பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

யுனானி

இத்தலைப்பு யுனானியின் கொள்கைகள் மற்றும் கருத்துக்கள், நோய் தடுப்பு மற்றும் கண்டறிதல், தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் வளங்கள் முதலியன பற்றி உள்ளடக்கியுள்ளது.

அறிமுகம்

யுனானி மருத்துவமுறை இந்திய மக்களை வெகுவாக ஈர்த்து தமது முத்திரையை பதித்துள்ளது. யுனானி வைத்தியத்தில் இன்று இந்தியா முன்னிலை வகிக்கும் நாடாக விளங்குகிறது. தற்போது இந்தியாவில் நிறைய யுனானி கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிலையம், மற்றும் மருத்துவ மனைகள் உள்ளது. யுனானி முறை கிரேக்க நாட்டில் தொடங்கியது

யுனானி முறைக்கு வித்திட்டவர் ஹிப்போகிரேட்டிஸ் ஆவார். தற்பொழுது இம் மருத்துவத்தில் அரேபியர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அரேபியர்கள் கிரேக்கநூல்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் யுனானி மருத்துவத்தினை செழுமை படுத்தி அதன் வளர்ச்சிக்கு தமது , பங்களிப்பை அளித்து வருகிறார்கள். யுனானி முறையில் உள்ளடங்கிய இயற்பியல், வேதியல், தாவரவியல், உடற்கூறு அமைப்பியல், நோய் அறிகுறிகள், மருத்துவ இயல், மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவம் ஆகியவற்றில் உள்ள பயன்களை அறிந்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

யுனானி மருத்துவம் எகிப்து, சிரியா, ஈராக், பெர்சியா, இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைமுறையில் பாரம்பரிய மருத்துவவமுறைகளில் யுனானி மருத்துவம், செழிப்புற இருந்தது. இந்தியாவில் யுனானி முறை அரேபியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் இது உறுதியாக தமது வேர்களை ஆழப்பதித்துக்கொண்டது. டெல்லி சுல்தான் ஆட்சியாளர்கள் யுனானி முறைக்கு ஆதரவு கொடுத்து, யுனானி மருத்துவ அறிஞர்களை ஊக்குவித்தார்கள். அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் ஆகியோரும் யுனானி முறையினை மேம்படுத்திட ஈடுபடுத்தப்பட்டார்கள். இந்தியாவில். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், யுனானி முறை பின்னடைவு ஏற்பட்டது.

ஆங்கிலேயரின் அலோபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டு இந்தியாவில் வேரூன்றியது. யுனானி கல்வி, ஆராய்ச்சி, மருத்துவம், யுனானி மருந்து வகைகள் அதனுடைய வளர்ச்சியிலிருந்து பின்னுக்குத்தள்ளப்பட்டது. இந்த பாரம்பரிய யுனானி முறை இரண்டு நூற்றாண்டு காலமாக முழுவதுமாக தவிர்க்கப்பட்டது.

யுனானி முறைப்படி வாழ்ந்தவர்களும், யுனானி முறையை நம்பியவர்களும், யுனானி முறை மருத்துவர்களும், இதை தொடர முடியாமல் போனது. முக்கியமாக டெல்லியில் உள்ள ‘சாரபி’குடும்பம், லக்நோவில் உள்ள ‘அல்லி’குடும்பம், ஹைதராபாத்தில் உள்ள ‘நிஜாம்’ குடும்பம், இவர்கனின் முயற்சியினால் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியில் எஞ்சி பிழைத்து இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், யுனானி முறை மற்றும் இந்திய மருத்துவ முறைகள், இந்திய தேசிய அரசிடமிருந்து தமது யுனானி முறையை பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் பெற்றது.

