பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / மன நலம் / மனவளர்ச்சி குறைபாடு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மனவளர்ச்சி குறைபாடு

இத்தலைப்பில் மனவளர்ச்சி குறைபாடு சார்ந்த பிரச்சனைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.

வரையறை

அறிவுசார் நடவடிக்கை (அறிவுநிலையை அளக்க உதவும் பரிசோதனைகள் மூலம் அளவீடு செய்தது) மற்றும் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சராசரிக்கும் குறைவான குறிப்பிடத்தகுந்த குறைபாடுகள் இருப்பதை மனவளர்ச்சிக் குறைபாடு என்கிறோம்.

விபரங்கள்

 • நோய் கட்டுப்பாடு மற்றும் தவிர்ப்பு (Centers for Disease Control and Prevention) கூறியுள்ளபடி, 1990-களில், பொதுமக்களில் 2.5 முதல் 3 சதவீதம் வரை மனவளர்ச்சிக் குறைபாடு இருந்துள்ளது. இக்குறைபாடு, குழந்தை பருவம் முதல், பதின் பருவம் வரையான கட்டத்தில் தோன்றுகிறது.
 • இது வயது வந்த பின்பும் தொடர்கிறது. காரணங்கள் அறியும் திறனை, அறிவுசார் நடவடிக்கைகளை முறையான பரிசோதனைகள் (வெச்ளர்-இன்டலிஜென்ஸ் அளவுகள்) செய்வதன் மூலம் அதன் அளவின் (IQ) திறனை கணக்கிட முடியும். அன்றாட செயல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இரண்டு அல்லது மூன்று அறிவுசார் நடவடிக்கைகள் சராசரிக்கும் குறைவான குறிப்பிடத்தகுந்த குறைபாடுகள் இருந்தால், மனவளர்ச்சிக் குறைபாடு இருப்பதை அறிய முடியும்.
 • ஐ.க்யூ. (IQ) மதிப்பீடு 70 முதல் 75 வரை இருந்தால் மனவளர்ச்சிக் குறைபாடு இருப்பது உறுதியாகிறது.
 • அன்றாட பணிகளுக்கு தேவைப்படும் திறன்கள் செயலாக்கத் திறன்கள் எனப்படும். மொழிகளை புரிந்து கொள்ளுதல், வீட்டில் வசிப்பதற்கு தேவைப்படும் திறன்கள், சமூக வளங்களை பயன்படுத்தத் தேவையான திறன்கள், சுகாதாரம், பாதுகாப்பு, பொழுதுபோக்கு, சுய அக்கறை, சமூகத் திறன்கள், செயலாக்கமிக்க கல்வித்திறன் (வாசித்தல், எழுதுதல், கணக்கிடுதல்) மற்றும் பணித்திறன்களை இவை உள்ளடக்கியுள்ளன.
 • மனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மற்ற சாதாரண குழந்தைகளை விட, நடப்பது, பேசுவது போன்ற முக்கிய செயல்களை தாமதமாக துவங்குகின்றனர்.
 • மனவளர்ச்சி குறைவிற்கான அறிகுறிகள், குழந்தை பிறந்தவுடனோ அல்லது சிறிது காலம் சென்ற பிறகோ தெரியத் துவங்கும்.
 • மனவளர்ச்சிக் குறைவு வெளிப்படும் காலம், அதன் காரணங்களைப் பொருத்து வேறுபடும்.
 • சிலவகை குறைபாடுகள், குழந்தை பள்ளிக்கு செல்லும் காலம் வரை அறியப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது.
 • இவ்வகை குழந்தைகள், சமூக நடத்தை, தகவல் தொடர்பு, கல்வி மற்றும் செயலாக்கத் திறன்களில் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
 • என்செபலாட்டிஸ் அல்லது மேனிங்கிடிஸ் போன்ற குறைபாடுகள் அல்லது நரம்பியல் கோளாறுகள் உள்ள குழந்தைகள், திடீரென்று செயலாக்க குறைபாடுகளை வெளிப்படுத்துவார்கள்.

மனவளர்ச்சிக் குறைபாடுகளின் வகைகள்

ஐக்யூ அல்லது புத்திசாலித்தனம் ஆகியவை, வயதுக்கேற்ப காரணங்களை அறிவதை பொறுத்து அளவிடப்படுகிறது. மிகக்குறைவு, இது மத்திமம், அதிகம் மற்றும் மிக அதிகம் என நான்கு கட்டங்களாக வகைபடுத்தப்பட்டுள்ளது. தனிநபர் செயல்படும் விதங்களை அடிப்படையாகக் கொண்டு இவை அமைக்கப்பட்டுள்ளன.

