒருங்கிணைக்கிறது. இதற்குத் தேவைப்படும் கணக்கீடுகள், தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் முறைகளிலிருந்து பெறப்படுகிறது. இந்த கணக்கீடுகள் அடிப்படையில் ஒவ்வொரு தனிநபர்களின் பலம் மற்றும் தேவைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. தனித்த செயல்பாடு (achieved independence), பலப்படுத்தப்பட வேண்டிய மற்றும் பிரச்சின பகுதிகள் ஒவ்வொரு நபருக்கும் கண்டறியப்படுகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் நீண்டகால இலக்குகள் மற்றும் குறுகியகால நோக்கங்கள் கண்டறியப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஏற்ற பாடத்திட்டங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒரே வகையான பிரச்சினைகளை கொண்ட மனவளர்ச்சி குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு, குழுவாக பயிற்சியளிக்கும் விதமாக, குழிப்படுத்தும் கணக்கீட்டு வசதியும் இதில் அளிக்கப்பட்டுள்ளது.

புனர்ஜனியில், தேவைப்படும் ஆய்வு மற்றும் மதிப்பீடுகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செய்துகொள்ளும் உள்ளிணைந்த வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நபரின் செயல்நிலைகளில் ஏற்படும் முன்னேற்றங்களை (performance level in adaptive behaviors), கல்வியாளர்கள் விரிவாக அறிந்துகொள்ளவும் இது உதவுகிறது. நல்ல திட்டமிடலுக்கு முதன்மை தேவை சரியான ஆய்வு, மற்றும் ஒவ்வொரு தனிநபருக்கும் ஏற்ற வகையிலான வடிவமைப்பு இரண்டாவது தேவை என்ற அடிப்படையை கருத்தில் கொண்டு இந்த முறை செயல்படுகிறது. காலாண்டு இடைவெளிகளில் திட்டத்தின் செயல்திறனை (effectiveness of the program) மதிப்பீடு செய்யும் தளமாகவும் இது பயன்படுகிறது. இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் புதிய இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ள முடியும். மூன்று முதல் பதினெட்டு வரை வயதுடைய மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு திட்டமிடுவதை இந்த மென்பொருள் கையாளக்கூடியது.

கல்வியாளர்கள் மற்றும் சமுதாயத்திற்கு இதனால் ஏற்படும் நன்மைகள்

  • ஆய்வு / மதிப்பீட்டில் சீரான அணுகுமுறை
  • மனித உணர்வு காரணிகளால் ஏற்படக்கூடிய பிழை வாய்ப்புக்களை குறைத்தல்
  • சிறப்பு கல்வியாளர்கள், சிக்கலான மனித முறைகளை கடைபிடிக்க வேண்டியதில்லை
  • இதனால், குழந்தைகளை கவனித்துக்கொள்ள் சிறப்பு கல்வியாளர்களால் அதிக நேரம் செலவிட முடியும்
  • மனவளர்ச்சி குன்றிய குழந்தையின் முன்னேற்றத்தை வரைபடங்களாக காட்சிப்படுத்த முடியும்

கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகள் எட்டு சிறப்பு பள்ளிகளில் பரிசோதனைக்கு உட்படுத்த்ப்பட்ட இந்த செயல்முறை, தற்போது நாடு முழுவதும் உள்ள 100 சிறப்பு பள்ளிகளில் முயற்சிக்கப்படவிருக்கிறது.

புனர்ஜனி (தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை மதிப்பீடு செய்ய உதவும் ஒருங்கிணைந்த வழிமுறை)

தகவல் மூலம்: http://www.punarjjani.in/

Filed under:
3.00900900901
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top