யுனானி முறைக்காக ஆராய்ச்சி நிலையங்கள், பரிசோதனை கூடங்கள், பயிற்சி நிலையங்கள், மருத்துவ மனைகள், அமைத்து கொள்ள மத்திய அரசாங்கம் சட்டம் இயற்றியது. இதன் விளைவாக தற்போது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஆராய்ச்சி கூடங்கள், மருத்துவர்கள், தேசிய குடும்ப நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

யுனானி-கொள்கைகள்-கருத்து படிவங்கள்

ஹப்போ கிரேட்ஸ் கோட்பாட்டின்படி யுனானி முறை நான்கு கோட்பாடுகளை கொண்டதாக உள்ளது. இவை நான்கும் மனித உடலில் உள்ளவை ஆகும். இரத்தம், இரப்பை, மஞ்சள் மற்றும் கரு பித்த நீர், கபம், நீர் ஆகும். மனித உடல்-உடல் பின் வரும் ஏழு கூறுகளால் உருவாக்கப்பட்டவை.

 • ஆரஹான் (தனிமங்கள்)
 • மிஜாஜ் (மனபோக்கு)
 • அஹாலத் (ஹியுமரிசம்கள்)
 • ஆலா (உறுப்புகள்)
 • ஆர்வா (எரிப்பொருள்)
 • குவா (துறைகள்)
 • அபா (செயல்பாடுகள்)
ஆரஹான்

மனித உடல் நான்கு பிரிக்க முடியாத தனிமங்கள் கொண்டுள்ளது. ஒவ்வொரு தனிமத்திற்கும் அதற்கு உண்டான குணம் உண்டு:

தனிமங்கள்

குணாதிசியங்கள்

காற்று

சூடு மற்றும் ஈரம்

நிலம்

குளிர் மற்றும் வறட்சி

நெருப்பு

சூடு மற்றும் வறட்சி

நீர்

குளிர் மற்றும் ஈரம்

மிஜாஜ்

யுனானி முறையில் ஒவ்வொருவரின் குணாதிசயங்கள், , மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொருவரது குனாதிசயமும் தனிப்பட்டதாகும். உடல் தனிமங்களின் ஒருமைப்பாடே ஒருவரது குனாதிசியம் என நம்பப்படுகிறது. குணாதிசியம் நான்கு கூறுகளும் சம அளவில் இருக்க வேண்டும். ஆனால் இது நடைமுறையில் இல்லாதவை. இந்த குணாதிசயங்களை சீர் செய்ய முடியும். ஆனால் குணாதிசியங்கள் சீரமைக்க முடியாதவை. சலனங்கள் உண்டாக்க கூடியவையாகும்.

அஹால்த்

மனநிலை, மனதில் உறுதியற்ற நிலையில் இருக்கும். இது சீரான நிலையில் இருந் து மாற்றி , உண்மை ஆக்க சிதைவு ஏற்படுத்திவிடும். ஊட்டச்த்து, வளர்ச்சி மற்றும் சரிபார்த்தல், சக்தி உற்பத்தி இவைகளில் இருந்தால் தனிப்பட்ட மன நிலை பாதுக்காக்கப்படும் உணவு நான்கு நிலைகளை கடந்து சீரணம் ஆகிறது.

ஆலா

மனித உடலில் பல்வேறு உறுப்புகள் உள்ளது. ஒரு உறுப்பில் நலம் பாதித்து நோய் ஏற்பட்டால் முழு உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

ஆர்வா

ஆர்வா என்பது நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றாகும். இது உடலின் அனைத்து வளர்சிதஹி மாற்றங்களுக்கு புரிகிறது. இது சக்தியை உருவாக்குகிறது. இந்த சக்தியை “குவா” என்பர். இது மூன்று சக்தியை உள்ளடக்கியது.

ஆர்வாவனது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும், ஆதார மத்தியாக விளங்குகிறது. இதனை வாழ்க்கை சக்தியாக கருதுகிறார்கள். இது குறிப்பாக நோயறிதலுக்கும், நோயை முணப்படுத்துவதற்கும் முக்கியமாக பயன்படுகிறது. இந்த ஆர்வா சக்தியானது உடல், உறுப்புகளை இயங்க வைக்கிறது.