மிகக்குறைவான மனவளர்ச்சிக் குறைபாடு

சுமார் 85 சதவீத பாதிக்கப்பட்டோர் இந்த வகையினர் ஆவர். இவர்களின் ஐக்யூ அளவீடு 50 முதல் 75 வரை இருக்கும் மற்றும் இவர்கள் ஆறாம் வகுப்பு வரை கல்வித்தகுதி பெறுவதில் சிரமமில்லை. சிறிதளவு சமூக அக்கறை மற்றும் கவனத்துடன் இவர்கள் சுமாரான சுயசார்பு வாழ்க்கையைத் தொடர முடியும்.

மிதமான மனவளர்ச்சிக் குறைபாடு

சுமார் 10 சதவீத பாதிக்கப்பட்டோர் இந்த வகையினர் ஆவர். இவர்களின் ஐக்யூ அளவீடு 35 முதல் 55 வரை இருக்கும். சிறிதளவு மேற்பார்வையுடன் இவர்கள் தங்கள் அன்றாடப் பணிகளை செய்துகொள்ள முடியும். குழந்தைப் பருவத்தில் பெற்ற தகவல் தொடர்புத்திறன்களைக் கொண்டு, பாதுகாப்பு விடுதி போன்ற மேற்பார்வையுடன் கூடிய சூழல்களில் இவர்களால் வாழவும் செயல்படவும் முடியும்.

அதிகமான மனவளர்ச்சிக் குறைபாடு

சுமார் 3 முதல் 4 சதவீத பாதிக்கப்பட்டோர் அதிக குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் ஐக்யூ அளவீடு 20 முதல் 40 வரை இருக்கும். இவர்களால் சிறிதளவு சுயதேவை மற்றும் தகவல் தொடர்புத்திறன்களைக் கற்க முடியும். பாதுகாப்பு விடுதி போன்ற மேற்பார்வையுடன் கூடிய சூழல்களில் இவர்களால் வாழ முடியும்.

மிக அதிகமான மனவளர்ச்சிக் குறைபாடு

1 முதல் 2 சதவீத பாதிக்கப்பட்டோர் மட்டுமே மிக அதிக குறைபாடு உள்ளவர்காளாக இருக்கிறார்கள். இவர்களின் ஐக்யூ அளவீடு 20 முதல் 25 வரை இருக்கும். பயிற்சிகள் மூலம் இவர்களால் சுயதேவை மற்றும் தகவல் தொடர்புத்திறன்களை சிறிதளவு கற்க முடியும். நரம்பியல் கோளாறுகள் ஏதாவது இவ்வகை குறைபாடுகளுடன் சேர்ந்து காணப்படும். இவர்களுக்கு மிக அதிக மேற்பார்வை தேவைப்படும்.

