பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

யோகாவில் பஞ்சபூத முத்திரைகள்

நமது உடல் ஆரோக்கியம் காக்க நமது பொக்கிஷ கலைகளில் ஒன்று யோகா, அதில் முத்திரைகள் பயன்கள் அதிகம் அனைவரும் எளிமையா செய்து பலன் பெற கூடிய தந்திர யோகம் முத்திரைகள்

வாயு முத்திரை செய்முறை:

ஆள்காட்டி விரலின் நுனிப்பகுதி கட்டை விரலின் நுனியோடு இணைக்கவும்.லேசான அழுத்தத்தில் இருக்கவேண்டும் மூன்று விரல்களும் நேராக இருத்தல் வேண்டும்.

பயன்கள்

வாயு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும், வலிகள் குறையும் தசைபிடிப்பு, மூச்சுப்பிடிப்பு, மூட்டுவலிகள் கட்டுப்படுத்தப்படும், அஜீரணம் பசியின்மை வயிறு உப்புசம் ஏப்பம் சரியாகும். உடல்வலி சரியாகும், மனச் சோர்வு மறைந்து மனம் அமைதி அடையும்.  10 நிமிடத்திற்குள் செய்தல் வேண்டும்  10 நிமிடத்திற்கு மேல் செய்யக்கூடாது.

பத்மாசனம் அர்த்த பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் செய்தல் நன்று.

ஆகாய முத்திரை செய்முறை:

நடுவிரலின் நுனிப்பகுதியை கட்டை விரலின் நுனிப்பகுதியை தொடவும். மற்ற மூன்று விரல்களை நீட்டிக் கொள்ளவும்.        பயன்கள் : ஆகாய சக்தியானது குறைவாகவோ அல்லது அதிகமாகவோ ஆனால் சமநிலை படுத்தப்படும். எலும்புகள் உறுதியாகும் இருதய நோய்கள் அகலும், காது நோய்கள் குணமாகும், மனதிலுள்ள வெறுமை உணர்வு மறையும்.

5 லிருந்து 15 நிமிடங்கள் வரை செய்யலாம், பத்மாசனம் அர்த்த பத்மாசனம் வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் செய்யலாம்

ப்ரித்வி முத்திரை செயல்முறை :

மோதிர விரலின் நுனிப்பகுதி கட்டை விரலின் நுனி பாகத்தோடு இணைத்தல் வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நேராக இருத்தல் வேண்டும்.

பயன்கள்:

நிலம் எனும் பூதம் சமன் அடையும், மற்ற பூதங்களும் உறுதியடையும். வயிறு, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, கணையம் போன்ற உறுப்புகள் உறுதி அடையும். இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். வாந்தி தலைசுற்றல் மயக்கம்  போன்றவை மறையும். மூலநோய், கர்ப்பப்பை இறக்கம், மலக் குடல் இறக்கம் போன்றவை குணமாகும்.

காலம்:

காலை, மதியம், மாலை, இரவு என்று நான்கு வேளைகளில் தலா 5 நிமிடம் செய்யவும்.

வஜ்ராசனம் பத்மாசனம் அர்த்த பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் செய்தல் நன்று.

வருண முத்திரை செயல்முறை:

சுண்டு விரலின் நுனிப்பகுதி கட்டை விரலின் நுனிபகுதியைத் தொடவும்.

பயன்கள்:

நீர் எனும் பூதம் சமநிலை அடைந்து, உடல் குளிர்ச்சியடையும், தோலின் வறட்சி குறையும், ரத்த ஓட்டம் சீராகும் தோலின் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றம் உருவாகும். கூந்தல் உதிர்வை தடுக்கும்.

காலம்:

5லிருந்து 20 நிமிடம் செய்யலாம், பத்மாசனம், அர்த்த பத்மாசனம், அல்லது சுகாசனத்தில் செய்தல் நன்று.

சூரிய முத்திரை  செயல்முறை:

மோதிரவிரலின்  நுனிப்பகுதியை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலை மோதிர விரலின் மேல் பகுதியில் அழுத்தம் கொடுத்தல் வேண்டும்.

பயன்கள்:

உடல் சூடு அதிகரிக்கும், உடல் உறுதியாகும், உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரையும், தைராய்டு குறை நிலை சரியாகும்.

குறிப்பு : உடல் வலுவில்லாமல் இருப்பவர்கள், காய்ச்சல் உள்ளவர்கள், தைராய்டு அதிகம் உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்தல் கூடாது.

காலம் :  5 லிருந்து 15 நிமிடம் வரை செய்யலாம். கோடை காலத்தில் 10 நிமிடத்திற்கு மேல் செய்யக்கூடாது.

ஸ்ரீரங்கம் விவேகானந்தா யோகா மையத்தின் யோக ஆசான்களின் வழிகாட்டுஉதவியுடன் தொகுக்கப்பட்டது.

2.71428571429
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top