குவா
 1. குவா டபியா(அ)இயற்கை சக்தி: எனப்படும். இது உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கும் உற்பத்திக்கும் ஆதாரமாக உள்ளது. இந்த சக்தியானது கல்லீரலில் துவங்கி உடலின் அனைத்து பகுதிகளுக்கும், திசுக்களுக்கும் செல்கிறது. உடல் இயக்கத்தை செயல்படுத்துவதற்கு உடலில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் உடல் வளர்ச்சியின் அடிப்படையில் வளர்சிதை மாற்றம் நிகழ்கிறது. இந்த ஊட்டச்சத்தானது நாம் உண்ணும் உணவில் இருந்து பெறப்பட்டு உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. இது உடல் வளர்ச்சிக்கும் உடலின் கட்டமைப்பான செயல்பாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
 2. குவா நப்சானியா: குவா நப்சானியா என்பது நரம்பு மற்றும் மணம் சார்ந்த சக்தியை குறிக்கும். இது மூளையின் உட்பகுதியில் நுட்பமான உணர்வை ஏற்படுத்தி செயலை நிறைவேற்றும் ஆற்றலை அளிக்கிறது. இந்த உணர்வு ஆற்றலால் மனித மனசக்தி மேம்படுத்துகிறது.
 3. குவா ஹவானியா - ஆதார சக்தி: வாழ்க்கையை பராமரிப்பதற்கும் உடலிலுள்ள உறுப்புகள் மனோசக்தியின் விளைவுகளை ஏற்றுக்கொள்வதற்கும் காரணமாக உள்ளது. இது இதயத்தில் அமைந்துள்ளது. இதிலுள்ள திசுக்களின் செயல்பாடு இதய இயக்கத்திற்கு துணையாக இருந்து வாழ உதவுகிறது.
அபால் (இயக்கம்)

உடலின் அனைத்து உறுப்புகளின் இயக்கங்களும் சரியாக இயங்க வேண்டும். அனைத்து உடல் உறுப்புகளின் வடிவங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அனைத்து உறுப்புகளும் அதனதன் பணிகளை சரியாக செய்வதால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உடலின் பணிகள் நன்கு நடைபெறும்போது உடல் பலவீனமின்றி ஆரோக்கியமாக இருக்கும்.

நோய் அறிதல்: யுனானி முறையில் நோயறிதலானது உடல்பரிசோதனை மூலமாகவும் மலம், சிறுநீர் ஆகியவற்றின் நிறம், தன்மை ஆகியவற்றின் மூலமும் நோயை பற்றி அறிந்து கொள்ள முடியும்.

நோய் தடுத்தல்

தடுப்பு நோயை குணப்படுத்துவது எவ்வளவு அவசியமோ அதே அளவு நோயை தடுப்பதும் அவசியமானது ஆகும். குழந்தை பருவத்தில் இருந்தது அவரது சூழ்நிலையை ஒட்டியே அவரது ஆரோக்கியமும் அமைகிறது. அவைகள் நீர், உணவு, காற்று இம்மூன்றும் தூய்மையாக இருத்தல் அவசியமாகும். காற்று, உணவு, திரவ உணவு, உடற்பயிற்சி மற்றும் ஓய்வு மன ஒரு முகப்படுத்துதல், நல்ல உறக்கம் நல்ல தூய்மையான காற்று அவசியமானது. அவிசென்னா என்னும் அரேபிய மருத்துவர் கூற்றில், நோயாளி இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு இடம் மாறும் போது , அவ்ர் நோயில் இருந்து விடுபட சாத்தியம் உள்ளதாக கூறுகிறார். ஒருவர் வசிக்கும் வீடானது, நல்ல காற்றோட்டம் மிக்கதாக இருத்தல் வேண்டும்.

உண்ணும் உணவானது , தூய்மையான, சத்தான உணவு உண்ணும் போதும் நோய் தாக்கம் எனில் அது அவர் பருகும் குடி நீர் மாசடைந்து உள்ளதாக கருதலாம். எனவே தூய்மையான நீரையே பருக வேண்டும்.