மனவளர்ச்சிக் குறைபாட்டின் காரணங்கள்

பிறப்பிற்கு முந்தைய காரணங்கள்

 • மரபணுக் கோளாறுகள்: டவுன்ஸ் சிண்ட்ரோம், பிரஜைல் X சிண்ட்ரோம், பிறேடர் விலி சிண்ட்ரோம், க்ளிண்ஃபெல்டர்ஸ் சிண்ட்ரோம்
 • தனி மரபணுக் கோளாறுகள்: கேலக்டோசீமியா*, பீநைல் கீட்டோனூரியா, ஹைப்போ தைராடிசம்*, மியூசோ பாலிசாக்கரிடோசாஸ், டாய் சாக்ஸ் போன்ற உடலியல் செயல்பாட்டுக் கோளாறுகள்
 • ந்யூரோ க்யூட்டேனியஸ் சிண்ட்ரோம்ஸ்: டியுபராஸ் ஸ்கிளிரோசிஸ், ந்யூரோபைரோமேட்டோஸிஸ்
 • டிஸ்மார்பிக் சிண்ட்ரோம்ஸ்: லாரன்ஸ் மூன் பிடில் சிண்ட்ரோம்
 • மூளை மாறுபாடுகள்: மைக்ரோ செபாலி, ஹைட்ரோ செபாலஸ், மைலோ மேனிங்கோசீல்
குழந்தை வளர்ப்பின் மீதான அதீத சூழல் தாக்கங்கள்
 • பற்றாக்குறைகள்: அயோடின், போலிக் ஆசிட், அதீத சத்துப் பற்றாக்குறை
 • பொருட்களின் பயன்பாடு: மது, நிகோடின், கோகைன்
 • அபாயகரமான இரசாயனங்களுக்கு ஆட்படுதல்: மாசுபாடுகள், கன உலோகங்கள், டாலிடோமைட், பினைடோயின், வார்பாரின் சோடியம் போன்ற அபாயகரமான மருந்துகள்
 • குழந்தைப் பருவ நோய் தொற்றுகள்: ருபெல்லா, டாக்சொபிலாச்மாசிஸ், சைடோமெலோ வைரஸ் தொற்று, சிபிலிஸ், எச்.ஐ.வி
 • கதிர்வீச்சுக்கு ஆட்படுதல்: மற்றும் Rh ஒவ்வாமை
 • கர்ப்பகால பிரச்சினைகள்: கர்ப்பகால இரத்த அழுத்தம், பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு, தொப்புள்கொடி பிரச்சினைகள்
 • குழந்தைப் பருவ நோய்கள்: நீரிழிவு, இருதய மற்றும் சிறுநீரக நோய்கள
பிரசவத்தின் போது

சிக்கலான பிரசவம், குறைப்பிரசவம், மிகக்குறைவான குழந்தை எடை, பிரசவத்தின் போது இறப்பு

 • சிசு பருவம்: செப்டிசீமியா, மஞ்சள் காமாலை, ரத்தத்தில் குறைந்த சர்க்கரையளவு, வலிப்பு
 • குழந்தைப்பருவம்: மூளை நோய்த்தொற்றுகளான காசநோய், ஜப்பானிஸ் என்செபலாடிஸ், பாக்டீரியல் மேனிஞ்சிடிஸ், தலைக்காயங்கள், காரியத்தின் நீண்டகாள பாதிப்பு, தொடர்ச்சியான மற்றும் அதிக சத்துக்குறைபாடு, குறைவான உந்துணர்வு
  (குறிப்பு - குறியிடப்பட்ட குறைபாடுகளை கண்டிப்பாக குணப்படுத்த இயலும்)

மனவளர்ச்சிக் குறைபாட்டின் அறிகுறிகள்

 • அறிவுசார் முன்னேற்றம் அடைய முடியாமல் இருத்தல்
 • உட்காருதல், தவழுதல், நடை, பேச்சு ஆகிய முக்கிய முன்னேற்றங்கள் கால தாமதப்படுதல்
 • பேச்சு, நடத்தையால் ஏற்படும் விளைவுகளை புரிந்து கொள்ளமுடியாமல் குழந்தைதனமான நடவடிக்கைளை கொண்டிருத்தல்
 • பிரச்சினைகள் தீர்வில் சிரமப்படுதல் மற்றும் ஆர்வமின்மை
 • குறைவான கற்கும் திறன் மற்றும் சரியாக சிந்திக்க முடியாமை
 • நினைவு படுத்டுவதில் சிரமப்படுதல்
 • பள்ளிகளின் கல்வி எதிர்பார்ப்பை நிறைவேற்ற இயலாமை

சிகிச்சைகள்

 • மனவளர்ச்சிக் குறைபாட்டு சிகிச்சைகள், அவற்றை குணப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டவை அல்ல. அவை நோயினால் ஏற்படும் அபாயங்களை குறைப்பதில் (உதாரணமாக: பள்ளி அல்லது வீட்டில் அபாயங்களை குறைத்தல்) மற்றும் அதற்குத் தேவையான வாழ்க்கைத் திறன்களை கற்பிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன. இச்சிகிச்சைமுறை பாதிக்கப்பட்ட நபரின் முழுத்திறனை வெளிப்படுத்தும் விதமாகவும், அவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்பத்தினரின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவேற்றும் விதமாகவும் இருக்க வேண்டும்.
 • 40 முதல் 70 சதவீத நபர்களில், மனவளர்ச்சிக் குறைபாட்டுடன் தொடர்புடைய ஆக்ரோஷம், மனநிலை மாற்றங்கள், தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளும் மனப்பான்மை, பிற செயல்பாட்டு பிரச்சினைகள், வலிப்பு ஆகியவற்றுக்கு, மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க படுதல் அவசியம்.
Filed under:
2.97087378641
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top