உடற்பயிற்சியும் தேவையான ஓய்வும் எடுத்துக்கொள்ளும் போது ஆரோக்கியமான உடலாக தொடர்ந்து பராமரிக்க முடியும். மேலும் உடர்பயிற்சி செய்வதால், தசகள் வளர்ச்சியும், ஊட்டசத்து , இரத்த ஓட்டம் அதிகமாகும் கழிவுகளை வெளியேற்றும் உடல் உறுப்புகள் சீராக இயல்படும். இதயத்தையும், கல்லீரலையும் நன்கு வைத்திருக்கும். யுனானி முறையானது.

வெளிப்புறசூழலை தவிர , மன நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களது ஆரோக்கியத்தை குறிப்பிட தகுந்த மாற்றத்தை ஏற்பதுத்துகிறது. (மகிழ்ச்சி, சந்தோஷம், கோபம் போன்ற உணர்வுகள்).

இயல்பான தூக்கம் ஒருவரது உடலுக்கும் மனதிற்கும் ஓய்வளிக்கின்றது. தூக்கமின்மையால் சக்தி விரயமாவதும், மன சிதறலும், அஜீரணக் கோளாறும், மலச்சிக்கலும் உருவாகிறது.

கழிவுகள் வெளியேற்றம் தடையின்றி இருக்கும் போதுதான் நல்ல ஆரோக்கியம் இருக்கும். கழிவுகள் வெளியேறாமல் தேங்கும் போது நோய் காரணமாக அமைகிறது.

தீரெப்ப்யூட்டிக்ஸ்

இந்த முறையில் ஒருவரது முழு ஆளுமையும் கவனிப்பர். ஒவ்வெருவருடைய உடலமைப்பு, நோய்எதிர்ப்பு சக்தி, காலநிலை மாற்றங்களுக்கு அவரின் உடல்நலம் அமைதல், விருப்பு, வெருப்பு ஆகிய அனைத்தையும் பொருத்து மருத்துவம் அளிப்பர்.

ரெகிமென்டல் தெரப்பி

உடலில் உள்ள கழிவுகளை அகற்றி அதன்மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி ஆரோக்கிய நிலையை கொண்டு வருகிறது. உடலில் உள்ள நச்சினை நீக்கும் முறை 12 வகைப்படும்.

 1. வெனிசெக்டியோ: என்பது ரத்தம் சம்மந்தமான பிரச்சனை, உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்தம் சம்மந் தபட்ட பிரச்சனைகளை சரிசெய்கிறது. ரத்தத்தில் தேவையற்றதையும், விசத்தன்மையும் சேராமல் தடுக்கிறது. உடல் உள் உறுப்புகளில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றுகிறது. வளர் சிதை மாற்றங்களை ஊக்குவிக்கிறது. குறிப்பிட்ட சில வகையான மாத விலக்கு குறைபாடுகளை சரிசெய்கிறது. இயல்பான நிலைக்கு கொண்டு செல்கிறது.
 2. கப்பிங்:
  • தோல்களின் மீதுள்ள அழுக்கு, கழிவுகளை தூய்மை செய்கிறது.
  • கல்லீரல் நோய்களை குணமாக்குகிறது
  • மலேரியா, கணைய குறைபாடுகள் மூலம், விரை வீக்கம், கர்ப்பப்பை, சிரங்கு, தோலில் உள்ள முடி உதிர்தல் ஆகியவற்றினை கப்பிங் சிகிச்சை முறையில் குணமாக்கப்படும்.
 3. வியர்வை சிகிச்சை:
  • தோல், ரத்தம், உடல் உள் உறுப்புகளில் உள்ள கழிவுகள் யாவும் வியர்வை மூலமாக வெளியேற்றப்படுகிறது.
  • உடலில் உள்ள கூடுதலான வெப்பத்தை குறைக்கிறது.
  • உடலில் உள்ள அதிக வியர்வையை வெளியேற்றிட வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைத்தல், மசாஜ், மசாஜ்செய்தல், வெப்பம் மிகுந்த அறையில் தங்க வைத்தல் ஆகியவற்றின் மூலம் வியர்வையாக கழிவுகளை நீக்கி உடல் நலனை மேம்படுத்துகின்றனர்.
 4. சிறுநீர் சிகிச்சை: உடல் உறுப்புகளில் உருவாகும் கழிவுகள் சிறுநீராக வெளியேறுகிறது. எனவே சிறுநீர் வெளியேறுவதனை அதிகபடுத்தி கழிவுகள் மற்றும் விசத்தன்மை வெளியேற்றப்படுகிறது.
  • இதயம், கல்லீரல், நுரையீரலில் ஏற்படும் நோய்கள் பிரச்சனைகளை சரி செய்ய இந்த சிகிச்சை பயன்படுகிறது.
  • சிகிச்சையின் போது அதிகமாக சிறுநீர் வெளியேற்றிட, குளிர்ந்த நீரை பருகச்செய்வது மற்றும் குளிர்ந் த அறையில் தங்கவைத்தும் சிகிச்சை மேற்கொள்வர்.
 5. டர்கிஸ் குளியல்: மசாஜ் செய்த பிறகு ஒரு குளியல் முறையாகும். உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி வியர்வையை அதிகமாக்குகிறது. இதமான வெப்பத்தை அளிக்கிறது. ஊட்டச்சத்தை அதிகரிக்கிறது. கொழுப்பை குறைக்கவும், அதிகரிக்கவும் பயன்படுகிறது:
  • உடல் ஆரோக்கியமாக உள்ள ஒருவர் மசாஜ் செய்த பிறகு குளிர்ந்த நீரில் குளிப்பர்.
  • வாதம், தோல் அடர்த்தி சம்மந்தமான நோயுற்றவர்கள் மசாஜ் செய்பவர்கள் வெந்நீர் குளியல் மூலம் சரிசெய்யப்படுகிறது.
 6. மசாஜ் செய்தல்: மசாஜ் சிகிச்சை மூன்று வகப்படும். அவை மென்மையான மசாஜ் மற்றொன்று கடின மசாஜ் மற்றும் உலர் மசாஜ் ஆகும். இந்த மசாஜால் தசைகள்தோல் மென்மையாகும். இரத்த ஓட்டம் சீராகும். தசைகளை தளர்ச்சியாக்கி புத்துணர்வு அளிக்கிறது. இந்த மசாஜ் எண்ணெயை பயன்படுத்தி செய்யப்படுகிறது.
 7. எரிச்சலை எரிச்சலால குணப்படுத்துதல்: என்ன வகையான உணர்வுகள் தெரிகிறதோ அதே உண்ர்வுகளை உடலுல் அளித்து உடலில் ஏற்படும் வலி, எரிச்சல், அளர்ச்சியை குறைக்க உதவுகிறது. அதனைப்போலவே கட்டிகளை கறைக்கிறது.
 8. தீய்த்தல்: உடலில் விஷம் ஒரு உருப்பில் இருந்து மற்றொரு உறுப்பிற்கு பரவுவதை தடுக்கிறது. மனிதரின் இடுப்பு, மூட்டுவலி, போன்ற பிரச்சனைகளுக்கு தீய்த்தல் முறை சிகிச்சையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த முறையான்து நோயை தீர்க்கிறது.
 9. மலம் கழித்தல்: வயிற்றினை சுத்தப்படுத்த, குடலிலிருந்து மலம் வெளியேற்றிட யுனானி மருத்துவத்தில் சில வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது.
 10. வாந்தி: வாந்தியெடுக்க வைத்து நோயை குணப்படுத்தும் சிகிச்சை முறையில் யுனானி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சையில் தலை வலி, ஒற்றை தை வலி, அடி நாக்கு சுழற்சி, மூச்சு நோய் ஆஸ்துமா, ஆகியவற்றினை சரி செய்கிறது. மற்றும் மனம் சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது.
 11. உடறபயிற்சி: உடலின் நல நிலையை பராமைக்கவும், நோய்களை குணப்படுத்திடவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உடற் பயிற்சி அவசியமானதாகும். செரிமானம் கோளாறுகளை சரி செய்கிறது. உடற்பயிற்யிசினை செய்திட, கடைபிடிக்க சில விதிமுறைகளையும், கட்டுபாடுகளையும், நேர நிர்வாகத்தையும் கடைபிடிக்க வேண்டும். பல வகையான பயிற்சிகள் உள்ளது.
 12. அட்டை பூச்சிகளை பயன்படுத்தி சிகிச்சை: இந்த சிகிச்சை முறையில் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை போக்க பயன்படுகிறது. படர் தாமரை , தோல் நோய்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறையினை மேற்கொள்ள சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

உணவுக்கட்டுப்பாட்டு சிகிச்சை

யுனானி மருத்துவத்தில் உணவு முக்கிய பங்கு வகிக்கின்றது. தொடர்ச்சியாக தரமான, அளவான உணவுகளை சீரான அளவில் அளித்து பல உடற்பிரச்சனைகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்படுகிறது. உணவுக்கட்டுபாட்டின் மூலம் நோயை குணமாக்கிட ஏராளமான புத்தகங்கள் உள்ளது. ஒரு சில வகை உணவுகள் மலமிழக்கியாகவும், சிறுநீர் பிரிதல் எளிமையாகவும், வியர்வை வெளியேறவும் துணை செய்கிறது.

மருந்துகளை பயன்படுத்தி சிகிச்சை

இந்த சிகிச்சையில் மூலிகையால் தயாரிக்கப்படும் மருந்துகள் விலங்குகளின் எலும்புகள், தாதுக்களில் இருந்து தயார் செய்யும் மருந்துகளையும் பயன்படுத்தி நோயை குணமாக்குகின்றனர். பெரும்பாலும் பின் விளைவுகளற்ற மூலிகளை மருந்துகளே பயன்படுத்தப்படுகின்றன. யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் அதற்கே உண்டான இயற்கையான மருத்துவ தன்மை கொண்டது. ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ற மருந்துகளை தேர்ந் தெடுக்கின்றனர். இதனால் நோய் விரைந்து குணமாகவும், அதன் பக்க விளைவுகள் சரியாகவும் காரணமாக அமைகிறது. யுனானி மருந்துகள் ஒவ்வொன்றும் இயற்கை தன்மை கொணடது. சில வெப்ப தன்மையும் ஒரு சில குளிர்ந்த தன்மையும் , சில கொள, கொளப்பு தன்மையாகவும் சில கடின தன்மையிலும் இருக்கும். மனிதனின் உடல் மருந்தை ஏற்கும் தன்மை, வயது, உடல் அமைப்பின் தன்மை இவற்றையும், மருந்தின் தன்மையும் ஒப்பிட்டு பவுடராகவோ, கசாயமாகவோ, துனை மருந்துகளாகவோ, மாத்திரையாகவோ அளிக்கிறார்கள். இதனை பயன்படுத்த வழிமுறைகளும் உள்ளது.

அறுவைசிகிச்சை

குறிப்பிட்ட சில நோய்களுக்கு மட்டுமே அறுவைச்சிகிச்சை செய்யப்படுகிறது. யுனானி மருத்துவம் நீண்ட பாரம்பரியம் கொண்டது. இந்த மருத்துவ முறைக்கே உரிய வகையில் தனக்கே உரியவையில் அறுவை சிகிச்சை மற்றும் கருவிகள் மறறும் தொழிநுட்பங்கள் கொண்டு உள்ளனர். தற்போதைய காலத்தில் சிறிய பிரச்சனைகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் யுனானி மருத்துவ கட்டுபாடு

1940ம் ஆண்டு இந்தியாவில் உற்பத்தியாகிற யுனானி மருந்தக அரசு சட்டம் கொண்டு வந்தது. அதனுடைய விதிகள் சமயத்துக்கேற்றாற் போல் திருத்தம் செய்து வருகின்றனர் இந்த சட்டத்தின்படி தொழில்நுட்ப ஆலோசனை கமிட்டி அரசாங்கத்தால் நியமிக்கபட்டுள்ளது. மருந்து கலந்தாய்வு குழு ஓன்று உள்ளது. இந்த குழு பொதுவாக மாநில அரசுகள், வாரியங்கள் போதிய ஆலோசனை வழங்கி வருகிறது. இந்தியாவில் உடல் நலம் அமைச்சகம் மற்றும் குடும்ப நலம் அமைச்சகம் யுனானி பார்மா காப்பியா குழு யுனானி உற்பத்தி மருந் துகள், ஒழுங்குபடுத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு யுனானி மருத்துவம் மட்டுமல்லாமல், வேதியல், தாவரவியல் மருந்தாளுமை போன்ற துறைகளிலும் தமது பனியை செய்து வருகிறது.

யுனானி மருந்திருப்பு குழு

தேசிய அளவிலான யுனானி மருந்தின் குணங்களும் செய்யும் முறைகளையும் விளக்கும் நூல் குறிப்பிடும் முறைகளைக்கொன்டே மருந்துகளின் தரத்தினை உறுதிப்படுத்துதல், ஆயிவின் அடிப்படைகளையும் நிர்னயம் செய்வர்.

தேசிய அளவிலான யுனானி மருந்தின் குணங்களும் செய்யும் முறைகளையும் விளக்கும் நூல் மொத்தமாக 1091 சூத்திரங்களையும், ஆறு தொகுதிகளாக மொத்த்ம் 298 கட்டூரைகளைக்கொண்டுள்ளது. இதன் இரன்டாம் பதிப்பின் முதல் தொகுதிகள் 50 கூட்டு சூத்திரங்களை வெளியிட்டுள்ளது.

மருந்து தர ஆய்வுக்கூடம்

இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு ஆய்வகம்(PLIM) ஹாசியாபத்தில் உள்ளது. இந்திய மருத்துவ முறையானது ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஆகியவற்றின் மருந்துகளின் தரத்தினை ஆய்வு செய்யும் தரக்கட்டுப்பாடு ஆய்வகமாகும். இது 1970 ல் துவங்கப்பட்டது. இது இந்திய அளவிலான மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940 ன் கீழ் செயல்படுகிறது. ஆயுர்வேதம், சித்தா, யுனானி இவற்றின் மருந்தின் தரத்தினை அந்தந்த ஆய்வுக்குழுவின் ஆய்வு அங்கீகாரத்திற்கு பிறகே பயன்பாட்டிற்கு விடப்படுகிறது.

யுனானி ஆராய்ச்சி

மாலி உல் மூல்க் ஹக்கீம் அஜ்மல்கான் என்பவர் 1920 களில் முதல் முறையாக யுனானி மருத்துவத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும். என்ற கருத்தினை முன் மொழிந்தார். அவரது ஆர்வம் மற்றும் ஈடுபாட்டினால் டாக்டர். சலீம் முசாமான் சித்திக் டில்லியில் உள்ள டிபியா ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவ கல்லூரியில் தமது ஆராய்ச்சியை துவங்கினார்

 • இவர் தமது நீண்ட கால ஆராய்ச்சியின் முடிவாக, அஸ்ரால் என்ற மூலிகை நரம்பு, நரம்பு கோளாறு, தூக்கமின்மைகளுக்கு நல்ல பலன் அளிப்பதை கண்டறிந்தார். இந்த ஆராய்ச்சியின் முடிவு உலகம் முழுவதும் பரவியது.
 • அவரது ஆராய்ச்சியானது யுனானியுடன் மட்டுமல்லாது இந்திய மருத்துவமுறையில் ஆராய்ச்சியை கொண்டு சென்றார். அதன் பயனாக 1969 ல் இந்திய அரசின் ஆதரவுடன் மத்திய குழு அமைக்கப்பட்டது.
 • இந்த குழு 10 ஆண்டுகளாக சிறப்பு கவனம் செலுத்தி யுனானி முறையினை ஆராய்ச்சி செய்தது. 1978 ல் இந்த குழுவினை, நான்கு ஆராய்ச்சி குழுவாக பிரித்தனர். அவை முறையே ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகும்.
மத்திய யுனானி மருந்து ஆராய்ச்சி நிறுவனம்

மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் 1979 ல் இருந்து தன்னாட்சி அமைப்பாக , உடல் நலம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகின்றது.

யுனானி மருத்துவமனைகள்

 • யுனானி மருத்துவ முறை மக்கள் மத்தியில் பிரபலமானதாக உள்ளது. இந்த யுனானி மருத்துவத்தை கையாளும் மருத்துவர்கள் நாடு முழுவதும் பரவலாக உள்ளனர். பதிவு செய்த யுனானி மருத்துவர்கள் இந்திய அளவில் 47963 பேர்கள் உள்ளனர்
 • நாட்டில் 15 மாநிலங்களில் 263 மருத்துவமனைகள் 4686 படுக்கை வசதிகளுடன் இயங்கி வருகிறது.
 • 20 மாநிலங்களில் 1028 யுனானி மருந்தகங்கள் உள்ளது. அதில் ஆந்திரத்தில் 2, மேற்கு வங்கம், கர்நாடகம், இவற்றில் தலா ஒன்றும் டில்லியில் 5 ம் உட்பட மத்திய அரசின் உடல் நலம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.
யுனானி மருத்துவ கல்வி

யுனானி மருத்துவ கல்வி, பயிற்சி, யுனானி மருந்துகள் யாவும் இந்திய மருத்துவ மத்திய கவுன்சிலின் கட்டுப்பாட்டின் கீழ இயங்கி வருகிறது. இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று 1970 சட்டபடி பதிவு செய்யப்பட்டு இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கம் வகுக்கிறது. தற்போது இந்திய அளவில் 40 யுனானி மருத்துவ கல்லூரிகள் யுனானி மருத்துவ கல்வியை அளித்து வருகிறது. ஆண்டிற்கு 1770 யுனானி இளநிலை பட்டதாரிகளை தயார்படுத்தும் தகுதியை கொண்டுள்ளது. இந்த யுனானி மருத்துவ கல்லூரிகள் தன்னாட்சி பெற்றதாகவும் அரசு கல்லூரியாகவும் இயங்கி வருகிறது. இந்த மருத்துவ கல்லூரிகல், பல பல்கலைகழகத்துடன் இணைந்திருந்தாலும் மத்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைக்கும் பாடத்திட்டத்தை கடைபிடிக்கிறார்கள் யுனானி முறை கல்வியானது ஆறு பிரிவுகளைக்கொண்டுள்ளது . மருந்தியல், மருத்துவம், பொதுவினை அடிப்படை , ஹைஜீன் , அறுவைசிகிச்சை கைனகாலேஜி ஆகும். இந்த முதுகலி கல்வியல் 79 மாணவர்கள் மட்டுமே சேர்க்ககூடிய அனுமதி பெற்றதாகும்.

தேசிய யுனானி மருத்துவ மையம், பெங்களுரு

தேசிய யுனானி மருத்துவ நிறுவனம். இது சங்க பதிவு சட்டப்படி நவம்பர் 19, 1984 ல் பதிவு செய்யபட்டதாகும். யுனானி மருத்துவ முறையினை வளர்க்கவும், பரப்பவும் நோக்கமாக கொண்டு துவங்கப்பட்டதாகும். இதனை இந்திய அரசு மற்றும் கர்நாடக அரசின் கூட்டு முயற்சியில் இயங்குவதாகும். இந்த அமைப்பு பெங்களூர் ராஜீவ்காந்தி நல அறிவியல் பல்கலைகழக்த்தின் இணைப்பை பெற்றதாகும்.

Filed under:
2.94505494505
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top